பலேனோவில் ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜினை கொண்டுவர தீவிரம் காட்டும் மாருதி!! மைலேஜ் இவ்வளவு கிடைக்குமா?

சில சோதனை கருவிகளுடன் மாருதி பலேனோ கார் சாலையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. வலிமையான ஹைப்ரீட் என்ஜின் தேர்வை பலேனோவில் கொண்டு வருவதற்காக இந்த சோதனை ஓட்டமா என்ற கேள்விக்கான பதிலை இந்த செய்தியில் பார்ப்போம்.

பலேனோவில் ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜினை கொண்டுவர தீவிரம் காட்டும் மாருதி!! மைலேஜ் இவ்வளவு கிடைக்குமா?

மாசு உமிழ்வு விதிகள் உலகம் முழுவதும் கடுமையாக்கப்பட்டு வருவதால் ஆட்டோமொபைல் துறை மின்மயமாக்கப்பட்ட வாகனங்களின் பக்கம் சாய்ந்து வருகிறது. இந்தியாவில் இந்த மாற்றம் சற்று மெதுவாகவே ஏற்பட்டு வருகிறது.

பலேனோவில் ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜினை கொண்டுவர தீவிரம் காட்டும் மாருதி!! மைலேஜ் இவ்வளவு கிடைக்குமா?

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி எரிபொருள் என்ஜினிற்கு மாற்று என்ஜினை கொண்டுவரும் பணியில் தீவிரமாக உள்ளது. இதன்படி சில மாருதி கார்கள் ஹைப்ரீட் எலக்ட்ரிக் வாகனங்களாக தயாராகி வருகின்றன.

பலேனோவில் ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜினை கொண்டுவர தீவிரம் காட்டும் மாருதி!! மைலேஜ் இவ்வளவு கிடைக்குமா?

இந்த வகையில் மாருதியின் பிரபலமான கார் மாடல்களுள் ஒன்றான பலேனோ விரைவில் ஹைப்ரீட் என்ஜின் தேர்வை பெறவுள்ளதாகவும், அதற்காக தான் இந்த சோதனை ஓட்டம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், பலேனோவின் ஸ்பை படங்கள் இவ்வாறு சோதனை கருவிகளுடன் வெளிவருவது இது முதல்முறையல்ல.

பலேனோவில் ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜினை கொண்டுவர தீவிரம் காட்டும் மாருதி!! மைலேஜ் இவ்வளவு கிடைக்குமா?

காடிவாடி செய்திதளம் மூலம் கிடைத்துள்ள தற்போதைய சோதனை ஓட்டத்தின் ஸ்பை படங்களில் மாருதி பலேனோ கார் வாகன இயக்கவியல் சோதனை கியரை கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இருப்பினும் ஹைப்ரீட் காருக்கான முத்திரை இல்லாமல், வழக்கமான டிடிஐஎஸ் முத்திரை தான் பொருத்தப்பட்டுள்ளது.

பலேனோவில் ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜினை கொண்டுவர தீவிரம் காட்டும் மாருதி!! மைலேஜ் இவ்வளவு கிடைக்குமா?

2020 ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி ஸ்விஃப்ட் ஹைப்ரீட் காரில் வழங்கப்பட்ட ஹைப்ரீட் பவர்ட்ரெயின் தான் இந்த சோதனை பலேனோ காரிலும் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த வகையில் இந்த சோதனை காரில் அதிகப்பட்சமாக 91 பிஎஸ் மற்றும் 118 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் ட்யுல்ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

பலேனோவில் ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜினை கொண்டுவர தீவிரம் காட்டும் மாருதி!! மைலேஜ் இவ்வளவு கிடைக்குமா?

5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் மட்டுமின்றி ஹைப்ரீட் அமைப்பாக 10 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கப்பட்டிருக்கும். இதில் எலக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக 13.5 பிஎஸ் மற்றும் 30 என்எம் டார்க் திறனை வழங்கும். இவற்றுடன் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் சிஸ்டத்தையும் பலேனோ ஹைப்ரீட் காரில் எதிர்பார்க்கலாம்.

பலேனோவில் ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜினை கொண்டுவர தீவிரம் காட்டும் மாருதி!! மைலேஜ் இவ்வளவு கிடைக்குமா?

சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மூலம் 32kmpl மைலேஜை பெறலாம் என ஆட்டோ எக்ஸ்போவின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. இந்திய வாடிக்கையாளர்கள் எப்போதுமே கார்களின் மைலேஜை கவனமாக பார்ப்பர்.

பலேனோவில் ஆற்றல்மிக்க ஹைப்ரீட் என்ஜினை கொண்டுவர தீவிரம் காட்டும் மாருதி!! மைலேஜ் இவ்வளவு கிடைக்குமா?

இதனால் இந்த மைலேஜ் அளவு நிச்சயம் அத்தகையவர்களை வெகுவாக கவரும். பலேனோவில் ஏற்கனவே மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் கூடுதல் தேர்வாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் விலையை காட்டிலும் வலிமையான ஹைப்ரீட் வேரியண்ட்டின் விலை சற்று கூடுதலாகவே நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles

English summary
Maruti Baleno Strong Hybrid Spied Testing Again
Story first published: Friday, February 12, 2021, 23:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X