நம்பவே முடியல... Mahindra XUV700 காருக்கு அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா? மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு எவ்வளவு முன்பதிவுகள் கிடைத்துள்ளன? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்பவே முடியல... Mahindra XUV700 காருக்கு அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா? மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கார் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). மஹிந்திரா நிறுவனம் வெகு சமீபத்தில்தான் புத்தம் புதிய எக்ஸ்யூவி700 காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

நம்பவே முடியல... Mahindra XUV700 காருக்கு அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா? மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்!

தற்போது வரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பெற்றுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கப்பட்டது. அக்டோபர் 7ம் தேதி முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 1 மணி நேரத்திற்கு உள்ளாக முதல் பேட்ஜில் ஒதுக்கப்பட்ட 25 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களும் புக்கிங் செய்யப்பட்டன.

நம்பவே முடியல... Mahindra XUV700 காருக்கு அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா? மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்!

அதே நேரத்தில் இரண்டாவது பேட்ஜில் ஒதுக்கப்பட்ட மேலும் 25 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்கள் மறுநாள், அதாவது அக்டோபர் 8ம் தேதி, வெறும் 2 மணி நேரத்திற்கு உள்ளாக முன்பதிவு செய்யப்பட்டன. ஆக மொத்தம் வெறும் மூன்று நேரத்திற்கு உள்ளாக 50 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது.

நம்பவே முடியல... Mahindra XUV700 காருக்கு அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா? மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்!

இந்த சூழலில் முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் 14 நாட்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களை புக்கிங் செய்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது? என்பதை இந்த எண்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

நம்பவே முடியல... Mahindra XUV700 காருக்கு அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா? மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்!

முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்யூவி700 கார்களை டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. ஆனால் மஹிந்திரா நிறுவனம் தற்போதைய நிலையில் எக்ஸ்யூவி700 காரின் பெட்ரோல் வேரியண்ட்களை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வருகிறது.

நம்பவே முடியல... Mahindra XUV700 காருக்கு அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா? மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்!

அதே சமயம் எக்ஸ்யூவி700 காரின் டீசல் வேரியண்ட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் நடப்பு நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில்தான் தொடங்கவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

நம்பவே முடியல... Mahindra XUV700 காருக்கு அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா? மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 200 ஹெச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் டீசல் வேரியண்ட்களில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 182 ஹெச்பி பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

நம்பவே முடியல... Mahindra XUV700 காருக்கு அதுக்குள்ள இவ்ளோ புக்கிங்கா? மிரண்டு போன போட்டி நிறுவனங்கள்!

சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த கூடிய இன்ஜின் தேர்வுகள் தவிர பல்வேறு அதிநவீன வசதிகளையும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பெற்றுள்ளது. அத்துடன் இந்த காருக்கு சவாலான விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன.

Most Read Articles

English summary
Mahindra xuv700 suv clocks 70000 bookings check details here
Story first published: Thursday, November 4, 2021, 23:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X