ஜப்பானிய இசுஸு பிக்அப் ட்ரக் Vs இந்திய மஹிந்திரா தார்...!! அனல்பறந்த இழுபறி போட்டி..!

ஜப்பானிய இசுஸு வி-க்ராஸ் பிக்அப் ட்ரக்கிற்கும், இந்திய மஹிந்திரா தார் வாகனத்திற்கும் இடையே இழு-பறி போட்டி நடத்தப்பட்டுள்ளது. மிகவும் சுவாரஸ்யமாக நடந்த இந்த போட்டியினை குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானிய இசுஸு பிக்அப் ட்ரக் Vs இந்திய மஹிந்திரா தார்...!! அனல்பறந்த இழுபறி போட்டி..!

டக்-ஆஃப்-வார் எனப்படும் இழு-பறி போட்டிகள் இரு வாகனங்களுக்கு இடையே நடத்தப்படுவதை சிலர் நேரிலோ அல்லது குறைந்தது வீடியோவிலாவது பார்த்திருப்பீர்கள். அவ்வாறான போட்டி தான் புதிய தலைமுறை மஹிந்திரா தாருக்கும், இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸுக்கும் இடையே நடத்தப்பட்டுள்ளது.

Image Courtesy: AutoWheels India - Cars & RoadTrips

ஆட்டோவீல்ஸ் இந்தியா- கார்ஸ் & ரோட் ட்ரிப்ஸ் என்கிற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், இசுஸு பிக்அப் ட்ரக் வாகனம் இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியுள்ளதை பார்க்கலாம்.

ஜப்பானிய இசுஸு பிக்அப் ட்ரக் Vs இந்திய மஹிந்திரா தார்...!! அனல்பறந்த இழுபறி போட்டி..!

ஏனெனில் துவக்கத்திலேயே மஹிந்திரா தாரை சில அடி தூரத்திற்கு வி-க்ராஸ் இழுத்துவிட்டது. அதன்பின் மஹிந்திரா தாருக்கு வாய்ப்பை வழங்கிய வி-க்ராஸ் ஓட்டுனர், தாரை தன்பக்கம் இழுக்காமல் அந்த வாகனம் தனது வாகனத்தை இழுக்க முயற்சிக்கட்டும் என விட்டுவிட்டார்.

அதனை தொடர்ந்து வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வி-க்ராஸை இழுக்க முயற்சித்த தாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வி-க்ராஸ் ஒரு அடி கூட நகரவில்லை. இழுத்த தார் வாகனம் தான் அங்கும் இங்கும் அலைந்தது. அதன்பின் மீண்டும் இசுஸு வாகனம் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.

ஜப்பானிய இசுஸு பிக்அப் ட்ரக் Vs இந்திய மஹிந்திரா தார்...!! அனல்பறந்த இழுபறி போட்டி..!

இம்முறை சில அடி தூரம் இல்லை, சில மீட்டர் தொலைவிற்கு மஹிந்திரா தாரை வி-க்ராஸ் இழுந்து சென்றுவிட்டது. தாரை இயக்கியவரால் வி-க்ராஸை இழுக்க முடியவில்லை, அது ஒருபக்கம் இருக்க, இழுக்கப்படுவதை தடுக்கவே அவரால் முடியவில்லை.

இதனால் இந்த இழு-பறி போட்டியில் இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனம் தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் புதிய தலைமுறை தார் முழுக்க முழுக்க புதியதாக உள்ளது. எந்த அளவிற்கு என்றால், மஹிந்திரா நிறுவனம் வழங்கிய டயர்கள் கூட அப்படியே உள்ளன.

ஜப்பானிய இசுஸு பிக்அப் ட்ரக் Vs இந்திய மஹிந்திரா தார்...!! அனல்பறந்த இழுபறி போட்டி..!

இதனால் கடந்த சில வாரங்களில் தான் இந்த மஹிந்திரா வாகனம் டெலிவிரி எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இசுஸு வி-க்ராஸ் லிஃப்ட் தொகுப்பு, சந்தைக்கு பிறகான ரிம்கள், டயர்கள் உள்ளிட்டவற்றுடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி இந்த இசுஸு வாகனத்தில் ஏகப்பட்டவை புதியதாக பொருத்தப்பட்டிருக்கலாம்.

இந்த வீடியோவில் பின்பக்கமாக இந்த வாகனம் திரும்பியிருப்பதால் மற்றவற்றை பார்க்க முடியவில்லை. பொதுவாகவே மாடிஃபை செய்யப்பட்ட வாகனம் என்றால், அதேபோல் மாடிஃபை செய்யப்பட்ட மற்றொரு வாகனத்துடன் தான் இழு-பறி போட்டியினை நடத்துவார்கள்.

ஜப்பானிய இசுஸு பிக்அப் ட்ரக் Vs இந்திய மஹிந்திரா தார்...!! அனல்பறந்த இழுபறி போட்டி..!

ஆனால் உண்மையில் மாடிஃபை செய்யப்படாவிட்டாலும், இந்த போட்டியில் இசுஸு வாகனம் தான் வெற்றியடைந்திருக்கும். ஏனெனில் வி-க்ராஸின் எடை கிட்டத்தட்ட 2 டன் ஆகும். ஆனால் மஹிந்திரா தார் எடை இதனை காட்டிலும் 300 கிலோ குறைவானது. இத்தகைய எடை வேறுபாடே போட்டியை முழுவதுமாக இசுஸு வாகனத்தின் பக்கம் கொண்டு சென்றுள்ளது.

இந்த குறிப்பிட்ட மஹிந்திரா தார் 2.2 லிட்டர் என்ஹாவ்க் டீசல் என்ஜினை கொண்டதாக உள்ளது. தாரின் அனைத்து வேரியண்ட்களிலும் 4x4 மற்றும் குறை-விகித ட்ரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இவை எல்லாம் ஆஃப்-ரோட்டில் தான் உதவியாக இருக்குமே தவிர்த்து, இவ்வாறான போட்டிகளில் இல்லை.

Most Read Articles
English summary
Isuzu V-Cross demolishes the new Mahindra Thar in tug-of-war What went wrong for the Thar [Video].
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X