சந்தா திட்டத்தில் கூடுதல் கார்கள் சேர்ப்பு... 2021ல் வாடிக்கையாளர்களை கவர மாருதி சுசுகி அதிரடி...

தனது சந்தா திட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனம் கூடுதல் புதிய கார்களை சேர்த்திருக்கின்றது. அது என்னென்ன கார்கள் என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

சந்தா திட்டத்தில் கூடுதல் கார்கள் சேர்ப்பு... 2021ல் வாடிக்கையாளர்களை கவர மாருதி சுசுகி அதிரடி...

புதிய கார் விற்பனை மட்டுமின்றி கூடுதல் சில சிறப்பு சேவையிலும் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இந்நிறுவனம் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களில் மாத சந்தா திட்டமும் ஒன்று. இந்த சேவையில் மிக குறைந்தளவிலான மாடல்களை மட்டுமே வழங்கி வந்தநிலையில் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் கூடுதலாக புதிய மாடல்களை மாருதி சேர்த்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தா திட்டத்தில் கூடுதல் கார்கள் சேர்ப்பு... 2021ல் வாடிக்கையாளர்களை கவர மாருதி சுசுகி அதிரடி...

புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கையில் மாருதி களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்து இன்று (ஜனவரி 6) அது வெளியிட்டிருக்கும் தகவலில், புதிதாக மாத சந்தா திட்டத்தில் எஸ்-க்ராஸ், இக்னிஸ் மற்றும் வேகன் ஆர் ஆகிய மாடல்களையும் மாத சந்தா திட்டத்தில் வழங்க இருப்பதாக கூறியிருக்கின்றது.

சந்தா திட்டத்தில் கூடுதல் கார்கள் சேர்ப்பு... 2021ல் வாடிக்கையாளர்களை கவர மாருதி சுசுகி அதிரடி...

புதிய வாகன விற்பனையில் மட்டுமின்றி மாத சந்தா திட்டத்திலும் எண்ணற்ற தேர்வினை வழங்கும் நோக்கில் மாருதி இந்த புதிய கார்களை மாத சந்தா திட்டத்திற்கான கார்களின் பட்டியலில் சேர்த்திருக்கின்றது. மாருதி சுசுகியின் இந்த அறிவிப்பு அதன் பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

சந்தா திட்டத்தில் கூடுதல் கார்கள் சேர்ப்பு... 2021ல் வாடிக்கையாளர்களை கவர மாருதி சுசுகி அதிரடி...

இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய காரை சொந்தமாக்காமலேயே அவற்றை பயன்படுத்த முடியும். அதாவது மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தி புதிய கார்களை பயன்படுத்த முடியும். இதுமட்டுமின்றி பராமரிப்பு செலவு, காப்பீடு உள்ளிட்ட எந்த தொல்லையும் இன்றி இத்திட்டத்தின்கீழ் வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சந்தா திட்டத்தில் கூடுதல் கார்கள் சேர்ப்பு... 2021ல் வாடிக்கையாளர்களை கவர மாருதி சுசுகி அதிரடி...

சந்தா திட்டத்தின்கீழ் எடுக்கப்படும் வாகனங்களில் ஏதேனும் கோளாறு எனில் திறம் வாய்ந்த மெக்கானிக்குகள் மூலம் ரோட் சைட் அசிஸ்டன்ட் (Roadside Assistance) உள்ளிட்ட சிறப்பு சேவையை மாத சந்தா திட்டத்திற்கான கட்டணத்திலேயே வழங்கும்.

சந்தா திட்டத்தில் கூடுதல் கார்கள் சேர்ப்பு... 2021ல் வாடிக்கையாளர்களை கவர மாருதி சுசுகி அதிரடி...

அதாவது கூடுதல் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்படும். எனவேதான் பராமரிப்பு செலவு என்பது அறவே இல்லை என கூறப்படுகின்றது.

சந்தா திட்டத்தில் கூடுதல் கார்கள் சேர்ப்பு... 2021ல் வாடிக்கையாளர்களை கவர மாருதி சுசுகி அதிரடி...

முன்னதாக அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்கப்பட்டு வரும் ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா ஆகிய கார்களையும், நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்கப்பட்டு வரும் பலேனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்களையும் மாத சந்தா திட்டத்தில் மாருதி வழங்கி வந்தது. இந்த வரிசையிலேயே புதிதாக எஸ்-க்ராஸ், இக்னிஸ் மற்றும் வேகன்-ஆர் கார்களை மாருதி சேர்த்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Adds More Cars For 'Subscribe' Plan. Read In Tamil.
Story first published: Thursday, January 7, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X