ஒன்றிய அரசு அதிரடி... கிடுகிடுவென குறைந்த மாருதி ஈகோ ஆம்புலன்ஸின் விலை... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரியுமா?..

மாருதி ஈகோ ஆம்புலன்ஸின் விலை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒன்றிய அரசின் அதிரடியால் கிடுகிடுவென குறைந்த மாருதி ஈகோ ஆம்புலன்ஸின் விலை... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி, அதன் ஈகோ ஆம்புலன்ஸின் விலையை குறைந்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. நிறுவனம் ரூ. 88 ஆயிரம் வரை அதன் விலையைக் குறைத்திருக்கின்றது. இதற்கு ஒன்றிய அரசு அண்மையில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையே காரணம் ஆகும்.

ஒன்றிய அரசின் அதிரடியால் கிடுகிடுவென குறைந்த மாருதி ஈகோ ஆம்புலன்ஸின் விலை... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அண்மையில் ஒன்றிய அரசானது மருத்துவம் சார்ந்த சிலவற்றின் வரியைக் குறைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா வைரஸ் பரவல் தற்போது இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் கொள்முதல் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

ஒன்றிய அரசின் அதிரடியால் கிடுகிடுவென குறைந்த மாருதி ஈகோ ஆம்புலன்ஸின் விலை... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்நிலையில், ஒன்றிய அரசால் விதிக்கப்படும் வரி கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக மாநில அரசுகள் சில புகார் எழுப்பின. இதைத்தொடர்ந்து, அரசு வரி ரத்து அல்லது குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தன. இதன்காரணமாக அண்மையில், மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை விகிதத்தை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமாக குறைத்தது.

ஒன்றிய அரசின் அதிரடியால் கிடுகிடுவென குறைந்த மாருதி ஈகோ ஆம்புலன்ஸின் விலை... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதன்படி ஆம்புலன்ஸ்களுக்கான வரியும் குறைக்கப்பட்டது. முன்னதாக 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 12 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த வரி குறைப்பு நடவடிக்கையை அடுத்து விலை குறைப்பு குறித்த அறிவிப்பை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஒன்றிய அரசின் அதிரடியால் கிடுகிடுவென குறைந்த மாருதி ஈகோ ஆம்புலன்ஸின் விலை... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், மாருதி சுசுகியும் ஈகோ ஆம்புலன்சுக்கான விலை குறைப்பு பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. ரூ. 88 ஆயிரம் வரை மாருதி ஈகோ ஆம்புலன்சின் விலையை நிறுவனம் குறைத்துள்ளது. ஆகையால், மாருதி ஈகோ ஆம்புலன்சின் விலை ரூ. 6,16,875 ஆக மாறியுள்ளது.

ஒன்றிய அரசின் அதிரடியால் கிடுகிடுவென குறைந்த மாருதி ஈகோ ஆம்புலன்ஸின் விலை... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இவ்விலை குறைப்பு நடவடிக்கையால் மலிவு விலை ஆம்புலன்ஸ் மேலும் மிகக் குறைந்த விலைக் கொண்ட ஆம்புலன்ஸாக மாறியிருக்கின்றது. ஜூன் 14ம் தேதி அன்று மாருதி ஈகோ ஆம்புலன்ஸை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கும் இந்த விலைக்குறைப்பு நடவடிக்கைப் பொருந்தும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

ஒன்றிய அரசின் அதிரடியால் கிடுகிடுவென குறைந்த மாருதி ஈகோ ஆம்புலன்ஸின் விலை... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஒன்றிய அரசு கடந்த ஜூன் 14ம் தேதி அன்றே மருத்துவ பொருட்களின் வரி குறைப்புகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அரசின் நடவடிக்கையால் சானிட்டைசர், பல்ஸ் ஆக்சிமீட்டர், பிபாப் (BiPAP) எந்திரம், டெஸ்டிங் கிட் மற்றும் வெப்பநிலை சோதனை செய்யும் கருவி ஆகியவற்றின் வரியையும் அரசு குறைத்திருக்கின்றது.

ஒன்றிய அரசின் அதிரடியால் கிடுகிடுவென குறைந்த மாருதி ஈகோ ஆம்புலன்ஸின் விலை... எவ்ளோ குறைஞ்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த வரி குறைப்பால் அனைத்து மருத்துவ பொருட்களின் விலையும் கணிசமாக குறைந்திருக்கின்றது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

Most Read Articles

English summary
Maruti Eeco Ambulance Price Reduced By Rs. 88,000: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Saturday, June 19, 2021, 15:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X