மாருதி காரை வாங்கும் பிளான் இருக்கா?.. 2022 ஜனவரியில் இருந்து கார் ரேட்ட ஏத்த போறாங்களாம்! இதோ முழு விபரம்!

2022ம் ஆண்டிற்கான பரிசாக மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரீசார்ஜ் கட்டணம் மட்டுமல்ல... விரைவில் மாருதி கார்களின் விலையும் உயர போகுது! புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிச எதிர்பார்க்கல!

இந்தியாவில் மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என்று எப்போது தனித்துவமான டிமாண்ட் உண்டு. மலிவு விலை, அதிக மைலேஜ் உள்ளிட்டவற்றிற்கு இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் பெயர்போனவையாக இருக்கின்றன. ஆனால், சமீப சில காலமாக இந்நிறுவனம் தொடர் விற்பனை சரிவைச் சந்தித்து வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

ரீசார்ஜ் கட்டணம் மட்டுமல்ல... விரைவில் மாருதி கார்களின் விலையும் உயர போகுது! புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிச எதிர்பார்க்கல!

செமி கன்டக்டர் பற்றாக்குறையே மிக முக்கியமான காரணம் ஆகும். உலகளவில் நிலவி வரும் இந்த பிரச்னையால் மாருதி சுசுகி நிறுவனத்தின் உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நிறுவனத்தின் விற்பனைச் சரிந்துள்ளது. கடந்த நவம்பர் மாத நிலவரப்படி, நிறுவனம் ஒட்டுமொத்தமாகவே 1,39,184 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது.

ரீசார்ஜ் கட்டணம் மட்டுமல்ல... விரைவில் மாருதி கார்களின் விலையும் உயர போகுது! புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிச எதிர்பார்க்கல!

2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுவனம் 1,53,223 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதைக்காட்டிலும் 2021 நவம்பர் 9.16 சதவீதம் சரிவைச் சந்தித்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக விலை உயர்வை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரீசார்ஜ் கட்டணம் மட்டுமல்ல... விரைவில் மாருதி கார்களின் விலையும் உயர போகுது! புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிச எதிர்பார்க்கல!

விலையுயர்வு உங்களுக்கு பரிசா..! மாருதி சுசுகி நிறுவனம் 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இதையே அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. நிறுவனம் இதுகுறித்த முடிவை நேற்றைய (டிசம்பர் 2) எடுத்திருக்கின்றது. வாகனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதைச் சமாளிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக மாருதி சுசுகி காரணம் தெரிவித்துள்ளது.

ரீசார்ஜ் கட்டணம் மட்டுமல்ல... விரைவில் மாருதி கார்களின் விலையும் உயர போகுது! புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிச எதிர்பார்க்கல!

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "கடந்த சில காலமாக வாகன உற்பத்திக்கான உள்ளீட்டு செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இது வாகனங்களின் விலையை தொடர்ந்து மோசமாகப் பாதிக்கச் செய்து வருகின்றது. எனவே, விலை உயர்வு மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவீனங்கள் செலுத்துவது கட்டாயமாகிவிட்டது" என தெரிவித்திருக்கின்றது.

ரீசார்ஜ் கட்டணம் மட்டுமல்ல... விரைவில் மாருதி கார்களின் விலையும் உயர போகுது! புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிச எதிர்பார்க்கல!

நிறுவனத்தின் இந்த முடிவு மாருதி சுசுகி வாகன பிரியர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால், நிறுவனம் எத்தனை மடங்கு விலையை உயர்த்த இருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரீசார்ஜ் கட்டணம் மட்டுமல்ல... விரைவில் மாருதி கார்களின் விலையும் உயர போகுது! புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிச எதிர்பார்க்கல!

அதேநேரத்தில் மாருதி சுசுகி நிறுவனம் விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. நடப்பு ஆண்டில் மட்டும் இரண்டுக்கும் அதிகமான முறை விலை உயர்வைச் செய்திருக்கின்றது, மாருதி. இந்த விலை உயர்விற்கும் வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்ததே காரணமாகக் கூறப்பட்டது.

ரீசார்ஜ் கட்டணம் மட்டுமல்ல... விரைவில் மாருதி கார்களின் விலையும் உயர போகுது! புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிச எதிர்பார்க்கல!

சமீபத்தில் கடந்த செப்டம்பர் மாதத்திலும்கூட நிறுவனம் விலை உயர்வு செய்திருந்தது. குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை நிறுவனம் 1.9 சதவீதம் வரை உயர்த்தி இருந்தது. இதனால், ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ. 22,500 வரை நிறுவனத்தின் தயாரிப்புகள் சில விலை உயர்வைப் பெற்றன. இந்த நிலையிலேயே மீண்டும் உயர்வைச் செய்திருக்கின்றது மாருதி சுசுகி நிறுவனம்.

ரீசார்ஜ் கட்டணம் மட்டுமல்ல... விரைவில் மாருதி கார்களின் விலையும் உயர போகுது! புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிச எதிர்பார்க்கல!

சமீப சில காலமாக வாகன உலகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றது. செமி கன்டக்டர் சிப் பற்றாக்குறை, மூலப் பொருட்களின் விலை, சரக்குக் கொள்கலன்கள் கிடைக்காத காரணம், அதிக கப்பல் கட்டணங்கள் உள்ளிட்ட பல வாகன உலகை பாதித்து வருகின்றன.

ரீசார்ஜ் கட்டணம் மட்டுமல்ல... விரைவில் மாருதி கார்களின் விலையும் உயர போகுது! புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிச எதிர்பார்க்கல!

இத்துடன், எஃகு மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் பற்றாக் குறையும் தொழில் துறையை பெரிதும் பாதித்திருக்கின்றது. ஆகையால், மாருதி சுசுகி நிறுவனத்தின் இந்த விலை உயர்வு பாதையை பிற கார் உற்பத்தியாளர்களும் கையிலெடுக்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. ஆகையால், புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் சற்றே இதனால் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Maruti suzuki announced that its cars will become pricier from january 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X