2 நிமிஷம்தான்... காரை அக்குவேர்-ஆணிவேராக கழட்டி மீண்டும் மாட்டிய ராணுவ வீரர்கள்! சூப்பரான திறமை பற்றிய வீடியோ!

இந்திய எல்லை பாதுகாப்பு (BSF) வீரர்கள் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாக மாருதி சுசுகி ஜிப்ஸி (Maruti Suzuki Gypsy) எஸ்யூவி காரை அக்குவேர், ஆணி வேராக கழட்டி மாட்டும் புதிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களின் அசாத்திய திறன் குறித்த வீடியோ மற்றும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2 நிமிஷம்தான்... காரை அக்குவேர்-ஆணிவேராக கழட்டி மீண்டும் மாட்டிய ராணுவ வீரர்கள்! சூப்பரான திறமை பற்றிய வீடியோ!

இந்திய வாகன உலகின் வரலாற்றில் மிகவும் முக்கியமான வரலாற்றைக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிப்ஸி-யும் ஒன்று. இந்த காரையே நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் (Border Security Force) ராணுவ வீரர்கள் இரண்டே நிமிடங்களில் முழுவதுமாக கழட்டி, பின்னர், அதை மீண்டும் மாட்டி இருக்கின்றனர்.

2 நிமிஷம்தான்... காரை அக்குவேர்-ஆணிவேராக கழட்டி மீண்டும் மாட்டிய ராணுவ வீரர்கள்! சூப்பரான திறமை பற்றிய வீடியோ!

அதாவது, காரை அக்குவேர், ஆணி வேராக கழட்டி பின்னர் மீண்டும் முழு காராக மாற்றியிருக்கின்றனர். ராணுவ வீரர்களின் இந்த தனித் திறமை குறித்த புதிய வீடியோவே தற்போது வெளியாகியிருக்கின்றது. வீடியோவில், மாருதி சுசுகி ஜிப்ஸி காரில் அமர்ந்து வரும் வீரர்கள், தீடிரென காரை நிறுத்தி கீழே இறங்குகின்றனர்.

2 நிமிஷம்தான்... காரை அக்குவேர்-ஆணிவேராக கழட்டி மீண்டும் மாட்டிய ராணுவ வீரர்கள்! சூப்பரான திறமை பற்றிய வீடியோ!

தொடர்ந்து, ஒவ்வொரு வீரரும் சுறு சுறுப்பாக செயல்பட்டு காரின் அனைத்து பாகங்களையும் நீக்க தொடங்குகின்றனர். பானெட், கதவுகள், இருக்கைகள் என ஒன்றைகூட விடாமல் அனைத்தையும் அவர்கள் கழட்டினர். பின்னர், கழட்டியே அதே வேகத்தில் மீண்டும் உதிரிபாகங்களை அவர்கள் இணைக்கத் தொடங்கினர்.

2 நிமிஷம்தான்... காரை அக்குவேர்-ஆணிவேராக கழட்டி மீண்டும் மாட்டிய ராணுவ வீரர்கள்! சூப்பரான திறமை பற்றிய வீடியோ!

இதனால், எலும்புக் கூடாக மாறிய மாருதி ஜிப்ஸி மீண்டும் காரின் உருவத்திற்கு வந்தது. அதுவும், முன்பு எப்படி நல்ல ஓடும் திறனில் அது காணப்பட்டதே அதே நிலைக்கு ராணுவ வீரர்கள் அதனைக் கொண்டு வந்தனர். இதற்காக அவர்கள் எடுத்து கொண்ட நேரம் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே ஆகும். வீடியோ காட்சி 2 நிமிடங்கள் 18 செகண்டுகளைக் கொண்டிருக்கின்றது.

ஆனால், இதை உற்றுக் கவனத்தில் வீரர்கள் 2 நிமிடங்களுக்கு உள்ளாகவே, 1 நிமிடம் 47 செகண்டுகளில் காரை கழட்டி, மாட்டுவதை நம்மால் காண முடிகின்றது. இதில், அவர்கள் வருவதும், பின்னர், மீண்டும் புறப்படும் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால் கூடுதல் கால அளவு கொண்டிருக்கின்றது.

2 நிமிஷம்தான்... காரை அக்குவேர்-ஆணிவேராக கழட்டி மீண்டும் மாட்டிய ராணுவ வீரர்கள்! சூப்பரான திறமை பற்றிய வீடியோ!

மாருதி ஜிப்ஸி கரடு, முரடான பாதைகளுக்கு உகந்த வாகனமாக காட்சியளிக்கின்றது. எனவேதான் ராணுவத்தின் மிகவும் பிரியமான கார் மாடல்களில் முன்னணி இடத்தை இக்கார் பிடித்திருக்கின்றது. ராணுவம் மட்டுமின்றி நாட்டின் சில மாநில காவல்துறைகளும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றன.

இத்தகைய ஓர் காரையே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முழுவதும் கழட்டி பின்னர் மீண்டும் மாட்டியிருக்கின்றனர். இந்த திறன் ராணுவ வீரர்கள் இந்த காரை எந்தளவிற்கு அறிந்திருக்கின்றனர் என்பதை விளக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

2 நிமிஷம்தான்... காரை அக்குவேர்-ஆணிவேராக கழட்டி மீண்டும் மாட்டிய ராணுவ வீரர்கள்! சூப்பரான திறமை பற்றிய வீடியோ!

கராஜில் வைத்து கட்டமைக்க வேண்டிய ஓர் காரை பெரியளவில் உபகரணங்கள் இன்றி மைதானத்தில் வைத்து வீரர்கள் அக்குவேராக, ஆணி வேராக கழட்டி மாட்டியிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அண்மையில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றிலேயே வீரர்கள் இந்த சாகசத்தை செய்து காட்டியிருக்கின்றனர். நிகழ்வில் ராணுவ முக்கிய அதிகாரிகள், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

2 நிமிஷம்தான்... காரை அக்குவேர்-ஆணிவேராக கழட்டி மீண்டும் மாட்டிய ராணுவ வீரர்கள்! சூப்பரான திறமை பற்றிய வீடியோ!

இக்காரை மாருதி சுசுகி நிறுவனம் முதன் முதலில் 1985ம் ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு நாட்டில் வரவேற்பு சற்றே அதிகம். இருப்பினும், சில காரணங்களால் அண்மையில் இதன் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. கடைசியாக விற்பனையில் இருந்த ஜிப்ஸியில் 1.3 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் வழங்கப்பட்டது. 5 மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் அனைத்து வீல் இயங்கும் திறன்களுடன் இது கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

2 நிமிஷம்தான்... காரை அக்குவேர்-ஆணிவேராக கழட்டி மீண்டும் மாட்டிய ராணுவ வீரர்கள்! சூப்பரான திறமை பற்றிய வீடியோ!

2019ம் ஆண்டிலேயே இக்காரின் விற்பனையை நிறுத்தியது. பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து இதன் விற்பனை நிறுத்தப்பட்டது. தனி நபர்களுக்கான விற்பனை மட்டுமே நிறுத்தப்பட்டது. இப்போது, ராணுவ தேவைகளுக்காக இக்காரை நிறுவனம் உற்பத்தி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்டரின் பேரில் ஜிப்ஸியை உற்பத்தி செய்து மாருதி வழங்கி வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Maruti gypsy dismantle and re assemble with in 2 minutes by bsf personnel
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X