ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

2021 மஹிந்திரா எக்ஸ்யூவி300 சோதனை கார் ஒன்றின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

கடந்த 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் ஏகப்பட்ட தயாரிப்பு வாகனங்களை காட்சிப்படுத்தி இருந்தது. இதில் சப்காம்பெக்ட் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி300-இன் செயல்திறன்-சார்ந்த ஸ்போர்டியர் வெர்சனும் ஒன்றாக இருந்தது.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் காரின் அறிமுகத்தை கடந்த ஆண்டில் எதிர்பார்த்தோம். ஆனால் கொரோனா வைரஸ் பரவலினால் இதன் அறிமுகம் தள்ளி போனது. இந்த நிலையில் தற்போது சென்னைக்கு அருகே மஹிந்திரா எக்ஸ்யூவி கார் ஒன்று ஆங்காங்கே மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

இது தொடர்பான ஸ்பை படங்கள் ஒய்டி_டேல்ஸ்ஆஃப்மைல்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. கார் முழுவதுமாக மறைக்கப்படாமல் ஆங்காங்கே சில பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளதால் காரின் வெளிப்புற பாகங்கள் பெரும்பான்மையானவற்றை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது தான் நமக்கு இது எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் மொத்த தோற்றத்தில் வழக்கமான எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி காருக்கும் அதன் ஸ்போர்ட்ஸ் வெர்சனுக்கும் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

சில காஸ்மெட்டிக் வேறுபாடுகள் மட்டுமே காரை சுற்றிலும் வழங்கப்பட்டு இருந்தன. இந்த ஸ்போர்ட்ஸ் வெர்சனில் முக்கிய அம்சமாக காரின் இரு பக்கங்களிலும் கதவுகளின் மீது கருப்பு & சிவப்பு நிறங்களில் கிராஃபிக்ஸ் ஸ்போர்டியரான தோற்றத்திற்காக வழங்கப்படவுள்ளன.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

இதற்கு ஏற்றாற்போல் சக்கரங்களில் ப்ரேக் காலிபர்களிலும் சிவப்பு நிறத்தை எதிர்பார்க்கலாம். அதேநேரம் பில்லர்கள், மேற்கூரை, பக்கவாட்டு பாடி க்ளாடிங், முன்பக்க க்ரில், ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்படவுள்ளன.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

பின்புறத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் ஒருங்கிணைக்கப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்களுடன் பாதி கருப்பு நிறத்திலும், மீதி காரின் நிறத்திலும் கொடுக்கப்படவுள்ளன. அதனால் தான் அவற்றையும் இந்த சோதனை காரில் மறைப்பால் மறைத்துள்ளனர்.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

இவை எல்லாத்தையும் விட காரின் தோற்றத்தை கவர்ச்சியாக காட்டும் விதத்தில் இரு-நிறங்களில் 17 இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்படவுள்ளன. ஆனால் இந்த சோதனை எக்ஸ்யூவி300 கார் கருப்பு நிற அலாய் சக்கரங்களையே கொண்டுள்ளது.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

உட்புற கேபினில் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்களில் எந்த அப்கிரேடும் இருக்க வாய்ப்பில்லை. எக்ஸ்யூவி300-இன் டாப் டபிள்யூ8(O) ட்ரிம்-இன் அடிப்படையில் புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சனும் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் கேபினில் வழங்கப்படும் அனைத்து அம்சங்களையும் இந்த காரிலும் எதிர்பார்க்கலாம்.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

இருப்பினும் வெளிப்புறத்திற்கு ஏற்ப சிவப்பு நிற ஹைலைட்கள் கேபின் முழுக்க ஆங்காங்கே கொடுக்கப்படலாம். எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் காரில் மிக முக்கிய அப்கிரேட் அதன் என்ஜின் அமைப்பில் தான் வழங்கப்படவுள்ளது.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

ஏனெனில் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் ஆற்றல்மிக்க 1.2 லிட்டர் 3-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் ஜிடிஐ எம்ஸ்டாலியோன் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 130 பிஎச்பி மற்றும் 230 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

ஆற்றல்மிக்க காம்பெக்ட் எஸ்யூவி காராக மாறும் மஹிந்திரா எக்ஸ்யூவி300!! சும்மா தாறுமாறான தோற்றத்தில் தயாராகிறது..

இந்த என்ஜினை பெறுவதன் மூலமாக இந்திய சப்-காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் ஆற்றல்மிக்க கார் மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் விளங்கவுள்ளது. இந்த என்ஜின் உடன் பிரத்யேகமான 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. இவற்றுடன் பயண சவுகரியத்தை மேம்படுத்துவதற்காக எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் காரின் சஸ்பென்ஷன் அமைப்பும் சிறிது திருத்தியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரிலும் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஆற்றல்மிக்க என்ஜின் உடன் மஹிந்திராவின் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் வெர்சன் கார் ரூ.12 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஷோரூம்களை வந்தடையலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2021 Mahindra XUV300 Test Mule Spied, Is It The New Turbo Variant? Read In Tamil.
Story first published: Sunday, March 14, 2021, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X