Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நகர்த்தும் Kia!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா (Maruti Suzuki Ertiga) எம்பிவி ரக கார் மாடலுக்கு போட்டியாக கேரன்ஸ் (Carens) எனும் புதுமுக எம்பிவி ரக காரை நாட்டில் விரைவில் களமிறக்க இருப்பதாக தகவலகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), ஏற்கனவே செல்டோஸ் (Seltos) எஸ்யூவி கார் மாடலின் வாயிலாக மாருதி சுசுகியின் விட்டாரா ப்ரெஸ்ஸா (Maruti Suzuki Vittara Brezza) காருக்கு செம்ம கடுமையான சவாலை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் மாருதி சுசுகியின் மற்றுமொரு தயாரிப்பிற்கும் கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் நிறுவனம் மற்றும் ஓர் புதிய தயாரிப்பை நாட்டில் களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

இந்த தயாரிப்பு கேரன்ஸ் (Carens) எனும் பெயரில் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஓர் எம்பிவி ரக வாகனமாகும். தற்போது இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாருதி சுசுகியின் எர்டிகா (Maruti Suzuki Ertiga) எம்பிவி ரக கார் மாடலுக்கு போட்டியாக கேரன்ஸ் நாட்டில் களமிறக்கப்பட இருக்கின்றது.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

கேஒய் (KY) என்ற பெயரில் கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்ட எம்பிவி ரக காரையே நிறுவனம் கேரன்ஸ் எனும் பெயரில் விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இக்காரை செல்டோஸை உருவாக்க பயன்படுத்தப்படும் அதே கட்டுமான யுக்திகளைப் பயன்படுத்தியே கியா உருவாக்கி வருகின்றது.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

ஆகையால், கியா கேரன்ஸ் கியா செல்டோஸ் மூத்த சகோதரனைப் போன்று காட்சியளிப்பதற்கான வாய்ப்புகள் ஏரளமாக உள்ளன. கியா நிறுவனம் இக்காரின் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் வகையில் கேரன்ஸ் எனும் புதுமுக வாகனத்திற்கான வர்த்த பதிவை செய்திருக்கின்றது. இதனடிப்படையிலேயே எர்டிகா காருக்கான போட்டி மாடலை கியா களமிறக்குவது உறுதியாகியுள்ளது.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

கேரன்ஸ் எனும் பெயரில் கியா நிறுவனம் வாகனத்தை இந்த உலகில் அறிமுகம் செய்வது இது முதல் முறையல்ல. 1999ம் ஆண்டில் இருந்தே இப்பெயரில் நிறுவனம் காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. சர்வதேச சந்தையில் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அது விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவில் கேரன்ஸ் பெயரில் புதிய மாடலைக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

இந்தியாவிற்கான கேரன்ஸ் தற்போது உலக சந்தையில் விற்பனையில் இருக்கும் கேரன்ஸ் மாடலைக் காட்டிலும் பல மடங்கு வித்தியாசமானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் அதன் ஸ்பை படங்கள் அமைந்துள்ளன. நிறுவனம் கேரன்ஸ் காரை இந்தியாவில் களமிறக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கத் தொடங்கிவிட்டது. இதன் முன்னோட்டமே கேரன்ஸிற்கான வர்த்தக பதிவு உள்ளது.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

இந்த வர்த்தக பதிவையும் நிறுவனம் கடந்த வருடம் இறுதியிலேயே செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இதற்கான வர்த்தக சான்று நடப்பாண்டின் தொடக்கத்திலேயே கிடைத்திருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் தனது தயாரிப்புகளைக் காட்டிலம் அதிக கட்டுமஸ்தான உடல் தோற்றம் மற்றும் கவர்ச்சிகரமான அணிகலன்கள் ஆகியவற்றுடன் புதிய கேரன்ஸ் எம்பிவி உருவாகி வருகின்றது.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

எல்இடி டிஆர்எல்கள் உடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப், பெட்டி (பாக்ஸ்) போன்ற உடல் தோற்றம், எந்திர கட் அலாய் வீல்கள், க்ராஸோவர் ரக அணிகலன்கள், கருப்பு நிற நெகிழி (பிளாஸ்டிக்) கிளாடிங்குகள் மற்றும் ஃபாக்ஸ் ரூஃப் ரெயில் ஆகியவை இந்த காரில் இடம் பெற இருக்கின்றன.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

எதிர்பார்ப்பு மற்றும் யூகங்களின் அடிப்படையில் கியா கேரன்ஸ் எம்பிவி இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகின்றது. 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பிரேடட் இன்லைன் 4 பெட்ரோல் எஞ்ஜினிலும், 1.5 லிட்டர் டர்போசார்ஜ் இன்லைன் 4 டீசல் எஞ்ஜினிலும் இது எதிர்பார்க்கப்படுகின்றது.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

இத்துடன், 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வும் இதில் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எம்பிவி கார் மாருதி சுசுகியின் எர்டிகா காருக்கு மட்டுமின்றி அந்நிறுவனத்தின் எக்ஸ்எல்6 (Maruti Suzuki Ertiga/XL6) மாடல் மற்றும் மஹிந்திராவின் மராஸ்ஸோ (Mahindra Marazzo) ஆகிய கார்களுக்கும் போட்டியாக விற்பனையில் இருக்கும்.

Maruti Ertiga காருக்கு Carens எனும் பெயரில் வரும் புதிய ஆப்பு! எம்பிவி சந்தையை நோக்கி காய் நாகர்த்தும் Kia!

கியா நிறுவனம் ஏற்கனவே ஓர் எம்பிவி ரக காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருக்கின்றது. கார்னிவல் (Carnival) எனும் பெயரில் அது விற்பனையில் இருக்கின்றது. இது ஓர் சொகுசு வசதிகள் கொண்ட எம்பிவி ரக வாகனம் ஆகும். இதைத்தொடர்ந்தே இரண்டாவது எம்பிவி வாகனமாக கேரன்ஸ் இந்தியாவிற்கு தயார் செய்யப்பட்டு வருகின்றது.

Most Read Articles
English summary
Maruti ertiga rival could be named carens here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X