ஒரே மாசத்துல இத்தனை ஆயிரம் பலேனோ கார்கள் விற்பனையா? போட்டியாளர்களை திணற வைக்கும் மாருதி...

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் எவ்வளவு பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரே மாசத்துல இத்தனை ஆயிரம் பலேனோ கார்கள் விற்பனையா? போட்டியாளர்களை திணற வைக்கும் மாருதி...

இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோ ஆதிக்கம் செலுத்தி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதன்படி கடந்த ஏப்ரல் மாதமும் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோவின் ஆதிக்கம் தொடர்ந்துள்ளது. இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16,384 பலேனோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

ஒரே மாசத்துல இத்தனை ஆயிரம் பலேனோ கார்கள் விற்பனையா? போட்டியாளர்களை திணற வைக்கும் மாருதி...

இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையுடன், அதிகம் விற்பனையாகி வரும் மாருதி சுஸுகி நிறுவன கார்களில் ஒன்று என்ற பெருமையையும் பலேனோ தக்க வைத்து கொண்டுள்ளது. பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை பொறுத்தவரை, பலேனோவின் விற்பனை எண்ணிக்கைக்கு அருகில் கூட வேறு எந்த காரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே மாசத்துல இத்தனை ஆயிரம் பலேனோ கார்கள் விற்பனையா? போட்டியாளர்களை திணற வைக்கும் மாருதி...

மாருதி சுஸுகி பலேனோ காரில், 1.2 லிட்டர் நான்கு-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஸ்டாண்டர்டு ஆகவும், சிவிடி தேர்வு ஆப்ஷனலாகவும் வழங்கப்படுகிறது.

ஒரே மாசத்துல இத்தனை ஆயிரம் பலேனோ கார்கள் விற்பனையா? போட்டியாளர்களை திணற வைக்கும் மாருதி...

மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரில், மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் வழங்குகிறது. இந்த வேரியண்ட்களில் பவர் அவுட்புட் 90 பிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரில் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதில், எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஒரே மாசத்துல இத்தனை ஆயிரம் பலேனோ கார்கள் விற்பனையா? போட்டியாளர்களை திணற வைக்கும் மாருதி...

இதுதவிர ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உடன் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயிண்மெண்ட் சிஸ்டம், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டாப்/ஸ்டார்ட் ஆகிய வசதிகளும் மாருதி சுஸுகி பலேனோ காரில் வழங்கப்படுகின்றன. இதுதவிர பாதுகாப்பிற்காகவும் பல்வேறு வசதிகளை மாருதி சுஸுகி பலேனோ பெற்றுள்ளது.

ஒரே மாசத்துல இத்தனை ஆயிரம் பலேனோ கார்கள் விற்பனையா? போட்டியாளர்களை திணற வைக்கும் மாருதி...

இதில், முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ், டொயோட்டா க்ளான்சா உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு வருகிறது. இதில் டொயோட்டா க்ளான்சா, பலேனோவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே மாசத்துல இத்தனை ஆயிரம் பலேனோ கார்கள் விற்பனையா? போட்டியாளர்களை திணற வைக்கும் மாருதி...

சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதன் அடிப்படையில் விற்பனை செய்யப்படும் கார்களில் ஒன்றுதான் டொயோட்டா க்ளான்சா.

ஒரே மாசத்துல இத்தனை ஆயிரம் பலேனோ கார்கள் விற்பனையா? போட்டியாளர்களை திணற வைக்கும் மாருதி...

இதேபோல் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா காரையும் டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூஸர் ஆகிய இரண்டு கார்களும் டொயோட்டா நிறுவனத்திற்கு ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து வருகின்றன.

Most Read Articles

English summary
Maruti Suzuki Baleno Premium Hatchback Sales Report April 2021. Read in Tamil
Story first published: Tuesday, May 25, 2021, 20:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X