எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எஸ்யூவி ரக கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700. மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரை இன்று வெளியிட்டது. இதன் மூலம் இந்த எஸ்யூவி கார் பற்றிய பல்வேறு தகவல்கள் நமக்கு தெரியவந்தன. எக்ஸ்யூவி700 பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட சற்று நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத ஆச்சரியம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

ஆம், எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் விலையை மஹிந்திரா நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் 5 சீட்டர் மேனுவல் வேரியண்ட்களுக்கான விலைகளை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

இதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் 5 சீட்டர் மேனுவல் வேரியண்ட்களின் விலை 11.99 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது மிக சவாலான விலை நிர்ணயம் என கருதப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், 5 சீட்டர் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களின் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

இதன்படி மொத்தம் 4 வேரியண்ட்களின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய வேரியண்ட்களின் விலை விரைவில் அறிவிக்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. 4 வேரியண்ட்களுக்கான விலையை அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மற்ற வேரியண்ட்களுக்கான விலை எப்போது அறிவிக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் வாடிக்கையாளர்களிடம் ஒரு சேர ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

இங்கே மற்றொரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார், 7 சீட்டர் வெர்ஷனிலும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கவுள்ளது என்பதுதான் அந்த விஷயம். அத்துடன் இந்த காரின் ஆல் வீல் டிரைவ் வெர்ஷன்களையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார், MX, AX3, AX5 மற்றும் AX7 உள்ளிட்ட வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த காரின் பேஸ் வேரியண்ட் கூட, 7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளே, 8 இன்ச் டச்ஸ்க்ரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, மல்டி-ஃபங்ஷனல் ஸ்டியரிங் வீல் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் உள்பட பல்வேறு வசதிகளுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் விலை உயர்ந்த வேரியண்ட்களில், ட்யூயல் 10.25 இன்ச் டிஸ்ப்ளே ஸ்க்ரீன்கள், அமேஸான் அலெக்ஸா, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, முழு எல்இடி லைட்கள் மற்றும்18 இன்ச் அலாய் வீல்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் MX பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 11.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் MX டீசல் வேரியண்ட்டின் விலை 12.49 லட்ச ரூபாய் ஆகவும், AX3 பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 13.99 லட்ச ரூபாய் ஆகவும், AX5 பெட்ரோல் வேரியண்ட்டின் விலை 14.99 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின், 5 சீட்டர் மேனுவல் வேரியண்ட்களின் விலை பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

Mahindra XUV700 Price
MX Petrol ₹11.99 Lakh
MX Diesel ₹12.49 Lakh
AX3 Petrol ₹13.99 Lakh
AX5 Petrol ₹14.99 Lakh
எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் புதிய டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி700 போட்டியிடவுள்ளது. இதுதவிர புதிய தலைமுறை ஸ்கார்பியோ எஸ்யூவி காரையும் மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை திடீரென அறிவிப்பு... எவ்ளோனு தெரியுமா?

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த புதிய தலைமுறை தார் எஸ்யூவி காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்யூவி700 எஸ்யூவி காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Mahindra xuv700 suv launched in india price details
Story first published: Saturday, August 14, 2021, 22:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X