டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!

டொயோட்டா பிராண்டில் மாருதி சியாஸ் கார் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தநிலையில், டொயோட்டா பிராண்டில் வர இருக்கும் மாருதி சியாஸ் காரின் முன்பக்க க்ரில் அமைப்பின் படம் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இந்தியாவில் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. மாருதி நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!

ஏற்கனவே, மாருதி பலேனோ கார் டொயாட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரிலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்ற பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன.

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!

இதைத்தொடர்ந்து, தற்போது மூன்றாவது மாருதி கார் மாடலும் விரைவில் டொயோட்டா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆம், மாருதி சியாஸ் கார் விரைவில் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு வர இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், டொயோட்டா பிராண்டில் வர இருக்கும் மாருதி சியாஸ் காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட முகப்பு க்ரில் அமைப்பின் படங்கள் டீம் பிஎச்பி தளம் மூலமாக வெளியாகி இருக்கின்றன. இதன்மூலமாக, அடுத்த மாடலாக மாருதி சியாஸ் கார் டொயோட்டா பிராண்டில் மிக விரைவில் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் யாரிஸ் என்ற கார் மாடலை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. இந்த கார் இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட உள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், யாரிஸ் காருக்கு மாற்றாக மாருதி சியாஸ் காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது உறுதியாகி இருக்கிறது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மாருதி லோகோவுக்கு பதிலாக டொயோட்டா லோகோ இடம்பெற்றிருக்கும். வேறு எந்த மாற்றமும் பெரிய அளவில் செய்யப்பட்டு இருக்காது.

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!

மாருதி சியாஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் டொயோட்டா பயன்படுத்தும். இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், புதிய டிசைனில் அலாய் வீல்கள், ஜன்னல்களை சுற்றிலும் க்ரோம் பீடிங் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும். அதேபோன்று, தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல், க்ளைமேட் கன்ட்ரோல், ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படும் மாருதி சியாஸ்.. விரைவில் அறிமுகமாகிறது!

மாருதி சியாஸ் காரின் பேஸ் வேரியண்ட்டுகள் தவிர்க்கப்படலாம் என்பதால், ஆரம்ப விலை சற்று கூடுதலாக இருக்கலாம். ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
The Maruti Suzuki Ciaz could be Toyota's next rebadged model to be sold in India. The company could replace the Yaris sedan with a rebadged Ciaz sedan in the country. It will be the third model that will be rebadged and sold under the partnership between two automakers.
Story first published: Monday, April 19, 2021, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X