மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால் இடத்தில் தனித்துவமான கார் ஒன்று இருப்பது புகைப்படத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. இவரிடத்தில் இப்படி ஓர் கார் இருக்கிறதா என தற்போது இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர். அப்படி என்ன கார் நடிகர் மோகன்லால் இடத்தில் இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

மலையாள திரையுலகைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் மோகன் லால். இவர் இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆகையால், பல மொழி பேசும் ரசிகர்கள் இவருக்கு உண்டு. நடிகர் மோகன்லாலுக்கு நடிப்பின் மீது இருப்பதைப் போலவே வாகனங்கள் மீதும் அதிகம் மோகம் ஆர்வம் உண்டு.

மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

இதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது கராஜ் (வாகனம் நிறுத்தும் இடம்) இருக்கின்றது. விலையுயர்ந்த சொகுசு கார் முதல் விலைக் குறைவான கார்கள் வரை அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தமாதிரியான சூழ்நிலையில், நடிகர் மோகன்லால் ஓர் தனித்துவமான காருக்கு அருகில் நின்றுக் கொண்டிருப்பதைப் போல ஓர் புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.

மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

இந்த படங்கள் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. நடிகர் மோகன்லால் ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் காருக்கு அருகில் நிற்பதைப் போன்று வெளியாகி இருக்கும் படமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

இந்த கார் ஓர் சிறப்புமிக்க கார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோகன்லால் வாங்கிய முதல் கார் இதுவே ஆகும். எனவேதான் இதனை ஓர் சிறப்புமிக்க வாகனமாக பார்க்கப்படுகின்றது. கேசிடி 4455 (KCT 4455) எனும் பதிவெண்ணைக் கொண்டிருக்கும் இந்த அம்பாஸ்டர் கார் மார்க் 4 ரகமாகும்.

மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

இது 35 வருடங்கள் பழைய வாகனம் என கூறப்படுகின்றது. இருப்பினும், செண்டிமென்ட் காரணமாக அக்காரை தற்போதும் நடிகர் பராமரித்து வருகின்றார். 1986ம் ஆண்டிலேயே மோகன் லால் இந்த மார்க் 4 அம்பாஸ்டர் காரை வாங்கியிருக்கின்றார். அதிக பராமரிப்பு செய்யப்பட்டு வருவதால் தற்போதும் புதுப்பொலிவுடன் அக்கார் காட்சியளிக்கின்றது.

மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

இந்திய வாகன உலகில் மிகப் பெரிய புரட்சியைச் செய்த கார் மாடல்களில் ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் கார் மாடலும் ஒன்று. இந்தியாவின் அரசியல் தலைவர்கள் தொடங்கி பல முன்னணி அரசு ஊழியர்கள் வரை இக்காரை பயன்படுத்தினர். அதிக பாதுகாப்பு மற்றும் உறுதியான உடல் கட்டமைப்பு ஆகியவற்றின் காரணத்தினால் இது அரசியல்வாதிகளின் பிரியமான காராகவே மாறியது குறிப்பிடத்தகுந்தது.

மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

ஆனால், புதுமுக வரவுகள் இதன் மீதான மோகம் இந்தியர்கள் மத்தியில் குறையத் தொடங்கியது. இதுபோன்ற இன்னும் சில காரணங்களால் அம்பாஸ்டர் கார் சந்தையை விட்டு வெளியேறும் நிலை உருவாகியது. இது அரங்கேறி பல ஆண்டுகளாகின்ற நிலையிலும் தற்போதும் அம்பாஸ்டர் கார் இந்திய சாலைகளில் சுற்றி வருவதை நம்மால் காண முடிகின்றது. இது அக்காரின் மிக உயரிய தரத்தை குறிக்கும் வகையில் உள்ளது.

மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

அம்பாஸ்டர் மார்க்4 கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைத்தது. இதில், பெட்ரோலால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட அம்பாஸ்டர் காரையே நடிகர் பயன்படுத்தி வருகின்றார். இது, 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆகும். அதிகபட்சமாக 75 பிஎஸ் மற்றும் 135 என்எம் டார்க்கை இது வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

மோகன் லால் இடத்தில் இந்த கார் மட்டுமில்லைங்க நாம் ஏற்கனவே கூறியதைப் போல இன்னும் பல கார்கள் அவரிடத்தில் இருக்கின்றன. டொயோட்டா லேண்ட் க்ரூஸர், இன்னோவா க்ரிஸ்டா, வெல்ஃபையர் சொகுசு எம்பிவி உள்ளிட்ட கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார். இதில், டொயோட்டா வெல்ஃபையர் சொகுசு காரை வாங்கியதன் வாயிலாக, மலையாள திரையுலகிலேயே அக்காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமைக்குரிய நபராக மோகன்லால் மாறினார்.

மலையாள நடிகர் மோகன்லாலிடம் இப்படி ஒரு காரா?.. ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த புகைப்படம்!

இத்தனை கார்கள் பயன்பாட்டில் இருந்தும் தற்போதும் மோகன் லால் ஹிந்துஸ்தான் அம்பாஸ்டர் காரை பராமரித்து பயன்படுத்தி வருவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. தற்போது வைரலாகிக் கொண்டிருக்கும் படத்தை நடிகரே அவரது முகப்புத்தக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Source: Janam Online

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Malayalam actor mohanlal shared picture with his first car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X