மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதுமுக வரவாக இருக்கும் செலிரியோ (Celerio) காருக்கான அக்செஸ்ஸரீஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் பட்டியல் மற்றும் விலை விபரத்தை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார் மாடலாக மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) ஹேட்ச்பேக் கார் உள்ளது. இக்காரை கடந்த நவம்பர் 10ம் தேதி அன்று மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகப்படுத்தியது. வடிவமைப்பிலும், வசதியிலும் மிக சிறந்த தயாரிப்பாக இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆகையால், விரைவில் விற்பனையில் இக்கார் புதிய உச்சத்தை தொடும் என நம்பப்படுகின்றது.

மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

இந்த நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் செலிரியோ காரை மேலும் சிறப்பிக்கும் வகையில் அக்காருக்கான அணிகலன்கள் (Accessories) மற்றும் பேக்கேஜ்களை (Packages) அறிமுகப்படுத்தியுள்ளது. இவை வழக்கமான தோற்றத்தில் இருந்து ஸ்போர்ட்டி மற்றும் கூடுதல் கவர்ச்சியான செலிரியோவாக மாற்ற உதவும் என்பது குறிப்பிடத்தகுந்தது. முந்தைய செலிரியோவைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகள் புதிய செலிரியோவில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

இருப்பினும், பரந்த அளவிலான விருப்ப பாகங்களை வழங்கும் நோக்கில் மேலும் சில அணிகலன்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அப்படி என்னென்ன அணிகலன்களை மாருதி சுசுகி, செலிரியோ காருக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

செலிரியோவின் வெளிப்புறத்தை அலங்கரிப்பதற்கான அணிகலன்கள்:

ரூ. 8 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் முழு பிளாஸ்டிக் கிளாடிங்கும் வழங்கப்படுகின்றது. இதன் ஸ்பாய்லர் ஆறு விதமான நிற தேர்வுகளில் கிடைக்கும். அதில், கிளாஸ் கருப்பு சிறப்பு நிற தேர்வாக இருக்கிறது. அலாய் வீல் தேர்வும் இத்துடன் வழங்கப்படுகின்றது. ரூ. 30 ஆயிரம் இதன் விலை ஆகும். இசட்எக்ஸ்ஐ-ப்ளஸ் வேரியண்டில் இந்த வீல் ஃபேட்டரி ஃபிட்டிங்காக வழங்கப்படுவது குறிப்பிடுத்தகுந்தது.

மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

இந்த பேக்கேஜை முழுமையாக வாங்க விருப்பம் இல்லை என்றால் நீங்கள் அதனை தனி தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம். அதற்கான வழியையும் மாருதி சுசுகி வழங்குகின்றது. தனி தனியாக அப்பாகங்களின் விலை என்ன என்பது பற்றிய தகவலை பட்டியலாகக் கீழே காணலாம்.

மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!
Accessories Price
Front extender ₹1,550
Rear extender ₹1,450
Side skirts ₹1,710
Spoiler ₹2,590
Wheel arch cladding ₹3,050
Rear windshield garnish ₹890
Body graphics ₹2,890
Machine-finished alloy wheels (set of four) ₹26,360
Fog lamp garnish ₹410 to ₹510
Body side moulding with chrome insert ₹1,090 to ₹2,490
Chrome window kit ₹1,690
Door visor / door visor with chrome insert ₹1,790 / ₹1,990
Bumper corner protector ₹330 to ₹510
மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

காரின் உட்பக்கத்தை அலங்கரிக்கும் அம்சங்கள்:

கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் வழக்கமான ஏர் வெண்டுகளை நீலம் அல்லது கேஃபைன் பழுப்பு நிறத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளும் வசதியை மாருதி வழங்குகின்றது. இதேபோல் இருக்கையை 13 நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதி வாய்ப்பையும் வழங்குகின்றது. லெதர், துணி என பன்முக தேர்வுகள் இதில் வழங்கப்படுகின்றன. இதற்கான விலை குறித்த தகவலை பட்டியலாகக் கீழே காணலாம்.

மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!
Accessories Price
Interior styling kit ₹7,990 to ₹8,190
Door sill guard ₹790
Boot mat ₹1,390
Floor mats ₹1,190 to ₹1,590
Designer floor mats ₹1,990
Seat covers ₹4,990 to ₹7,750
மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

இதோ அவற்றின் விலை பட்டியல்:

Accessories Price
Touchscreen system ₹11,050 to ₹26,990
2-din audio system ₹8,990 to ₹13,819
Music system ₹5,990 to ₹8,550
Speakers ₹1,025 to ₹5,290
மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

விலையுயர்ந்த கார்களில் வழங்கப்படும் பாதுகாப்பு கருவிகள், இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் ஏர் ப்யூரி ஃபையர் போன்ற அம்சங்களும் செலிரியோவிற்கு வழங்கப்பட இருக்கின்றது. இவற்றின் விலை பட்டியலைக் கீழே பார்க்கலாம், வாங்க.

Accessories Price
Air purifier ₹4,590 to ₹5,260
Digital tyre inflator ₹2,111 to ₹2,590
In-car vacuum cleaner ₹970 to ₹1,990
In-car mobile fast charger ₹1,550
Dual-port mobile charger ₹1,300
Steering wheel lock ₹1,890
Trunk organiser ₹1,399
Rear mobile holder (seat hook) ₹340
Child seat ₹29,900
Cushion ₹1,070
Car care kit ₹345 to ₹1,525
Car polish ₹475
Car wash and wax ₹899
Car AC disinfectant ₹715
Car interior cleaner ₹415
மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

அக்செஸ்ஸரீஸ் பேக்கேஜ் (Accessories package)

மாருதி சுசுகி நிறுவனம் இரு விதமான தேர்வுகளில் செலிரியோவிற்கான பேக்கேஜை வழங்குகின்றது. ஆக்டீவ் (Active) மற்றும் கூல் (Cool) எனும் அக்செஸ்ஸரீஸ் பேக்கேஜ் (Accessories package) வழங்கப்படுகின்றது. இதன் சிவப்பு நிற தேர்விற்கு ரூ. 27,590-ம், சில்வர் நிற தேர்விற்கு ரூ. 24,590 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விஎக்ஸ்ஐ ட்ரிம்மை தழுவி வழங்கப்படுகின்றது. இந்த ட்ரிம்மில் லெதர் இருக்கை கவர்கள், பாடி கிளாடிங், பூட் மேட், தரை விரிப்பான்கள் மற்றும் ஸ்டியரிங் வீல் கவர் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மிக அதிக மைலேஜை தரும் Celerio காரை மிகவும் கவர்ச்சியானதாக மாற்றலாம்... இதோ அக்செஸ்ஸரீஸ் பட்டியல்!

ஆக்டீவ் மற்றும் கூல் பேக்கேஜை போல் நிறுவனம் பெப்பி (Peppy) மற்றும் ஸ்டைலில் (Stylish) எனும் பேக்கேஜையும் வழங்குகின்றது. இப்பேக்கேஜின் விலை ரூ. 26,590 ஆகும். எல்எக்ஸ்ஐ ட்ரிம்மை தழுவி இந்த பேக்கேஜ் வழங்கப்படுகின்றது. கருப்பு நிற லெதர் போர்வை, ஆரஞ்சு நிற அக்செண்டுகள், கேஃபைன் பழுப்பு நிற ஏர் வெண்டுகள் மற்றும் விண்டோ ஃப்ரேம் கார்னிஷ் ஆகியவை வழங்கப்படும். இத்துடன், மேலே பார்த்த ஆக்டீவ் மற்றும் கூல் பேக்கேஜின் அம்சங்களும் இந்த பேக்கேஜின்கீழ் வழங்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Maruti suzuki celerio s accessories and packages details
Story first published: Friday, November 12, 2021, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X