மாருதி ஆல்டோவில் சன்ரூஃப் வசதியா? அதுவும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடனா? ஆச்சரியமளிக்கும் சம்பவம்..!

மாருதி ஆல்டோ காரில் சன்ரூஃப் வசதி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மாருதி ஆல்டோவில் சன்ரூஃப் வசதியா?.. அதுவும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடனா?.. ஆச்சரியமளிக்கும் சம்பவம்!!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோவும் ஒன்று. குறைந்த விலை, மிகக் குறைவான பராமரிப்பு செலவு, அதிக மைலேஜ் மற்றும் அடக்கமான உருவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இக்கார் தற்போதும் இந்தியர்களின் விருப்பமான தேர்வாக இருக்கின்றது.

மாருதி ஆல்டோவில் சன்ரூஃப் வசதியா?.. அதுவும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடனா?.. ஆச்சரியமளிக்கும் சம்பவம்!!

ஆனால், இந்த காரில் நவீன கால வசதிகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், சன்ரூஃப் வசதி ஆல்டோவில் வழங்கப்படாதது அனைவருக்கும் ஏமாற்றமான ஓர் விஷயம் ஆகும். இந்த நிலையில்தான் மாருதி ஆல்டோ காரில் சன்ரூஃப் வசதி இடம் பெற்றிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி ஆல்டோவில் சன்ரூஃப் வசதியா?.. அதுவும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடனா?.. ஆச்சரியமளிக்கும் சம்பவம்!!

அதுவும் அது எலெக்ட்ரானிக் கட்டுப்பாட்டு வசதிக் கொண்ட சன்ரூஃப் என்பது கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலாக அமைந்துள்ளது. எப்படி ஆல்டோ காரில் இந்த அம்சம் என பலர் உறைந்திருக்கும் நிலையில், மாடிஃபிகஷேன் வாயிலாக அனைத்தும் சாத்தியமே என்கின்றார் மாருதி ஆல்டோவின் உரிமையாளர்.

மாருதி ஆல்டோவில் சன்ரூஃப் வசதியா?.. அதுவும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடனா?.. ஆச்சரியமளிக்கும் சம்பவம்!!

ஆமாங்க, மாருதி ஆல்டோவில் பவர் சன்ரூஃப் வசதியினை மாடிஃபிகேஷன் வாயிலாகவே அதன் உரிமையாளர் வழங்கியிருக்கின்றார். பவர் சன்ரூஃப் வசதி பெற்றிருக்கும் ஆல்டோவானது 2012ம் ஆண்டு ஆகும். இதனையே நவீன கால வசதிகள் அடங்கிய வாகனமாக மாற்றியிருக்கின்றார் அதன் உரிமையாளர்.

மாருதி ஆல்டோவில் சன்ரூஃப் வசதியா?.. அதுவும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடனா?.. ஆச்சரியமளிக்கும் சம்பவம்!!

இதுகுறித்த வீடியோவை என்ஜினியர் சிங் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் 2012 மாருதி ஆல்டோ 800 காரில் என்னென்ன நவீன கால அம்சங்கள் மற்றும் வசதிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதுகுறித்த காட்சிகள் அடங்கியிருக்கின்றன.

மாருதி ஆல்டோவில் சன்ரூஃப் வசதியா?.. அதுவும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடனா?.. ஆச்சரியமளிக்கும் சம்பவம்!!

மாருதி சுசுகி ஆல்டோ 800 காரின் முகப்பு பகுதி பேனட் மாற்றப்பட்டிருக்கின்றது. கருப்பு நிறத்திலான பம்பர் மற்றும் பானட் உதடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், முகுப்பு பகுதி மின் விளக்குகளும் மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும், பனி மின் விளக்கு மற்றும் வட்ட வடிவிலான எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவையும் ஆல்டோ 800ல் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மாருதி ஆல்டோவில் சன்ரூஃப் வசதியா?.. அதுவும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடனா?.. ஆச்சரியமளிக்கும் சம்பவம்!!

தொடர்ந்து, காரை கவர்ச்சியாக்கும் பொருட்டு சக்கரம், புதிய கைப்பிடி, காற்று நுழையும் துளைகள், மட்குவார்ட் உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் காரின் வெளிப்புறத்தை கவர்ச்சியாக மாற்றும் நோக்கில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகும்.

மாருதி ஆல்டோவில் சன்ரூஃப் வசதியா?.. அதுவும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் வசதியுடனா?.. ஆச்சரியமளிக்கும் சம்பவம்!!

இதேபோன்று காரின் உட்பகுதியையும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பந்தய கார்களில் இடம்பெற கூடிய ஸ்பேர்கோ ஸ்டியரிங் வீல், ஆம்பிளிஃபையர் மற்றும் சப் ஊஃபர்களுடன் கூடிய ஸ்பீக்கர் இவற்றுடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் ஆல்டோ 800ல் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

Image Courtesy: ENGINEER SINGH

ஆனால் இக்காரின் எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 796சிசி திறன் கொண்ட 3 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்ஜினே இதில் இடம்பெற்றிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 46.3 பிஎச்பி மற்றும் 62 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

Most Read Articles

English summary
Maruti Alto Gets Electric Sunroof: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X