மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!

மாருதி அரேனா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் புதிய கார் மாடல்களுக்கும் ஆன்லைன் மூலமாகவே எளிதாக கடன் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாருதி அரேனா கார்களுக்கும் ஆன்லைனிலேயே எளிதாக கடன் பெறும் திட்டம்!

கொரோனா பிரச்னைக்கு பிறகு கார் விற்பனை மற்றும் அதற்கான நடைமுறைகளை ஆன்லைனிலேயே மேற்கொள்ளும் வசதியை பல முன்னணி கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. இந்த நிலையில், கார் கடன் பெறுவதற்கான ஆன்லைன் திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டு சென்றுள்ளது.

மாருதி அரேனா கார்களுக்கும் ஆன்லைனிலேயே எளிதாக கடன் பெறும் திட்டம்!

அதாவது, தனது புதிய கார் மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் ஆன்லைன் முறையிலேயே எளிதாக கடன் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் இந்த கடன் திட்டத்தை மாருதி கொண்டு வந்துள்ளது.

மாருதி அரேனா கார்களுக்கும் ஆன்லைனிலேயே எளிதாக கடன் பெறும் திட்டம்!

இந்த திட்டத்தில் முக்கிய விஷயமாக, அனைத்து முன்னணி வங்கிகளின் கடன் திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்கும் சிறந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மேலும், வெளிப்படைத்தன்மையுடன் கடன் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும்.

மாருதி அரேனா கார்களுக்கும் ஆன்லைனிலேயே எளிதாக கடன் பெறும் திட்டம்!

இதற்காக, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 12 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் மாருதி சுஸுகி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மாருதி இணையதளத்தில், கடன் திட்டங்களுக்காக உள்ள பக்கத்தில் சென்று வாடிக்கையாளர்கள் மொபைல் எண், கடன் தொகை குறித்த சில தகவல்களை பதிவு செய்தால் அவர்களுக்கான தகுதியை பொறுத்து ஒவ்வொரு வங்கியும் வழங்கும் கடன் திட்டம் குறித்த தகவல்களை பெற முடியும்.

மாருதி அரேனா கார்களுக்கும் ஆன்லைனிலேயே எளிதாக கடன் பெறும் திட்டம்!

அதிகபட்சமாக எவ்வளவு தொகையை கடனாக பெற முடியும், மாதத் தவணை விபரம் மற்றும் கடன் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே சிறந்த கடன் திட்டத்தை எந்த சிரமமும் இல்லாமல் பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

மாருதி அரேனா கார்களுக்கும் ஆன்லைனிலேயே எளிதாக கடன் பெறும் திட்டம்!

மாருதி அரேனா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் புதிய கார்களுக்கான ஸ்மார்ட் ஃபைனான்ஸ் திட்டமானது முதல் கட்டமாக 30 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாருதி அரேனா கார்களுக்கும் ஆன்லைனிலேயே எளிதாக கடன் பெறும் திட்டம்!

சென்னை, பெங்களூர், ஹைதராபாத், லக்ணோ, கொல்கத்தா, கொச்சி, மும்பை, புனே, டெல்லி, ஆமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவே அரேனா கார் மாடல்களுக்கு கடன் திட்டத்தை பெற முடியும்.

மாருதி அரேனா கார்களுக்கும் ஆன்லைனிலேயே எளிதாக கடன் பெறும் திட்டம்!

ஏற்கனவே மாருதியின் நெக்ஸா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் புதிய கார் மாடல்களுக்கு இந்த ஸ்மார்ட் ஃபைனான்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. தற்போது அரேனா கார்களுக்கும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 16, 2021, 10:19 [IST]
English summary
Maruti has introduced online finance option for Arena car customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+