2021 ஜூன் மாதத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிவித்தது மாருதி!! கார் வாங்க இதுவே சரியான தருணம்!
குறிப்பிட்ட சில மாருதி சுஸுகி கார்களுக்கு 2021 ஜூன் மாதத்திற்கான சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா 2வது அலை பரவலினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் இந்தியாவில் வாகன விற்பனை கணிசமாக குறைந்தது. இதில் இந்திய-ஜப்பானிய நிறுவனமான மாருதி சுஸுகியும் பாதித்துள்ளது.

இந்த நிலையில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிறுவனம் அதன் கார்களுக்கு சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மாருதியின் மலிவான காரான ஆல்டோவிற்கு ரூ.20,000 என்கிற பணம் தள்ளுபடி சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: GaadiWaadi
| Model | Cash Discount | Exchange Bonus + Corporate Discount |
| Maruti Alto | ₹20,000 (Petrol) / ₹15,000 (CNG) | ₹15,000 + ₹4,000 |
| Maruti S-Presso | ₹20,000 | ₹15,000 + ₹4,000 |
| Maruti Wagonr | ₹8,000 (Petrol)/₹5,000 (CNG) | ₹15,000 + ₹4,000 |
| Maruti Celerio | 0 | ₹15,000 |
| Maruti Swift | ₹25,000 (LXi, VXi)/₹10,000 (ZXi, ZXi+) | ₹20,000 + ₹4,000 |
| Maruti Dzire | ₹10,000 (LXi, VXi)/₹8,000 (ZXi, ZXi+) | ₹20,000 + ₹4,000 |
| Maruti Vitara Brezza | ₹10,000 | ₹20,000 + ₹4,000 |
| Maruti Eeco | ₹10,000 | ₹15,000 + ₹4,000 |
| Maruti Ertiga | 0 | 0 + ₹4,000 |

அதேநேரம் ஆல்டோ மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு பணம் தள்ளுபடி ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் தள்ளுபடி உடன் ரூ.15,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ், ரூ.4,000 கார்பிரேட் தள்ளுபடி உள்ளிட்டவையும் மாருதியின் சிறந்த விற்பனை மாடலான ஆல்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மைக்ரோ-எஸ்யூவி மாடலுக்கு ரூ.20,000 பணம் தள்ளுபடியும், ரூ.15,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸும், ரூ.4,000 கார்ப்பிரேட் போன்ஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்-ஆர் ரூ.8,000 மதிப்பிலான பணம் தள்ளுபடியை பெற்றுள்ளது.

இது பெட்ரோல் வேரியண்ட்களானது, சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு இதே பணம் தள்ளுபடி ரூ.5,000 ஆக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு விதமான வேகன்-ஆர் வேரியண்ட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியாக எக்ஸ்சேன்ஞ் போனஸ் ரூ.15,000 ஆகவும், கார்ப்பிரேட் தள்ளுபடி ரூ.4,000 ஆகவும் வழங்கப்பட உள்ளது.

அப்படியே செலிரியோ பக்கம் சென்றால், இதற்கு ரூ.15,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதியின் மற்றொரு பிரதான விற்பனை மாடலான ஸ்விஃப்ட்டின் விலை குறைவான வேரியண்ட்களுக்கு (எல்.எக்ஸ்.ஐ, வி.எக்ஸ்.ஐ) ரூ.25,000 பணம் தள்ளுபடியும், விலைமிக்க வேரியண்ட்களுக்கு (இசட்.எக்ஸ்.ஐ, வி.எக்ஸ்.ஐ) ரூ.10,000 பணம் தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளன.

இதனுடன் ஸ்விஃப்ட் கார்களை வாங்குபவர்களுக்காக ரூ.20,000 எக்ஸ்சேன்ஞ் போனஸும், ரூ.4,000 கார்ப்பிரேட் சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாருதி டிசைரின் விலை குறைவான வேரியண்ட்களுக்கு ரூ.10,000 பணம் தள்ளுபடியும், விலைமிக்க வேரியண்ட்களுக்கு ரூ.8,000 பணம் தள்ளுபடியாக வழங்கப்பட்டுள்ளது.

கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு என்றே அதிகளவில் வாங்கப்படுகின்ற டிசைர் கார்களுக்கு ரூ.4,000 கார்பிரேட் தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேன்ஞ் போனஸாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விட்டாரா பிரெஸ்ஸாவை இந்த ஜூன் மாதத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 பணம் தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேன்ஞ் போனஸாகவும், ரூ.4,000 கார்ப்பிரேட் போனஸாகவும் பெறலாம்.


Click it and Unblock the Notifications








