தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

தானே சார்ஜ் செய்து கொள்ளும் தொழில்நுட்ப வசதியுடன் ஓர் காரை Maruti Suzuki - Toyota கூட்டணி உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முழுமையான விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

உலகளவில் மின் வாகனங்களுக்கான தேவை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களின் உற்பத்தியைக் காட்டிலும் மின் வாகனங்களை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மிக விரைவில் எரிபொருளால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் உற்பத்தியையே கைவிட இருப்பதாக அறிவித்து வருகின்றன. அந்தளவிற்கு மின் வாகனத்தின் மீதான மோகம் வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கின்றது.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

ஆனால், மின் வாகனங்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையாத நிலையே உலகளவில் தென்படுகின்றது. குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இப்போதே மின் வாகன பயன்பாட்டை தத்தெடுக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றன.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

ஆகையால், மிக மிக கணிசமான அளவிலேயே மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் இருப்பு காட்சியளிக்கின்றன. நகர்புறங்களிலேயே இந்த நிலைதான் தென்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. நமது நாட்டில் மட்டுமின்றி இன்னும் சில உலக நாடுகளிலும்கூட இந்த மாதிரியான சூழ்நிலையே தென்படுகின்றது.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு இரு பிரபல கார் உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து சார்ஜ் செய்ய தேவைப்படா வசதிக் கொண்ட ஹைபிரிட் ரக கார்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான Maruti Suzuki மற்றும் Toyota ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்தே இந்த எதிர்காலத்திற்கான சிறப்பு மிக்க எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கின்றன.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

இந்த மின்சார கார் வழக்கமான மின்சார கார்களைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானவையாக இருக்கும் என கூறப்படுகின்றது. அதாவது, புதிய ஹைபிரிட் வாகனம் புதை படிவ எரிபொருள் இயங்கும் தன்மையுடனும், மேலும், அதைனக் கொண்ட வாகனத்தில் இருக்கும் பேட்டரியை அது சார்ஜ் செய்யும் வசதியுடனும் உருவாக இருக்கின்றது.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

இதனை இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக Maruti Suzuki மற்றும் Toyota கூட்டணி உருவாக்க இருப்பதாக மணி கன்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது, இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருக்கும் Tata Motors, Mahindra மற்றும் Hyundai ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் தயாரிப்புகளுக்கு போட்டியளிக்கும் வகையில் அதன் வருகை இருக்கும்.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

ஹைபிரிட் வாகனங்கள் கலப்பு ஆற்றலைப் பயன்படுத்தி பேட்டரி சார்ஜ் செய்துகொள்ளும். அதாவது, ஐசிஇ எஞ்ஜின் எனப்படும் எரிபொருளால் இயங்கும் எஞ்ஜினின் இயக்கத்தில் இருந்து தனக்கான மின்சார திறனை அது சேமித்துக் கொள்ளும். இத்தகைய ஓர் சிறப்பு வசதிக் கொண்ட வாகன உருவாக்கத்திற்கே Maruti Suzuki - Toyota கூட்டணி அமைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

இந்த ஹைபிரிட் ரக காரை குறிப்பிட்ட தூரம் சார்ஜிங் மையத்தின் உதவி இன்றியே இயக்க முடியும். இதன் வாயிலாக எரிபொருளால் இயங்கும் எஞ்ஜினின் சுமையை லேசாக குறைக்க முடியும். அதேவேலையில், எரிபொருளை சிக்கனம் செய்து கூடுதல் லாபத்தையும் பெற முடியும். ஆகையால், தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல் மின் வாகன பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

தற்போது Maruti Suzuki மைல்டு ஹைரிபிட் தொழில்நுட்ரத்திலான வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. சந்தையில் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் என்ற பெயரில் அது பயன்பாட்டில் இருக்கின்றது. இது வாகனத்தில் இருக்கும் கூடுதல் பேட்டரியை சார்ஜ் செய்யும் வகையில் வசதிக் கொண்ட தொழில்நுட்பம் ஆகும்.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

இது ஐடிலிங் மற்றும் வாகனத்தை முழுமையாக அனைக்கும்போது எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க உதவும். இதன் வாயிலாகவும் கணிசமான எரிபொருள் சிக்கனம் செய்ய முடியும். தற்போது இந்திய சந்தையில் Toyota Camry, BMW 7-Series மற்றும் Lexus LC500 ஆகிய கார்கள் ஹைபிரிட் திறன் வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

தானே சார்ஜ் செய்து கொள்ளும்... Maruti Suzuki - Toyota கூட்டணியில் உருவாகும் தரமான ஹைபிரிட் கார்!!

மிக விரைவில் Honda நிறுவனம் Civic மற்றும் Accord கார் மாடல்களில் ஹைபிரிட் வசதியை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதேபோன்றதொரு நடவடிக்கையிலேயே தற்போது Maruti Suzuki-யும் களமிறங்கியிருக்கின்றது. இந்இந்நிறுவனம் கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஹைபிரிட் வசதிக் கொண்ட Swift காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Maruti suzuki and toyota joint for develop self charging hybrid car
Story first published: Thursday, August 26, 2021, 11:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X