நீங்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் 2 அட்டகாசமான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனத்தின் கேயூவி100 மற்றும் எக்ஸ்யூவி300 எஸ்யூவிகளின் மின்சார மாடல் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற விபரம் வெளியாகி இருக்கிறது.

 2 அட்டகாசமான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஹிந்திரா!

மின்சார கார்களுக்கான சந்தை மெல்ல வலுவடைந்து வருகிறது. இதனால், இந்த சந்தையில் பல புதிய மாடல்களின் வரவும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான கார் நிறுவனங்கள் விரைந்து இந்த சந்தையில் புதிய மாடல்களை களமிறக்கிவிடும் முனைப்பில் இருந்து வருகின்றன.

 2 அட்டகாசமான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஹிந்திரா!

அந்த வகையில், இந்த சந்தையில் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் மஹிந்திரா விரைவில் புதிய மின்சார மாடல்களை களமிறக்கும் திட்டத்துடன் செயலாற்றி வருகிறது.

 2 அட்டகாசமான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஹிந்திரா!

அதன்படி, கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கேயூவி100 மற்றும் எக்ஸ்யூவி300 எஸ்யூவிகளின் மின்சார மாடல்களை அறிமுகம் செய்யும் திட்டங்களை தீவிரப்படுத்தி இருக்கிறது. அண்மையில் கேயூவி100 மின்சார மாடல் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது குறித்த பிரத்யேக படங்களை நாம் வெளியிட்டு இருந்தோம்.

 2 அட்டகாசமான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஹிந்திரா!

இந்த நிலையில், எலெக்ட்ரிக் கேயூவி100 மற்றும் எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி300 ஆகிய இரண்டு மாடல்களும் வரும் 2022ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கார்வாலே தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. இந்த மாடல்கள் eKUV100 மற்றும் eXUV300 என்ற பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன.

 2 அட்டகாசமான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஹிந்திரா!

இதில், எலெக்ட்ரிக் கேயூவி100 எஸ்யூவியின் விலை ரூ.8.25 லட்சமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், விற்பனைக்கு வரும்போது புதிய விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், ரூ.10 லட்சத்திற்குள் இருக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

 2 அட்டகாசமான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஹிந்திரா!

இந்த மாடலில் 15.9kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 147 கிமீ தூரம் பயணிக்க முடியும். இதன் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 55 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

 2 அட்டகாசமான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஹிந்திரா!

அடுத்து எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் அதிக திறன் வாய்ந்த 40kWh பேட்டரி மற்றும் மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

 2 அட்டகாசமான எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குகிறது மஹிந்திரா!

இந்த இரண்டு மாடல்களும் மின்சார கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். அத்துடன், எஸ்யூவி மாடல்கள் என்பதும் இதன் மிகப்பெரிய சாதக விஷயங்களாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 8, 2021, 10:25 [IST]
English summary
Mahindra is planning to launch eKUV100 and eXUV300 in India by next year.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+