சென்னை சாலையில் உலாவந்த மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள்!! ஸ்பை படங்களில் சிக்கின!

மஹிந்திராவின் எக்ஸ்யூவி500 காருடன், எக்ஸ்யூவி700 கார் இரட்டை-நிற அலாய் சக்கரங்களுடன் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சென்னை சாலையில் காட்சியளித்துள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னை சாலையில் உலாவந்த மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள்!! ஸ்பை படங்களில் சிக்கின!

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 கார் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக பொது சாலையில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஸ்பை படங்கள் பலமுறை நமக்கு கிடைத்துள்ளன.

சென்னை சாலையில் உலாவந்த மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள்!! ஸ்பை படங்களில் சிக்கின!

இதற்கிடையில் புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரின் பெயரை சில காரணங்களினால் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 என மாற்றவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதேநேரம் மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரும் தொடர்ந்து விற்பனை செய்யப்படவுள்ளது.

சென்னை சாலையில் உலாவந்த மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள்!! ஸ்பை படங்களில் சிக்கின!

இந்த இரு கார்களும் தற்போது சென்னையில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுகுறித்து ரஷ்லேன் செய்திதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களில் இரு சோதனை மஹிந்திரா கார்கள் சிவப்பு நிற நம்பர் ப்ளேட் உடன் உள்ளன.

சென்னை சாலையில் உலாவந்த மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள்!! ஸ்பை படங்களில் சிக்கின!

இதில் இருந்து இந்த எஸ்யூவி கார்கள் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. அதேநேரம் இந்த இரு கார்களில் எக்ஸ்யூவி700 மட்டுமே முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலையில் உலாவந்த மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள்!! ஸ்பை படங்களில் சிக்கின!

ஆனால் எக்ஸ்யூவி500 மறைப்பு எதுவும் இல்லாமல் தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் காட்சியளிக்கிறது. எக்ஸ்யூவி500 வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சாலையில் உலாவந்த மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள்!! ஸ்பை படங்களில் சிக்கின!

ஒன்று மறைக்கப்படாமல் உள்ளதால், இரண்டு கார்களுக்கு இடையேயான தோற்ற வித்தியாசத்தை நம்மால் வேறுப்படுத்தி பார்க்க முடிகிறது. எக்ஸ்யூவி700 சோதனை காரில் மேற்கூரை பின்பக்கத்தில் சற்று கூடுதல் சாய்வாக காட்சியளிக்கிறது.

சென்னை சாலையில் உலாவந்த மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள்!! ஸ்பை படங்களில் சிக்கின!

அதேபோல் மூன்றாம் ஜன்னல் கண்ணாடி எக்ஸ்யூவி700 காரில் சற்று சிறியதாக உள்ளது. எக்ஸ்யூவி500 காரில் சிங்கிள்-பேன் எலக்ட்ரிக் சன்ரூஃப்-உம், எக்ஸ்யூவி700 காரில் பெரிய பனோராமிக் சன்ரூஃப்-உம் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை சாலையில் உலாவந்த மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள்!! ஸ்பை படங்களில் சிக்கின!

அதேபோல் உட்புற கேபினும் முன்பக்க காக்பிட் மற்றும் மைய கன்சோலில் இரண்டும் வேறுப்படும். ஆனால் வெளிப்புறத்தில் இரண்டு சோதனை காரிலும் கிட்டத்தட்ட ஒரே டிசைனிலான டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதை இந்த ஸ்பை படங்களின் மூலம் பார்க்க முடிகிறது.

சென்னை சாலையில் உலாவந்த மஹிந்திராவின் எஸ்யூவி கார்கள்!! ஸ்பை படங்களில் சிக்கின!

சந்தையில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் டர்போ பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படவுள்ளன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV700 Gets Dual Tone Alloys – Spied Testing With XUV500.
Story first published: Saturday, April 24, 2021, 23:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X