ரொம்ப நாள் காத்திருப்பு நிறைவேற போகுது... சுதந்திர தினத்தில் மஹிந்திரா செய்யப்போகும் தரமான சம்பவம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் அறிமுக தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப நாள் காத்திருப்பு நிறைவேற போகுது... சுதந்திர தினத்தில் மஹிந்திரா செய்யப்போகும் தரமான சம்பவம்!

மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் களமிறக்கவுள்ள மிகப்பெரிய தயாரிப்பு எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், இந்திய சந்தையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி வெளியிட்டுள்ளது.

ரொம்ப நாள் காத்திருப்பு நிறைவேற போகுது... சுதந்திர தினத்தில் மஹிந்திரா செய்யப்போகும் தரமான சம்பவம்!

இது இந்திய சுதந்திர தினம் என்பது கூடுதல் சிறப்பு. ஆனால் இந்த தகவலை மஹிந்திரா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. கடந்த 2020ம் ஆண்டு சுதந்திர தினத்தன்றுதான் புதிய தலைமுறை தார் எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரொம்ப நாள் காத்திருப்பு நிறைவேற போகுது... சுதந்திர தினத்தில் மஹிந்திரா செய்யப்போகும் தரமான சம்பவம்!

அதே பாணியில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மஹிந்திரா நிறுவனம் சமீப காலமாக எக்ஸ்யூவி700 காரின் பல்வேறு வசதிகள் குறித்த தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. ஆனால் அறிமுக தேதி மட்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

ரொம்ப நாள் காத்திருப்பு நிறைவேற போகுது... சுதந்திர தினத்தில் மஹிந்திரா செய்யப்போகும் தரமான சம்பவம்!

ஏற்கனவே விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி500 காரின் பெரிய வெர்ஷனாக எக்ஸ்யூவி700 பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பம், செயல்திறன், வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் எக்ஸ்யூவி700 மேம்பட்டதாக இருக்கும். மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள டீசர் மூலம், எக்ஸ்யூவி700 காரில் ஓட்டுனர் தூங்கினால் கண்டறியும் வசதி இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

ரொம்ப நாள் காத்திருப்பு நிறைவேற போகுது... சுதந்திர தினத்தில் மஹிந்திரா செய்யப்போகும் தரமான சம்பவம்!

கார் ஓட்டும்போது ஓட்டுனரின் நடத்தையை கண்டறிவதற்கு சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டுனர் கண்களை மூடினாலோ அல்லது ஸ்டியரிங் வீலை இயக்க தவறினாலோ, இந்த வசதியின் மூலம் அவர் எச்சரிக்கப்படுவார். ஸ்டியரிங் வீல் 'வைப்ரேட்' ஆவது மற்றும் எச்சரிக்கை ஒலி ஆகியவற்றின் மூலம் ஓட்டுனர் எச்சரிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

ரொம்ப நாள் காத்திருப்பு நிறைவேற போகுது... சுதந்திர தினத்தில் மஹிந்திரா செய்யப்போகும் தரமான சம்பவம்!

அதே சமயம் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில், 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 185 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு இன்ஜின்கள் உடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ரொம்ப நாள் காத்திருப்பு நிறைவேற போகுது... சுதந்திர தினத்தில் மஹிந்திரா செய்யப்போகும் தரமான சம்பவம்!

பேடில் ஷிஃப்டர் வசதி இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் வெளிப்புற டிசைனை பொறுத்தவரை ஒரு சில அம்சங்கள் எக்ஸ்யூவி500 போலவே இருக்கும் என கூறப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை 20 லட்ச ரூபாயாக இருக்கலாம் (எக்ஸ் ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தவுடன், புதிய டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகிய கார்களுடன் போட்டியிடும். இதில், ஹூண்டாய் அல்கஸார் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra XUV700 SUV Launch Expected On August 15: Check Details Here. Read in Tamil
Story first published: Tuesday, July 20, 2021, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X