Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ரஜினியிடம் ஆணையம் கண்டிப்பாக விசாரிக்கும் - வக்கீல்
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நம்ப முடியாத சாதனை... டாடா அல்ட்ராஸ் காரை ஓரங்கட்டிய மாருதி பலினோ... விற்பனையில் அல்ல...
டாடா அல்ட்ராஸ் காரை மாருதி சுசுகி பலினோ கார் புதிய சாதனையால் ஓரங்கட்டியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் பிரிமீயம் தர ஹேட்ச்பேக் ரக கார்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பலினோ மாடலும் ஒன்று. இந்த காரைக் கொண்டே பிரஞ்சல் சிங் எனும் இளைஞர் தரமான சாதையைப் படைத்திருக்கின்றார். இதற்காக தங்க பதக்கத்தையும் அவர் வென்றிருக்கின்றார்.

மாருதி பலினோ காரைக் கொண்டு 24 நேரத்திற்கும் உள்ளாக பல நூறு கிலோமீட்டர்களைக் கடந்து அவர் சாதனைப் படைத்திருக்கின்றார். அதாவது, 1,883.9 கிமீ தூரத்தை பிரஞ்சல் சிங் 23 மணி நேரங்கள் மற்றும் 4 நிமிடங்களிலேயே கடந்து சாதனைப் படைத்திருக்கின்றார்.

அவர், சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி தொடங்கி கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிற்கே 24 மணி நேர்ததிற்கும் குறைவாக வந்து சேர்ந்திருக்கின்றார். இந்த புதிய சாதனையின் காரணத்தினாலேயே தற்போது மாருதி பலினோ காரை ஓட்டி வந்த பிரஞ்சல் சிங் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரைக் கொண்டு தேவ்ஜீப் சஹா எனும் நபர் 1,603 கிமீ தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சாதனை பயணம் புனேவில் பெங்களூருவில் முடிவடைந்தது. இந்த இரு பகுதிகளுக்கு இடையிலான 1603 கிமீ தூரம் 24 மணி நேரங்கள் கடக்கப்பட்டன.

இந்த சாதனையைத் தொடர்ந்தே மாருதி பலினோ காரில் பிரஞ்சல் புதிய சாதனையைப் படைத்திருக்கின்றார். ஆகையால், ஒரே நாளில் அதிக கிமீ தூரம் பயணித்த ஹேட்ச்பேக் கார் என்ற பட்டத்தை மாருதி சுசுகி பலினோ கார் தட்டிச் சென்றிருக்கின்றது.

மாருதி பலினோ கார் 1.2 லிட்டர் கே செரீஸ் மற்றும் 1.2 லிட்டர் ட்யூவல்ஜெட் ஆகிய இருவிதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், கெ-செரீஸ் பெட்ரோல் எஞ்ஜின் 83 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆகிய இருவிதமான டிரான்ஸ்மிஷனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், ட்யூவல்ஜெட் எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் சூப்பர் திறன் எஞ்ஜின் குறிப்பிடத்தகுந்தது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இதுமட்டுமின்றி, ட்யூவல்ஜெட் எஞ்ஜின் ஆப்ஷன் கொண்ட பலினோவில் லேசான ஹைபிரிட் சிஸ்டத்தையும் மாருதி வழங்குகின்றது. ஆகையால், இதன் எரிபொருள் பயன்பாடு சற்று குறைவாக இருக்கின்றது.

தொடர்ந்து, எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் வகையில் 5-10 செகண்டுகள் வரை கார் இயக்கம் இன்று சும்மா நிற்குமானால் தானாக எஞ்ஜினை அணைக்கும் வசதி இந்த ஹைபிரிட் சிஸ்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் க்ளட்சை கால்கள் அழுத்தும்போது கார் உடனடியாக இயக்க நிலைக்கு வந்துவிடும். இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

ட்யூவல் எஞ்ஜின் கொண்ட பலினோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.87 கிமீ மைலேஜை வழங்கும். அதுவே, கே-செரீஸில் விற்பனைக்குக் கிடைக்கும் பலினோ 19.56 கிமீ தொடங்கி 21.01 கிமீ வரையிலான மைலேஜை மட்டுமே வழங்கும். இது அராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுசுகி பலினோ கார் சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியண்டுகள் சிவிடி கியர்பாக்ஸ் தேர்விலும், டெல்டா மற்றும் ஜெட்டா ஆகிய இரு வேரியண்டுகளில் மட்டும் ட்யூவல்ஜெட் எஞ்ஜின் வழங்கப்படுகின்றன.

இந்த கார் இந்தியாவில் ரூ. 5.90 லட்சம் தொடங்கி ரூ. 9.10 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பலினோ காரையே ரீபேட்ஜ் செய்து க்ளான்ஸா மாடலாக டொயோட்டா விற்பனைச் செய்து வருகின்றது.