ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

வரும் ஆகஸ்ட் 14ம் தேதி மஹிந்திரா நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 மிகவும் முக்கியமானது. இந்த காரில் இடம்பெற்றுள்ள வசதிகளை மஹிந்திரா தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த கார் எப்போது பொது பார்வைக்கு கொண்டு வரப்படும்? எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருந்து வந்தது.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

இதில், இந்த கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மஹிந்திரா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 4 மணிக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த காரை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் மத்தியில் இந்த தகவல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

இது தொடர்பான வீடியோ மஹிந்திரா நிறுவனத்தின் யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700, புத்தம் புதிய எஸ்யூவி கார் ஆகும். W601 பிளாட்பார்ம் அடிப்படையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரில், C வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

அத்துடன் எல்இடி டெயில்லேம்ப்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரைதான் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பரிசாக வழங்கவுள்ளதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் சமூக வலை தளங்களில் அறிவித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் பலருக்கு மஹிந்திரா நிறுவனம் தொடர்ச்சியாக தனது நிறுவனத்தின் கார்களை பரிசாக வழங்கி வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அசத்திய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கூட ஆனந்த் மஹிந்திரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்களை பரிசாக வழங்கியிருந்தார்.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

இந்த வரிசையில் டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவிற்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பரிசாக வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார், பெரிய பனரோமிக் சன்ரூஃப் வசதியுடன் வரவுள்ளது. மஹிந்திரா நிறுவனம் இதனை ஸ்கைரூஃப் என அழைக்கிறது.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இந்திய சந்தையில் முன்பே அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த காரை மஹிந்திரா நிறுவனம் சாலை சோதனைகளுக்கு ஈடுபடுத்தியபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகியுள்ளன. ஆனால் செமி கண்டக்டர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் அறிமுகம் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே வந்தது.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

எனினும் ஒரு வழியாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் அறிமுக தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகள் உடனும் எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

இதன்படி 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வும், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ளன. இதில், பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 200 பிஎஸ் பவரையும், டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 185 பிஎஸ் பவரையும் உருவாக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

எனவே போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 சக்தி வாய்ந்த காராக இருக்கும். ஆனால் இந்த இன்ஜின்கள் உருவாக்கும் டார்க் அவுட்புட்டை மஹிந்திரா நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் விலை குறைந்த வேரியண்ட்கள் ஃப்ரண்ட் வீல் டிரைவ் கொண்டதாக இருக்கும்.

ரொம்ப நாளா காத்துக்கினு இருக்கோம் வாத்தியாரே... ஆகஸ்ட் 14ம் தேதி தரமான சம்பவம் இருக்கு... என்னனு தெரியுமா?

அதே சமயம் இந்த காரின் விலை உயர்ந்த வேரியண்ட்கள் ஆல் வீல் டிரைவ் தேர்வுடன் வரவுள்ளன. இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் புதிய டாடா சஃபாரி உள்ளிட்ட கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி700 போட்டியிடவுள்ளது. எனவே எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் வருகைக்கு பின் இந்த செக்மெண்ட்டில் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Mahindra xuv700 suv to debut on august 14 check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X