செம கெத்து... இந்தியாவின் பாதுகாப்பான காருக்கு மலை போல் குவியும் முன்பதிவு... மாஸ் காட்டும் மஹிந்திரா...

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செம கெத்து... இந்தியாவின் பாதுகாப்பான காருக்கு மலை போல் குவியும் முன்பதிவு... மாஸ் காட்டும் மஹிந்திரா...

மஹிந்திரா நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வு கூட்டம் 2021 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 2020-21ம் நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவியின் முன்பதிவுகள் 90 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது இதில் ஒன்றாகும்.

செம கெத்து... இந்தியாவின் பாதுகாப்பான காருக்கு மலை போல் குவியும் முன்பதிவு... மாஸ் காட்டும் மஹிந்திரா...

அத்துடன் எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு, 2020-21ம் நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றதாகவும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்த முன்பதிவுகளில் சுமார் 48 சதவீத முன்பதிவுகள் இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு கிடைத்துள்ளன.

செம கெத்து... இந்தியாவின் பாதுகாப்பான காருக்கு மலை போல் குவியும் முன்பதிவு... மாஸ் காட்டும் மஹிந்திரா...

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமாகி வருகிறது. இதன் காரணமாக இதன் காத்திருப்பு காலம் 12 வாரங்கள் வரை நீண்டுள்ளது. இந்திய சந்தையில் மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

செம கெத்து... இந்தியாவின் பாதுகாப்பான காருக்கு மலை போல் குவியும் முன்பதிவு... மாஸ் காட்டும் மஹிந்திரா...

போட்டியாளர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவியின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு விற்பனைக்கு கொண்டு வந்தது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரில், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது.

செம கெத்து... இந்தியாவின் பாதுகாப்பான காருக்கு மலை போல் குவியும் முன்பதிவு... மாஸ் காட்டும் மஹிந்திரா...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதுதவிர 1.5 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் தேர்வும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 117 ஹெச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய திறன் வாய்ந்தது.

செம கெத்து... இந்தியாவின் பாதுகாப்பான காருக்கு மலை போல் குவியும் முன்பதிவு... மாஸ் காட்டும் மஹிந்திரா...

இந்த இரண்டு இன்ஜின்கள் உடனும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியிட்டு வருகிறது.

செம கெத்து... இந்தியாவின் பாதுகாப்பான காருக்கு மலை போல் குவியும் முன்பதிவு... மாஸ் காட்டும் மஹிந்திரா...

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களிலேயே மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையை தன்வசம் வைத்திருப்பது மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவிக்கு கூடுதல் பலமாகும். ஆம், குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் சோதனைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

செம கெத்து... இந்தியாவின் பாதுகாப்பான காருக்கு மலை போல் குவியும் முன்பதிவு... மாஸ் காட்டும் மஹிந்திரா...

டாடா நெக்ஸான் மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. ஆனால் புள்ளிகள் அடிப்படையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி முன்னிலை வகிக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 வேகமாக பிரபலமாகி வருவதற்கு இந்த 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல.

Most Read Articles

English summary
Mahindra XUV300 Compact-SUV Bookings Increase By 90 Per cent. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X