இந்த செப்டம்பரில் ஆல்டோவை வாங்கினால் ரூ.20,000 வரையில் சேமிக்கலாம்!! சலுகைகளை அறிவித்தது மாருதி சுஸுகி!!
மாருதி சுஸுகி நிறுவனம் குறிப்பிட்ட அதன் பிரபலமான கார்களுக்கு இந்த 2021 செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் கார்கள் விற்பனையை அதிகரிக்க முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. பொதுவாக விற்பனையை அதிகரிக்க சலுகைகளையும், தள்ளுபடிகளையும் தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவிப்பது வழக்கம்.

இதே பாணியில் தான் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி, அரேனா டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படும் அதன் பிரதான ‘பட்ஜெட்' ரக மாடல்கள் சிலவற்றிற்கு இந்த செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த செப்டம்பரில் மாருதி கார்களை வாங்கும்போது எக்ஸ்சேன்ஞ் போனஸ், கார்பிரேட் தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். இவற்றை மாடல்கள் வாரியாக கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
| Model | Cash Discount | Exchange bonus + Corporate discount |
| Maruti Alto (STD, STD Opt trims) | ₹15,000 | ₹15,000 + ₹3,000 |
| Maruti Alto (other trims) | ₹20,000 (petrol)/NIL (CNG) | ₹15,000 + ₹3,000 |
| Maruti S-Presso | ₹25,000 (petrol)/NIL (CNG) | ₹15,000 + ₹3,000 |
| Maruti Celerio | 0 | ₹15,000 + ₹3,000 |
| Maruti Wagon-R | ₹10,000 (petrol)/NIL (CNG) | ₹15,000 + ₹3,000 |
| Maruti Swift | ₹10,000 | ₹15,000 + ₹3,000 |
| Maruti Dzire | ₹10,000 | ₹15,000 + ₹3,000 |
| Maruti Ertiga | 0 | 0 |
| Maruti Vitara Brezza | ₹10,000 | ₹15,000 + ₹3,000 |
| Maruti Eeco | ₹5,000 (petrol)/NIL (CNG) | ₹15,000 + ₹3,000 |
Source: GaadiWaadi

இதன்படி மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து அதிகளவில் விற்பனையாகும் காராக விளங்கும் ஆல்டோவின் பெட்ரோல் வேரியண்ட்டை ஏசி வசதி உடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.20,000 வரையிலான பணத்தையும், ஏசி இல்லாமல் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.15,000ஐயும் சேமிக்க முடியும். ஆனால் ஆல்டோவின் சிஎன்ஜி வெர்சனிற்கு எந்தவொரு பணம் தள்ளுபடியும் வழங்கப்படவில்லை.

இருப்பினும் ஆல்டோ ஹேட்ச்பேக் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.15,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.3,000 மதிப்பிலான கார்ப்பிரேட் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆல்டோ மட்டுமின்றி நாம் இந்த செய்தியில் இனி பார்க்க போகின்ற மாடல்கள் அனைத்திற்கும் இதே மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் கார்ப்பிரேட் சலுகைகள் தான் அறிவிக்கப்பட்டுள்ளன.

கார்ப்பிரேட் சலுகை என்பது குறிப்பிட்ட கார்ப்பிரேட் நிறுவனங்களில் பணிப்புரிவதால் கிடைக்கும் சலுகையாகும். மாருதி நிறுவனம் அறிவித்துள்ள இந்த 2021 செப்டம்பர் மாதத்திற்கான சலுகையின் மூலம் அதிகப்பட்சமாக எஸ்-பிரெஸ்ஸோவில் ரூ.25,000 வரையில் சேமிக்கலாம்.

ஆல்டோவை போல் இந்த மாடலையும் சிஎன்ஜி என்ஜின் தேர்வில் வாங்கினால் எக்ஸ்சேன்ஞ் போனஸ் & கார்ப்பிரேட் போனஸ் தவிர வேறெந்த சலுகையும் கிடைக்காது. உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் காரான வேகன்ஆருக்கு ரூ.10,000 பணம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் சிஎன்ஜி வெர்சனுக்கும் சலுகைகள் வழங்கப்படவில்லை.

மாருதி ஸ்விஃப்ட், டிசைர் மற்றும் பலத்த போட்டி மிகுந்த காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு வரும் விட்டாரா பிரெஸ்ஸாவில் தலா ரூ.10,000-ஐ சேமிக்க முடியும். பெட்ரோல் என்ஜின் உடன் ஈக்கோ வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றப்படி இந்தியாவின் நம்பர் 1 எம்பிவி மாடலான மாருதி எர்டிகாவிற்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. எக்ஸ்சேன்ஞ் போனஸ் & கார்ப்பிரேட் சலுகையினை கூட இந்த எம்பிவி காரில் இந்த மாதத்தில் பெற முடியாது. செலிரியோவிற்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ் & கார்ப்பிரேட் சலுகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகளின் மூலம் பெட்ரோல் கார்களின் விற்பனையை அதிகப்படுத்த மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புவது தெளிவாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ போன்ற மலிவான கார்களின் விற்பனையை அதிகரிக்கவே, அவை இரண்டிற்கு மட்டும் அதிக பணம் தள்ளுபடியினை மாருதி சுஸுகி வழங்கியுள்ளது என நினைக்கிறோம். இதற்கிடையில் மோட்டார் ஜெனரேட்டர் பகுதியில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுமார் 1.8 லட்ச கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் திரும்ப அழைக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications







