Just In
- 5 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 7 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆட்டோஷிப்ட், கனெக்டட் தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம்!
ஆட்டோஷிப்ட், கனெக்டட் தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனம் மிகவும் பிரபலமான எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரை, பெட்ரோல்-ஆட்டோஷிப்ட் (AutoSHIFT) தேர்வுடன் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஆட்டோஷிப்ட் என்பது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பமாகும். புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல்-ஆட்டோஷிப்ட், டாப் மாடலான W8(O) வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

இதன் விலை 9.95 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி, எக்ஸ் ஷோரூம் விலையாகும். எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட் தற்போது சிகப்பு மற்றும் அக்வாமரைன் ஆகிய 2 ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகளுடனும் வந்துள்ளது. அதே சமயம் விலை குறைந்த வேரியண்ட்கள் தற்போது புதிய கேலக்ஸி க்ரே வண்ண தேர்வை பெற்றுள்ளன.

ஆட்டோஷிப்ட் மற்றும் புதிய வண்ண தேர்வுகளுடன், W8(O) வேரியண்ட்டில் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் 'ப்ளூசென்ஸ் ப்ளஸ்' கனெக்டட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். மஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாளர்களை இன்னும் வலுவாக எதிர்கொள்வதற்கு இந்த புதிய வசதிகள் உதவி செய்யும்.

டாப் வேரியண்ட்டில் ஆட்டோஷிப்ட் டிரான்ஸ்மிஷன் மற்றும் 'ப்ளூசென்ஸ் ப்ளஸ்' கனெக்டட் தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிமுகம் செய்திருக்கும் அதே நேரத்தில், நடுத்தர வரிசை வேரியண்ட்களில் மற்றொரு வசதியை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் W6 மற்றும் அதற்கும் மேற்பட்ட வேரியண்ட்களில் தற்போது எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் சன்ரூஃப் உடன் கூடிய புதிய W6 வேரியண்ட், 9.40 லட்ச ரூபாய் என்ற விலையில் கிடைக்கும். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். மேலே குறிப்பிட்ட வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தவிர, 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி300 இயந்திர ரீதியாக மாற்றம் செய்யப்படாமல் அப்படியே தொடர்கிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளுடனும், அதே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடனும் தொடர்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 108 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது புதிய ஆட்டோஷிப்ட் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கும். இதுதவிர இந்த காரில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. அதே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கும். சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் சமீப காலமாக போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. புதிய வரவுகளான கியா சொனெட் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த போட்டியை சமாளிக்க இந்த புதிய வசதிகளும், தொழில்நுட்பங்களும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு உதவும். மேற்கண்ட 2 மாடல்கள் தவிர, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுடனும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியிடும்.