அட்வென்ச்சர் பயணங்களுக்கு இப்படியொரு வாகனம் தான் தேவை!! வி8 என்ஜின் உடன் மஹிந்திரா தார்!

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டில் தாரின் புதிய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியது. மிரள வைக்கும் ஆஃப் ரோடு திறன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை தார் வாடிக்கையாளர்கள் பலரை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அட்வென்ச்சர் பயணங்களுக்கு இப்படியொரு வாகனம் தான் தேவை!! மாடிஃபை மஹிந்திரா தார்...

அதேநேரம் முந்தைய தலைமுறை தாரை பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர். அத்தகைய பழைய மஹிந்திரா தார் ஒன்றினை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம். இது தொடர்பான வீடியோ ஷ்ரி விலாக்ஸ் என்கிற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

2.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்ஜின் உடன் முந்தைய தார் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் இந்த குறிப்பிட்ட மாடல் மாடிஃபை செய்யப்பட்டது என்பதால் முற்றிலுமாக வேறுப்பட்டு காணப்படுகிறது.

அட்வென்ச்சர் பயணங்களுக்கு இப்படியொரு வாகனம் தான் தேவை!! மாடிஃபை மஹிந்திரா தார்...

மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மாடிஃபை செய்து வழங்கி வந்த தார் டேப்ரேக்(Daybreak) வாகனத்தை போன்று காட்சியளிக்கும் இந்த கஸ்டம் தார் வாகனம், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தார் டேப்ரேக்கை காட்டிலும் அளவில் பெரிய டயர்கள் மற்றும் அதிக உயரத்திற்கு வாகனத்தை தூக்கும் சஸ்பென்ஷன் தொகுப்புகளுடன் மிகவும் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

அட்வென்ச்சர் பயணங்களுக்கு இப்படியொரு வாகனம் தான் தேவை!! மாடிஃபை மஹிந்திரா தார்...

நமக்கு தெரிந்த வரையில் 4ல் இருந்து 6 இன்ச் வரையிலான லிஃப்ட் கிட்-ஐ உரிமையாளர் தனது இந்த கஸ்டம் வாகனத்தில் பொருத்தி இருக்கலாம். வாகனத்தின் முன்பகுதி கஸ்டம் ஹெட்லைட்கள் மற்றும் க்ரில் உடன் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அட்வென்ச்சர் பயணங்களுக்கு இப்படியொரு வாகனம் தான் தேவை!! மாடிஃபை மஹிந்திரா தார்...

செங்குத்தான பரப்புகளின் மீது ஏறுவதற்காக முன் மற்றும் பின்பக்க பம்பர்கள் வாகனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் புதிய தோற்றத்திற்காக கதவுகளின் அளவும் சிறியதாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் வாகனத்தின் சேசிஸும் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு கணிசமாக குறைந்துள்ளது.

அட்வென்ச்சர் பயணங்களுக்கு இப்படியொரு வாகனம் தான் தேவை!! மாடிஃபை மஹிந்திரா தார்...

கேபினில் தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளும் வகையில் மென்மையான லெதரினால் ஆன மேற்கூரை உள்ளது. வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள மற்ற புதிய பாகங்கள் என்று பார்த்தால், ஹூட் ஸ்கூப், பின்பக்கத்தில் சில ஹைட்ராலிக் டேங்குகள் மற்றும் மேற்கூரையில் விளக்குகளை சொல்லலாம்.

அட்வென்ச்சர் பயணங்களுக்கு இப்படியொரு வாகனம் தான் தேவை!! மாடிஃபை மஹிந்திரா தார்...

வாகனத்தின் காற்று சஸ்பென்ஷனுக்காக ஹைட்ராலிக் டேங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இவற்றை டயர்களில் காற்றை நிரப்பவும் பயன்படுத்தலாம். மற்றப்படி வாகனத்தின் தொழிற்நுட்ப அம்சங்களை பற்றி மேலுள்ள வீடியோவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அட்வென்ச்சர் பயணங்களுக்கு இப்படியொரு வாகனம் தான் தேவை!! மாடிஃபை மஹிந்திரா தார்...

ஆனால் நிச்சயம் மஹிந்திரா வழங்கிய பாகங்களுக்கு மாற்றாக பல இயந்திர பாகங்கள் கொண்டுவரப்பட்டிருக்கும். என்ஜின் அமைப்பு கூட மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால் அவை எதுவும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்படாததால், அவற்றை பற்றி விவரிக்க முடியவில்லை.

Most Read Articles
English summary
Mahindra Thar Modified With A V8 Engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X