ஜிப்ஸி தோற்றத்திற்கு மாறிய மாருதி 800!! கர்நாடகா சாலையில் உலா வரும் மாடிஃபை கார்!!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிரபலமான 800 மாடல்களின் விற்பனையை இரண்டு வருடங்களுக்கு முன்பே நிறுத்தி விட்டது. விற்பனையில் இருந்த சமயத்தில் அதிகளவில் விற்கப்பட்ட மாருதி காராக இந்த மாடல் விளங்கியது.

ஜிப்ஸி தோற்றத்திற்கு மாறிய மாருதி 800!! கர்நாடகா சாலையில் உலா வரும் மாடிஃபை கார்!!

இதன் காரணமாக மாருதி 800 கார்களை இப்போதும் சாலைகளில் அவ்வப்போது பார்க்க முடிகிறது. அவற்றில் சில 800 கார்கள் மாடிஃபை செய்யப்பட்டவைகளாக கூட உள்ளன.

ஜிப்ஸி தோற்றத்திற்கு மாறிய மாருதி 800!! கர்நாடகா சாலையில் உலா வரும் மாடிஃபை கார்!!

ஆனால் நிச்சயம் நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள மாருதி 800 காரை போல் வேறெந்த காரும் மாடிஃபை செய்யப்பட்டிருக்காது. ஏனெனில் இந்த மாருதி 800 கார் ஜிப்ஸி வாகனங்களின் தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜிப்ஸி தோற்றத்திற்கு மாறிய மாருதி 800!! கர்நாடகா சாலையில் உலா வரும் மாடிஃபை கார்!!

கர்நாடகாவை சேர்ந்த இந்த மாடிஃபை காரின் படங்கள் ஃபேஸ்புக் க்ரூப் ஒன்றின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. மேலும் இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.

படங்களில் பார்ப்பதற்கே பிரம்மிப்பாக உள்ளது, அப்படியென்றால் சாலையில் சென்றால் நிச்சயம் எவர் ஒருவரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஈர்ப்பு விசை இந்த மாடிஃபை 800 காரில் உள்ளது. குறிப்பாக பச்சை நிற பெயிண்ட்.

ஜிப்ஸி தோற்றத்திற்கு மாறிய மாருதி 800!! கர்நாடகா சாலையில் உலா வரும் மாடிஃபை கார்!!

பச்சை நிறத்தில் அவ்வளவாக வாகனங்களை நாம் சாலையில் பார்க்க முடியாது. இவ்வாறான தோற்றத்திற்கு கொண்டுவர மாருதி 800 காரில் என்னென்ன மாடிஃபிகேஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தெரியவில்லை.

வாகனத்தை பெட்டகம் வடிவில் கொண்டுவர முயற்சித்துள்ளனர். ஆனால் வாகனத்தின் தோற்றம் மிகவும் நேர்த்தியாக உள்ளதா என்றால் உறுதியாக ஆம் என கூற முடியவில்லை. ஏனெனில் சில பகுதிகளில் மாடிஃபிகேஷன் பணிகள் அவ்வளவாக பிரமாதமாக இல்லை.

ஜிப்ஸி தோற்றத்திற்கு மாறிய மாருதி 800!! கர்நாடகா சாலையில் உலா வரும் மாடிஃபை கார்!!

இந்த வாகனத்தை பார்க்கும் போது 800ஐ போல் மிக பிரபலமான மாருதி வாகனமாக விளங்கிய ஜிப்ஸி தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் ஜிப்ஸி முற்றிலும் வேறுப்பட்ட ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜிப்ஸி தோற்றத்திற்கு மாறிய மாருதி 800!! கர்நாடகா சாலையில் உலா வரும் மாடிஃபை கார்!!

ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கும் ஏற்ற வாகனமான ஜிப்ஸியின் இரு-கதவு டிசைன் இந்த மாடிஃபை காரில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாருதி ஜிப்ஸியின் எந்தவொரு பாகமும் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஜிப்ஸி தோற்றத்திற்கு மாறிய மாருதி 800!! கர்நாடகா சாலையில் உலா வரும் மாடிஃபை கார்!!

நீரை அனுமதிக்காத துணியால் மேற்கூரையை பெற்றுள்ள இந்த மாடிஃபை வாகனத்தின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் மிகவும் தாழ்வாக கொண்டுவரப்பட்டுள்ளது. மாருதி 800-இன் இரும்பு சக்கரங்களுக்கு மாற்றாக 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

ஜிப்ஸி தோற்றத்திற்கு மாறிய மாருதி 800!! கர்நாடகா சாலையில் உலா வரும் மாடிஃபை கார்!!

இந்த மாடிஃபை 800 வாகனத்தின் உட்புற கேபின் குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்க பெறவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தோமேயானால், இது சட்டத்திற்கு புறமான மாடிஃபை வாகனமாகும். கார்களில் பைக்குகளில் மாடிஃபிகேஷன் மாற்றங்களை கொண்டுவந்துள்ளீர்கள் என்றால், அதற்கு முறையான சான்றிதழை சாலை போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து வாங்க வேண்டும்.

Most Read Articles

English summary
Somebody Has Modified a Humble Maruti 800 Into a Gypsy And It's a Job Well Done, Check Images.
Story first published: Tuesday, April 27, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X