Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 6 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேரளா மேட் லம்போ... வேஸ்டுகளை வைத்தே அட்டகாசமான ஹூராகேன் காரை உருவாக்கிய இளைஞர்... வெற லேவல்!!
சொந்தமாக ஒர்க்ஷாப் இல்லை, தேவையான கருவிகளும் இல்லை, தனித்துவமான திறனால் லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை உருவாக்கிய கேரளத்து இளைஞர். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்மிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லம்போர்கினி. இந்நிறுவனம் தயாரித்து வரும் உலக புகழ்பெற்ற மற்றும் விலையுயர்ந்த காராக ஹூராகேன் சூப்பர் கார் இருக்கின்றது. இக்காரை பிரதிபலிக்கக் கூடிய ஓர் ஹோம்-மேட் காரையே கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் உருவாக்கியிருக்கின்றார்.

அதுவும், பிற வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் வேஸ்ட் பொருட்களைக் கொண்டு அவர் வடிவமைத்திருக்கின்றார். பெரியளவில் எந்தவொரு உபகரணம் இல்லாத நிலையில் மிகவும் வழக்கமான கருவிகளைக் கொண்டே அவர் இந்த காரை உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

எல்லோருக்கும் லம்போர்கினி நிறுவனத்தின் காரை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பது உண்டு. ஆனால், அதன் விலை பல மடங்கு அதிகம் என்பதால் பலருக்கு இக்கார் எட்டாக் கனியாகவே இருக்கின்றது. இந்த நிலையிலேயே தனது சொந்த முயற்சியின் மூலம் மிக சொற்பளவிலான செலவில் தனக்கான லம்போர்கினி காரை தானே வடிவமைத்திருக்கின்றார்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த அனாஸ் என்ற இளைஞரை இக்காரை உருவாக்கியவர் ஆவார். இளைஞரின் அசாத்திய திறன் மற்றும் கார் பற்றிய தகவலை அருண் ஸ்மோகி எனும் யுட்யூப் தளம் வெளியிட்டுள்ளது. பெரியளவிலான உபகரணம் பயன்படுத்தாத காரணத்தினாலும், வேஸ்டுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாலும் லம்போர்கினி ஹூராகேன் முழுமையடையாத நிலையில் காட்சியளிக்கின்றது.

மேலும், மிகச்சிறிய உருவத்திலும் காட்சியளிக்கின்றது. ப்ளெக்ஸ் பேனர்களைப் பயன்படுத்தியே காரின் வெளிப்புற உடற்கூடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலயே இக்காரின் வெளிப்புற தோற்றம் முழுமையடையாத நிலையில் காட்சியளிக்கின்றது.

இளைஞருக்கு சூப்பர் கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகின்றது. சிறு வயதில் ஸ்கேல் கார்களுடன் விளையாடி வந்த இவர், தனது இளம்பருவத்தில் நிஜ காரில் விளையாட நினைத்தே இக்காரை வடிவமைத்திருக்கின்றார். இவர் உருவாக்கியிருக்கும் இக்கார் லம்போர்கினி ஹூராகேன் குட்டியை (குழந்தை)-ப் போன்று காட்சியளிக்கின்றது.

முன்னதாக நாம் கூறியதைப் போன்று இந்த இளைஞரிடத்தில் போதிய கருவிகள் இல்லாத காரணத்தினால் சில பணிகளுக்காக உள்ளூர் ஒர்க்ஷாப் ஒன்றின் உதவியை அவர் நாடியிருக்கின்றார். இதன் மூலமே அலாய் வீல் மற்றும் ஃபிரேம்கள் உள்ளிட்டவற்றை அவர் கட்டமைத்திருக்கின்றார். மாருதி 800 காரின் டயர் மற்றும் ஹீரோ கிளாமர் பைக்கின் எஞ்ஜின் ஆகியவற்றைக் கொண்டே இந்த கூட்டிற்கு உயிர் வழங்கியிருக்கின்றார்.

இதைத்தொடர்ந்து, ஸ்பீடோ மீட்டர், பவர் வின்டோ, மியூசிக் சிஸ்டம், கேமிரா, ரிவர்ஸ் கியர் உள்ளிட்டவற்றை தனித்திறன் மூலம் வெவ்வேறு வாகனங்களிடத்தில் இருந்து பெற்று பொருத்தியிருக்கின்றார். இதில் ஸ்பீடோ மீட்டருக்கு பதிலாக செல்போனைப் பயன்படுத்தியிருப்பது ஆச்சரியத்தின் உச்சம்.
ஆகையால், இந்த வாகனம் பல வாகனங்களின் கலவையாகக் காட்சியளிக்கின்றது. இருப்பினும் இதன் வெளிப்புற தோற்றம் லம்போர்கினி ஹூராகேன் கார் என்பதை வெளிக்காட்ட தவறவில்லை. கேரளாவைச் சேர்ந்த இந்த இளைஞரின் திறன் பார்ப்போரை வியக்க வைக்கின்ற வகையில் இருக்கின்றது. ஆகையால், சமூக வலைதளத்தில் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.