பிரபல எர்டிகா எம்பிவி காருக்கு இணையான வசதியுடன் மாருதியின் மலிவான செடான் கார்!! என்ன வசதினு தெரியுமா?

மாருதி டீலர்கள் அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் டிசைரின் விஎக்ஸ்ஐ வேரியண்ட்களை ஏற்கனவே துவங்கியுள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள படத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபல எர்டிகா எம்பிவி காருக்கு இணையான வசதியுடன் மாருதியின் மலிவான செடான் கார்!! என்ன வசதினு தெரியுமா?

மாருதி சுஸுகியின் காம்பெக்ட் செடான் காராக விற்பனை செய்யப்பட்டு வரும் டிசைரில் புதிய அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பிரபல எம்பிவி காரான எர்டிகாவில் இருந்து தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

பிரபல எர்டிகா எம்பிவி காருக்கு இணையான வசதியுடன் மாருதியின் மலிவான செடான் கார்!! என்ன வசதினு தெரியுமா?

இதனை உறுதிப்படுத்தும் படம் மோட்டார் அரேனா என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோ திரையினால் கூடுதலாக எந்த வசதியையும் பெற முடியாது. வழக்கமான பாதை மாற்றம், ஸ்பீக்கரின் சத்தத்தை அதிகரித்தல்/ குறைத்தல், ரேடியோ, மீடியா, சிஎச்/ எஃப்.எல்.ஜி மற்றும் டிஎஸ்பி/ ஏஎன்டி உள்ளிட்ட வசதிகளை மட்டுமே பெற முடியும்.

பிரபல எர்டிகா எம்பிவி காருக்கு இணையான வசதியுடன் மாருதியின் மலிவான செடான் கார்!! என்ன வசதினு தெரியுமா?

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த செயல்பாடுகள் அனைத்தையும் இந்த திரை முந்தைய திரையை காட்டிலும் தெளிவான மற்றும் சிறப்பான காட்சிகளுடன் பயணிகளுக்கு வழங்கும். பொத்தான்கள் மூலம் செயல்படும் இந்த புதிய இன்ஃபோடெயின்மெண்ட் திரையை சுற்றிலும் வழக்கம்போல் பிளாஸ்டிக் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல எர்டிகா எம்பிவி காருக்கு இணையான வசதியுடன் மாருதியின் மலிவான செடான் கார்!! என்ன வசதினு தெரியுமா?

இந்த அப்டேட் செய்யப்பட்ட திரை தற்போதைக்கு டிசைர் விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டிசைரின் விலை குறைவான எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டிற்கு அடுத்தப்படியான வேரியண்ட் விஎக்ஸ்ஐ ஆகும்.

பிரபல எர்டிகா எம்பிவி காருக்கு இணையான வசதியுடன் மாருதியின் மலிவான செடான் கார்!! என்ன வசதினு தெரியுமா?

இந்த வேரியண்ட்டில் மேனுவல் ஏசி, ஆடியோ கண்ட்ரோல்களுடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடிகள், பவர் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் பவர் ஜன்னல்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

பிரபல எர்டிகா எம்பிவி காருக்கு இணையான வசதியுடன் மாருதியின் மலிவான செடான் கார்!! என்ன வசதினு தெரியுமா?

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், பகல்/இரவு நேரங்களிலும் பின்புறத்தை காட்டும் கண்ணாடி, இபிடியுடன் ஏபிஎஸ், செண்ட்ரல் லாக்கிங், சீட் பெல்ட் அணியாததை நினைவூட்டும் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் என்ஜின் இம்பொளிசர் போன்றவற்றை டிசைர் விஎக்ஸ்ஐ வேரியண்ட் ஏற்கிறது.

பிரபல எர்டிகா எம்பிவி காருக்கு இணையான வசதியுடன் மாருதியின் மலிவான செடான் கார்!! என்ன வசதினு தெரியுமா?

மாருதி டிசைர் சப் காம்பெக்ட் செடான் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் கே-சீரிஸ் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பிரபல எர்டிகா எம்பிவி காருக்கு இணையான வசதியுடன் மாருதியின் மலிவான செடான் கார்!! என்ன வசதினு தெரியுமா?

இதன் மூலம் 23.26 kmpl மைலேஜை பெற முடியும் என தயாரிப்பு நிறுவனம் சான்றழித்துள்ளது. இந்தியாவில் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகும் செடான் கார் மாடலாக விளங்கும் டிசைருக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை மாருதி நிறுவனம் கடந்த ஆண்டில் வழங்கி இருந்தது. இதன் விலைகள் ரூ.5.93 லட்சத்தில் இருந்து ரூ.8.89 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
2021 Maruti Dzire VXi Gets New Dashboard Infosystem, Borrowed From Ertiga.
Story first published: Friday, February 12, 2021, 15:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X