டிரைவருக்கு மட்டுமல்ல பயணிக்கும் ஏர் பேக் வசதி... பாதுகாப்பை அதிகரிக்க மாருதி ஈகோ காரில் புதிய அம்சம் சேர்ப்பு

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் ஈகோ (Eeco) கார் மாடலில் சைடு ஏர் பேக் வசதியை அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டிரைவருக்கு மட்டுமல்ல பயணிக்கும் ஏர் பேக் வசதி... பாதுகாப்பை அதிகரிக்க மாருதி ஈகோ காரில் புதிய அம்சம் சேர்ப்பு!

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பிரபலமான வாகனங்களில் ஈகோ (Eeco)-வும் ஒன்று. சிறிய வேனை போன்று காட்சியளிக்கும் இந்த வாகனத்தை கார்கோ மற்றும் பயணிகள் வாகனம் என இரு பிரிவுகளில் மாருதி சுசுகி விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த வாகனத்தின் பாதுகாப்பு திறனையே தற்போது நிறுவனம் அதிகரிக்கச் செய்திருக்கின்றது.

டிரைவருக்கு மட்டுமல்ல பயணிக்கும் ஏர் பேக் வசதி... பாதுகாப்பை அதிகரிக்க மாருதி ஈகோ காரில் புதிய அம்சம் சேர்ப்பு!

டிரைவர் மற்றும் அவருக்கு அருகில் அமர்ந்து பயணிக்கும் கோ-டிரைவர் பயணி ஆகிய இருவருக்கும் சைடு ஏர் பேக் வசதியை மாருதி சுசுகி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஓட்டுநர் மற்றும் முன் பக்க பயணி ஆகியோர்களுக்கு அதிக பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் பொருட்டு இச்சிறப்பு அம்சத்தை நிறுவனம் சேர்த்திருக்கின்றது.

டிரைவருக்கு மட்டுமல்ல பயணிக்கும் ஏர் பேக் வசதி... பாதுகாப்பை அதிகரிக்க மாருதி ஈகோ காரில் புதிய அம்சம் சேர்ப்பு!

இந்த அம்சம் கார்கோ அல்லாத அனைத்து ஈகோ வேரியண்டுகளிலும் வழக்கமான அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சேர்ப்பினால் தற்போது ஈகோவின் விலை சற்றே அதிகரித்திருக்கின்றது. ரூ. 8 ஆயிரம் அதிகரித்திருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி மாருதி சுசுகி ஈகோவின் ஆரம்ப விலை ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இதன் உயர்நிலை வேரியண்ட் 7 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

டிரைவருக்கு மட்டுமல்ல பயணிக்கும் ஏர் பேக் வசதி... பாதுகாப்பை அதிகரிக்க மாருதி ஈகோ காரில் புதிய அம்சம் சேர்ப்பு!

மேலே பார்த்த அனைத்து விலை பற்றிய தகவல்களும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். மாருதி சுசுகி நிறுவனம் ஈகோ கார் மாடலில் பாதுகாப்பு அம்சத்தை பணியை சமீப சில காலமாகவே மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் நிறுவனம் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தை (reverse parking assistance system) அனைத்து ஈகோ கார்கோ வேரியண்டுகளிலும் அறிமுகப்படுத்தியது.

டிரைவருக்கு மட்டுமல்ல பயணிக்கும் ஏர் பேக் வசதி... பாதுகாப்பை அதிகரிக்க மாருதி ஈகோ காரில் புதிய அம்சம் சேர்ப்பு!

இந்த அம்சம் சேர்ப்பினாலும் ஈகோவின் விலை சற்றே உயர்ந்த என என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது கார்கோ அல்லாத ஈகோ தேர்வுகளில் பயணி மற்றும் ஓட்டுநருக்கான பக்கவாட்டு ஏர் பேக் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிரைவருக்கு மட்டுமல்ல பயணிக்கும் ஏர் பேக் வசதி... பாதுகாப்பை அதிகரிக்க மாருதி ஈகோ காரில் புதிய அம்சம் சேர்ப்பு!

மாருதி சுசுகி ஈகோவின் கார்கோ அல்லாத தேர்வுகள் ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆகையால், இந்தியாவில் பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற வாகனங்களில் ஒன்றாக இது இருக்கின்றது. இதன் அடிநிலை வேரியண்ட் ஏசி வசதி இல்லாமல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவருக்கு மட்டுமல்ல பயணிக்கும் ஏர் பேக் வசதி... பாதுகாப்பை அதிகரிக்க மாருதி ஈகோ காரில் புதிய அம்சம் சேர்ப்பு!

உயர்நிலை வேரியண்டில் ஏசி ஓர் வழக்கமான அம்சமாக வழங்கப்படுகின்றது. இதேபோல், இன்னும் பல அம்சங்களும் இக்கார் மாடலில் வழக்கமான அம்சங்களாக வழங்கப்படுகின்றன. அந்தவகையில், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், முன் பக்க பயணிகளுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர், ஹெட்லேம்ப் லெவல்லிங் ஃபங்க்சன், அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட், சைல்டு லாக் டூர்கள் மற்றும் விண்டோக்கள் என பல அம்சங்கள் ஈகோவில் வழங்கப்படுகின்றன.

டிரைவருக்கு மட்டுமல்ல பயணிக்கும் ஏர் பேக் வசதி... பாதுகாப்பை அதிகரிக்க மாருதி ஈகோ காரில் புதிய அம்சம் சேர்ப்பு!

மாருதி சுசுகி ஈகோவில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகின்றது. இது ஓர் பிஎஸ்6 எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 73 பிஎச்பி மற்றும் 101 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி மாருதி நிறுவனம் இக்காரை சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்கு வழங்குகின்றது. சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் ஈகோ ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 21.8 கிமீ மைலேஜை வழங்கும்.

Most Read Articles
English summary
Maruti suzuki eeco non cargo variants get dual airbag as standard
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X