இப்படியும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளலாமா? இத்தன நாள இது தெரியாம போச்சே! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மழை வெள்ளத்தில் இருந்து தனது காரை காப்பாற்ற ஆல்டோ கார் உரிமையாளர் மேற்கொண்ட முயற்சி பலரின் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்து வைரலாகும் வீடியோ குறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இப்படியும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளலாமா? இத்தன நாள இது தெரியாம போச்சே! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மழைக் காலங்களில் பெரு வெள்ளம் ஏற்படுவது இந்தியாவில் ஓர் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால், சில நேரங்களில் வெள்ளமானது காட்டாற்று வெள்ளமாக மாறிவிடுகின்றது. அந்த நேரத்தில் அதன் வழித்தடத்தில் இருக்கும் அனைத்தையுமே அது அடித்து சென்று விடும். அவ்வாறு வீடு, மரம் ஏன் சில நேரங்களில் பெரிய பெரிய உருவம் கொண்ட வாகனங்கள்கூட அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

இப்படியும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளலாமா? இத்தன நாள இது தெரியாம போச்சே! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த மாதிரியான ஓர் சம்பவத்தை தவிர்க்கும் பொருட்டே கார் உரிமையாளர் ஒருவர் தனித்துமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றார். அவர் மேற்கொண்ட நடவடிக்கையே தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. தெலங்கானா மாநிலம், சிர்சில்லா பகுதியைச் சேர்ந்த ஓர் நபரே விநோத செயலுக்கு உரியவர் ஆவார்.

இப்படியும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளலாமா? இத்தன நாள இது தெரியாம போச்சே! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அவரின் பெயர் பற்றிய விபரம் வெளியாகவில்லை. மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றான ஆல்டோவிற்கு சொந்தக்காரரான அவர், தனது காரை பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக ஓர் முற்றிலும் மாறுபட்ட நடவடிக்கையை எடுத்திருக்கின்றார்.

இப்படியும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளலாமா? இத்தன நாள இது தெரியாம போச்சே! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதாவது, குழைந்தைகளுக்கு ஊஞ்சல் கட்டுவதைப் போல காரின் நான்கு பக்கமும் கயிறுகளால் கட்டி, அக்கயிற்றின் மறு முனைகளை தனது வீட்டின் மேல் பகுதியில் இருக்கும் பிள்ளர்களுடன் சேர்த்து கட்டியிருக்கின்றார். இத்துடன், கார் வெள்ளத்தில் அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதன் கீழ் பகுதியையும் கட்டிய அவர் அக்கயிற்றின் மறு முனைகளை தனது வீட்டின் ஜன்னல்களுடன் இணைத்து கட்டியிருக்கின்றார்.

இப்படியும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளலாமா? இத்தன நாள இது தெரியாம போச்சே! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஆல்டோ கார் உரிமையாளரின் இந்த செயல்குறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. பெரும் வெள்ளத்தில் இருந்து காரை காப்பாற்றவே இப்படியொரு யுக்தியை அவர் கையாண்டிருக்கின்றார். இது இணைய வாசிகள் பலரைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.

இப்படியும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளலாமா? இத்தன நாள இது தெரியாம போச்சே! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஆல்டோ காரை சுற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதை நம்மால் காண முடிகின்றது. இந்த பகுதியில் வெள்ள நீர பெருக்கெடுத்து ஓடுவது வழக்கமான ஒன்று என்று கூறப்படுகின்றது. அவ்வாறு மழை நீர் இதற்கு முன்னர் பெருக்கெடுத்து ஓடியபோது பலரின் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. எனவேதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆல்டோ கார் உரிமையாளர் தனது காரை கயிறுகளால் கட்டி பாதுகாத்திருக்கின்றார்.

இப்படியும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளலாமா? இத்தன நாள இது தெரியாம போச்சே! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பொதுவாகன வாகனங்களை திருடர்கள் யாரும் திருடிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக சங்கிலியைக் கொண்டு பிள்ளருடன் சேர்த்து கட்டுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், முற்றிலும் விநோதமாக மழை வெள்ளத்தில் இருந்த காப்பாற்ற பிள்ளர் மற்றும் ஜன்னலுடன் சேர்த்து கட்டுவது இதுவே முதல் முறை என யூகிக்கப்படுகின்றது.

இந்த செயல் கார் அடித்து செல்வதை வேண்டுமானால் தடுக்கும். ஆனால், மழை நீரால் ஏற்படும் பாதிப்பதைத் தடுக்குமா என கேட்டால், தடுக்காது என்பதே எங்களின் பதில் ஆகும். ஆமாங்க, ஒரு வேலை காரையே மூழ்கடிக்கும் அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டால் கார் அடித்து செல்வது வேண்டுமானால் தடுக்கப்படும். ஆனால், மழை நீர் முழுவதுமாக காரை மூழ்கடிக்கும். இதனால் காருக்குள் இருக்கும் பாகங்கள் அனைத்தும் நீரில் மூழ்க நேரிடும். இதன் விளைவாக காருக்குள் இருக்கும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஷார்ட் சர்க்யூட் ஆகும் வாய்ப்பு உருவாகும்.

இப்படியும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளலாமா? இத்தன நாள இது தெரியாம போச்சே! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இதனைத் தவிர்க்க கடும் மழை காலத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்த பின்னர் பேட்டரியின் இணைப்புகளை நீக்க வேண்டும். முனையங்களைத் துண்டிப்பதன் வாயிலாக தேவையற்ற ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். அதேவேலையில், வெள்ளத்திற்கு பின்னர் காரை உடனே ஸ்டார்ட் செய்யக் கூடாது. காருக்குள் புகுந்த நீர் வடியாமல் இருக்கலாம். அந்த நேரத்தில் காரை ஸ்டார்ட் செய்தால் நாம் மேற்கொண்ட பாதுகாப்பு வழிமுறைகள் வீணாகும்.

இப்படியும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ளலாமா? இத்தன நாள இது தெரியாம போச்சே! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஆகையால், எந்தவொரு நடவடிக்கைக்கு முன்னரும் ஒரு முறை மெக்கானிக்கை அணுகிவிடலாம். இது தேவையற்றை தவிர்க்க வழிவகுக்கும். அதேவேலையில், அதிக மழை பொழிவது உணர்ந்தால் பாதுகாப்பான பார்க்கிங் பகுதி அல்லது மேடான பகுதிகளில் பாதுகாப்பான வாகனங்களை நிறுத்துவதன் வாயிலாகவும் தேவையற்ற இடையூறுகளை தவிர்க்க முடியும். அதேவேலையில், அதிக நீரோட்டம் உள்ள பகுதிகளில் கார் திடீரென செயலற்று நின்றுவிட்டால், உடனடியாக காரை விட்டு வெளியேறுவது மிக சிறந்தது. இதுவும், தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maruti alto tied to avoid getting washed by flood
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X