ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி தீவிரம்!

ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக இறங்கி இருக்கிறது. ஜிம்னி எஸ்யூவிக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு வர்த்தக வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த ஆய்வுப் பணிகளை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி தீவிரம்!

ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. கொலம்பியா, பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியும் அண்மையில் துவங்கப்பட்டது.

ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி தீவிரம்!

இந்த நிலையில், இந்தியர்கள் மத்தியிலும் இந்த காம்பேக்ட் ரக ஆஃப்ரோடு எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஜிம்னி எஸ்யூவியின் இந்திய அறிமுகம் குறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவத்சவா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சில முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி தீவிரம்!

அதில், ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து மதிப்பீடு செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் ஜிம்னி எஸ்யூவியை காட்சிப்படுத்தி இருந்தோம். அப்போது குறிப்பிடத்தக்க அளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி தீவிரம்!

இந்த நிலையில், வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்தி வருகின்றோம். அனைத்தும் சாதகமாக அமைந்தால், விற்பனைக்கு கொண்டு வருவோம்," என்று தெரிவித்துள்ளார்.

ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி தீவிரம்!

லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 3 கதவுகள் கொண்ட 4 வீல் டிரைவ் மாடல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், இந்தியாவை ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி கேந்திரமாகவும் பயன்படுத்துவதற்கு மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.

ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி தீவிரம்!

இந்த நிலையில், இந்தியாவுக்கு 5 கதவுகள் கொண்ட மாடல்தான் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, இதுகுறித்தும் மாருதி சுஸுகி ஆய்வு நடத்தி வருவதாக தெரிகிறது. ஆய்வு முடிவுகளின்படி, ஜிம்னி எஸ்யூவியை எப்போது இந்தியாவில் களமிறக்கலாம் என்ற முடிவுக்கு மாருதி சுஸுகி வரும்.

ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி தீவிரம்!

ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது, மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு எதிராக நிலைநிறுத்தப்படும். அதனைவிட விலை குறைவான மாடலாக வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

Most Read Articles

English summary
Maruti is conducting feasibility study to launch Jimny SUV in India.
Story first published: Saturday, February 20, 2021, 10:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X