இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் ஒற்றை தயாரிப்பின் பக்கம் குவியும் இந்தியர்கள்!

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றான எர்டிகா எம்பிவி 9 ஆண்டுகளில் 7 லட்சம் யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது. இந்திய சந்தையில் இதுவரை எந்தவொரு எம்பிவியும் செய்யாத ஓர் சாதனையை இக்கார் செய்திருப்பது வாகன உலகையே மிரள வைக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுகுறித்த மேலும் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் எர்டிகா-வும் ஒன்று. இது ஓர் எம்பிவி ரக வாகனமாகும். டொயோட்டா இன்னோவாவிற்கு போட்டியாக இந்த கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அதிக நபர்களைக் கொண்ட பெரிய குடும்பத்தினர்களுக்கு ஏற்ற வாகனமாக எர்டிகா இருக்கின்றது.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

அத்துடன், டொயோட்டா இன்னோவாவைக் காட்டிலும் சற்றே விலை குறைவான தேர்வாகவும் இருக்கின்றது. இதுபோன்ற இன்னும் பல்வேறு காரணங்களால் இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு தனித்துவமான டிமாண்ட் நிலவி வருகின்றது. இதன் விளைவாக இந்த கார் மாடல் தற்போது உச்சபட்ச விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா எம்பிவி-யை இந்தியாவில் அறிமுகம் செய்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இந்த 9 ஆண்டு காலத்தில் 6,99,215 யூனிட் வரை எர்டிகா விற்பனையாகி இருக்கின்றது. இது ஒரு மிகப் பெரிய விற்பனை எண்ணிக்கை என்பது இங்கு கவனித்தகுந்தது. இதுவரை எந்தவொரு எம்பிவி ரக காரும் இந்தளவிற்கு இந்தியாவில் விற்பனையாகியது இல்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

ஆகையால், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார் மாடலாக எர்டிகா மாறியிருக்கின்றது. கடந்த 2020ம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் 90,543 யூனிட் வரை இந்த கார் எர்டிகா கார் விற்பனையாகி உள்ளது. ஒவ்வொரு மாதமும் 8,146 யூனிட்டுகள் விற்பனையாகுவதற்கு இணை இதுவாகும்.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

அதிக இட வசதி

மாருதி சுசுகி எர்டிகாவின் கேபின் பகுதி அதிக இட வசதியைக் கொண்டிருக்கின்றது. லெக்ரூம், ஷோல்டர் ரூம் என அனைத்திலும் தாராளமான இட வசதியை இதுக் கொண்டிருக்கின்றது. இரண்டாவது வரிசை இருக்கை மற்றும் மூன்றாவது வரிசை இருக்கை என அனைத்தும் நல்ல இட வசதியைக் கொண்டிருக்கின்றன.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

ஆனால், இதன் மூன்றாவது வரிசை இருக்கை சற்றே நீளம் குறைவானது என்பதனால் சிறுவர்களுக்கு உகந்ததாக அது இருக்கின்றது. அதேநேரத்தில், சற்றே நடுத்தரமான எடைக் கொண்ட நபர்களுக்கும் ஏற்றதாக கடைசி வரிசை காட்சியளிக்கின்றது.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

எர்டிகாவின் பக்கம் மக்கள் அதிகம் குவிவதற்கு மற்றுமொரு காரணமும் இருக்கின்றது. அதன் தோற்றம், பெரிய ஹேட்ச்பேக் காரை போன்று பிரதிபலிக்கின்றது. எம்பிவி என்ற தோற்றத்திற்கு பதிலாக இந்த தோற்றத்தை அது வழங்குகின்றது. மேலும், இதன் பாடி பேனல்கள் மற்றும் டேஷ்போர்டு உள்ளிட்டவை பிரீமியம் தர கார்களுக்கு இணையானதாக காட்சியளிக்கின்றன.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

சிறப்பம்சங்கள்

மாருதி எர்டிகா எம்பிவி காரில் தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், பின் பக்கத்திற்கு ஏசி வெண்டுகள், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், பன்முக தகவல்களை வழங்கும் திரை, பவர் விண்டோக்கள், 12 வோல்ட் சார்ஜிங் பாயிண்ட், யுஎஸ்பி போர்ட், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமிரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

இவற்றுடன், மின்சாரத்தால் கட்டுப்படுத்தக் கூடிய பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள், புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்கள், புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி வால்பகுதி மின் விளக்கு, சாவியில்லா நுழைவு, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

எஞ்ஜின்

மாருதி சுசுகி எர்டிகா காரை தயாரிப்பு நிறுவனம் சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்கு வழங்குவது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்ஜின் தேர்வுக் கொண்ட எர்டிகாக ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.08 கிமீ மைலேஜை வழங்கும். அதிகபட்சமாக 92 பிஎஸ் மற்றும் 122 என்எம் டார்க் திறனை வெளியேற்றும். இதேபோல், 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

விற்பனைனா இப்படி இருக்கும்... இதுவர 7 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கு... மாருதியின் குறிப்பிட்ட தயாரிப்பிற்கு இந்தியாவில் கிடைத்த அமோக வரவேற்பு!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு தானியங்கி டார்க் கன்வெர்டர் தேர்வு வழங்கப்படுகின்றது. இதன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு 19.01 கிமீ மைலேஜையும், தானியங்கி தேர்வு 17.99 கிமீ மைலேஜையும் வழங்கும். இதுபோன்ற பன்முக சிறப்பு வசதிகளை எர்டிகா கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் தற்போது ஒன்பது ஆண்டுகளிலேயே 7 லட்சம் யூனிட்டுகளை தொடுமளவிற்கு இது விற்பனையாகி இருக்கின்றது.

Most Read Articles

English summary
Maruti suzuki ertiga mpv touches 7 lakh unit sales with in 9 years
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X