புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட தரத்தில் புதிய மாருதி செலிரியோ... விரைவில் அறிமுகம்?

புதிய டிசைன் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட தரத்தில் புதிய மாருதி செலிரியோ... விரைவில் அறிமுகம்?

இந்தியாவின் பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மாருதி செலிரியோ கார் இருந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டதுடன் தொடர்ந்து விற்பனையில் இருந்து வருகிறது.

புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட தரத்தில் புதிய மாருதி செலிரியோ... விரைவில் அறிமுகம்?

இந்த நிலையில், தற்போது சந்தைப்போட்டியை மனதில் வைத்து, வடிவமைப்பு, வசதிகளில் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மாருதி செலிரியோ கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட தரத்தில் புதிய மாருதி செலிரியோ... விரைவில் அறிமுகம்?

கொரோனாவால் புதிய கார் அறிமுகங்கள் தள்ளிப்போய் வரும் நிலையில், புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. அதாவது, இந்த ஆண்டு பண்டிகை காலத்திற்கு முன்னதாக களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட தரத்தில் புதிய மாருதி செலிரியோ... விரைவில் அறிமுகம்?

இரண்டாம் தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய மாருதி செலிரியோ கார் மாருதி நிறுவனத்தின் ஹார்டெக்ட் கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டமைப்பில் உருவாக்கப்படும் கார்கள் மிகச் சிறந்த பாதுகாப்பு, அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறந்த ஓட்டுதல் தரத்தை பெற்றிருக்கும் என்று நம்பலாம்.

புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட தரத்தில் புதிய மாருதி செலிரியோ... விரைவில் அறிமுகம்?

குறிப்பாக, இதன் பின் இருக்கைகள் கூடுதல் இடவசதியை பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்படுவதால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை சரியான பட்ஜெட்டில் இந்த கார் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், க்ரவுண்ட் க்ளியரன்ஸும் கூட மேம்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட தரத்தில் புதிய மாருதி செலிரியோ... விரைவில் அறிமுகம்?

புதிய மாருதி செலிரியோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, புதிய வேகன் ஆர் காரில் வழங்கப்படும் அதே எஞ்சின் தேர்வுகள் இதிலும் வழங்கப்படும்.

புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட தரத்தில் புதிய மாருதி செலிரியோ... விரைவில் அறிமுகம்?

இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 68 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட தரத்தில் புதிய மாருதி செலிரியோ... விரைவில் அறிமுகம்?

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், புதிய டிசைனிலான சக்கரங்கள் ஆகியவையும் இதன் வசீகரத்தை கூட்டும் விதமாக இருக்கும். தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் உள்ளிட்ட சிறந்த அம்சங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 28, 2021, 18:00 [IST]
English summary
According to report, Maruti Suzuki is planning to launch new gen Celerio in India Soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+