சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் வரும் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தின நாளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டிசைன், எஞ்சின் தேர்வுகள் மற்றும் வசதிகளில் முற்றிலும் புதிய மாடலாக களமிறக்கப்பட உள்ளது.

சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்?

எக்ஸ்யூவி700 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவியானது சொகுசு கார்களுக்கு நிகரான வசதிகளுடன் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்க ஆயத்தமாகி வருகிறது. இந்த சூழலில், இந்த எஸ்யூவி பண்டிகை கால வரவாக உறுதி செய்யப்பட்டாலும், எப்போது சந்தையில் களமிறக்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல் இல்லை.

சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்?

இந்தநிலையில், வரும் ஆகஸ்ட் 15ந் தேதி புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ரஷ்லேன் தள செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்?

எக்ஸ்யூவி500 எஸ்யூவியை விட பரிமாணத்தில் பெரிய கார் மாடலாகவும், அதிக தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கும் எக்ஸ்யூவி700. இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் சில டிசைன் அம்சங்களுடன் பாரம்பரியத்தையும் தக்க வைக்கும்.

சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்?

இந்த எஸ்யூவியில் ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி உள்ளது. மேலும், கண் அயர்ந்து போவதை கண்டறிந்து, ஸ்டீயரிங் வீலில் அதிர்வுகளை ஏற்படுத்தி ஓட்டுனரை விழிப்பாக ஓட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வசதியும் இடம்பெற இருக்கிறது.

சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்?

பனோரமிக் சன்ரூஃப், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், இரவில் சாலை நிலைக்கு தக்கவாறு அதிக பிரகாசத்தை பாய்ச்சும் தொழில்நுட்பம் கொண்ட ஹெட்லைட்டுகள், பார்க் அசிஸ்ட் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற இருக்கின்றன.

சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்?

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். பெட்ரோல் எஞ்சின் 200 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 185 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். பேடில் ஷிஃப்ட் வசதியும் ஆட்டோமேட்டிக் மாடலில் இடம்பெறும்.

சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்?

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் அதிக பிரிமீயம் வசதிகள் கொடுக்கப்பட உள்ளதுடன், பரிமாணத்திலும் பெரிய கார் மாடலாக வருவதால், விலையும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரூ.17 லட்சம் ஆரம்ப விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு வருகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்?

எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மிகவும் வெற்றிகரமான மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகரித்துள்ள போட்டியை மனதில் வைத்து, எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு மாற்றாக புத்தம் புதிய எஸ்யூவியை மஹிந்திரா மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to reports, Mahindra is planning to launch the new SUV on August 15, Indian Independence day. The company is yet to confirm the launch date officially.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X