தார் ஒதுங்கே..! உலக ஃபேமஸ் Jimny காரின் டீசர் வீடியோவை வெளியிட்ட Maruti Suzuki! இந்தியா வருவது உறுதி!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் Jimny காரின் டீசர் வீடியோவை இணையம் வாயிலாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலைக் கீழே காணலாம், வாங்க.

தார் ஒதுங்கே..! உலக ஃபேமஸ் Jimny காரின் டீசர் வீடியோவை வெளியிட்ட Maruti Suzuki! இந்தியா வருவது உறுதி!

உலகளவில் அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் ஜிம்னி எஸ்யூவி காரை மாருதி சுசுகி நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் முன்னோட்டமாக கடந்த ஆண்டு (2020) நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இக்கார் காட்சிப்படுத்தப்பட்டது.

இத்துடன், இந்திய சாலைகளில் வைத்து ஜிம்னி பலபரீட்சைக்கு உட்படுத்தப்பட்டது. ஆகையால், இதன் வருகை மிக விரைவில் அமைந்துவிடும் என இந்திய ஆஃப்-ரோடு வாகன பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ச்சியாக இந்த வாகனத்தின் அறிமுகம் தள்ளிப் போன வண்ணமே இருக்கின்றது.

தார் ஒதுங்கே..! உலக ஃபேமஸ் Jimny காரின் டீசர் வீடியோவை வெளியிட்ட Maruti Suzuki! இந்தியா வருவது உறுதி!

இந்த நிலையில், மாருதி சுசுகி நிறுவனம் அதன் ஜிம்னியின் வருகை மிக விரைவில் அமைய இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் செயலை செய்திருக்கின்றது. அதாவது, நிறுவனம் ஜிம்னி காரின் டீசர் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கின்றது. நெக்ஸா இன்ஸ்டாகிராம் கணக்கு வாயிலாக வீடியோ வெளியிடப்பட்டிருக்கின்றது.

தார் ஒதுங்கே..! உலக ஃபேமஸ் Jimny காரின் டீசர் வீடியோவை வெளியிட்ட Maruti Suzuki! இந்தியா வருவது உறுதி!

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி மாருதி சுசுகி ஜிம்னி 2022ம் ஆண்டில் விற்பனைக்கு வந்துவிடும் என தெரிகின்றது. 3 கதவுகள் கொண்ட ஜிம்னியே முதலில் வரும் என கூறப்படுகின்றது. ஆனால், முன்னதாக ஐந்து கதவுகள் கொண்ட பதிப்பே முதலில் வரும் என கூறப்பட்டது. ஆகையால், இதில் எந்த வெர்ஷன் இந்தியாவில் முதலில் விற்பனைக்கு வரும் என்ற குழப்பம் ஜிம்னி பிரியர்கள் மத்தியில் எழும்பியிருக்கின்றது.

தார் ஒதுங்கே..! உலக ஃபேமஸ் Jimny காரின் டீசர் வீடியோவை வெளியிட்ட Maruti Suzuki! இந்தியா வருவது உறுதி!

அடக்கமான டிசைன், பட்ஜெட் விலை, ஆஃப்-ரோடு தகவமைப்புகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்திலும் இந்த எஸ்யூவி கார் மிக சிறந்த தயாரிப்பாக இருக்கின்றது. ஆகையால், உலகளவில் ஆஃப்-ரோடு கார் பிரியர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதே வரவேற்பை இந்தியாவிலும் ஜிம்னி எஸ்யூவி பெறும் என நம்பப்படுகின்றது.

தார் ஒதுங்கே..! உலக ஃபேமஸ் Jimny காரின் டீசர் வீடியோவை வெளியிட்ட Maruti Suzuki! இந்தியா வருவது உறுதி!

இதனடிப்படையிலேயே இந்த கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. புதிய ஜிம்னி எஸ்யூவி குஜராத் மாநிலத்தில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு வைத்து தயாரிக்கப்படும் ஜிம்னியே கொலம்பியா மற்றும் பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தார் ஒதுங்கே..! உலக ஃபேமஸ் Jimny காரின் டீசர் வீடியோவை வெளியிட்ட Maruti Suzuki! இந்தியா வருவது உறுதி!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஜிம்னி காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே செரீஸ் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றக் கூடியது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றது.

தார் ஒதுங்கே..! உலக ஃபேமஸ் Jimny காரின் டீசர் வீடியோவை வெளியிட்ட Maruti Suzuki! இந்தியா வருவது உறுதி!

இந்தியாவில் மாருதி சுசுகி ஜிம்னி எஸ்யூவி விற்பனைக்கு வரும் எனில் தற்போது விற்பனையில் கொடிக்கட்டிப் பறக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு கடும் போட்டியை வழங்கும். இத்துடன் அண்மையில் அறிமுகமான ஃபோர்ஸ் கூர்காவிற்கும் இது போட்டியாக இருக்கும். மஹிந்திரா தார் எஸ்யூவி தற்போது இந்திய சந்தையில் ஒரு வருடம் என்ற காத்திருப்பு காலத்துடன் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

தார் ஒதுங்கே..! உலக ஃபேமஸ் Jimny காரின் டீசர் வீடியோவை வெளியிட்ட Maruti Suzuki! இந்தியா வருவது உறுதி!

வேரியண்ட் மற்றும் மாநிலம் ஆகியவற்றைப் பொருத்து இந்த காத்திருப்பு காலம் மாறுபட்டு காணப்படுகின்றது. இத்தகைய அமோக வரவேற்பைப் பெற்று வரும் கார் மாடலுக்கே போட்டியை ஏற்படுத்தும் வகையில் மாருதி சுசுகி ஜிம்னி கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வரும் கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Mahindra thar rival maruti suzuki jimny teased via social media
Story first published: Friday, October 15, 2021, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X