Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ரஜினியிடம் ஆணையம் கண்டிப்பாக விசாரிக்கும் - வக்கீல்
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கார் ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை தொட்டு மாருதி அசத்தல்!
கார் ஏற்றுமதியில் மாருதி சுஸுகி கார் நிறுவனம் புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி உள்ளது. இந்திய கார் சந்தையில் கிட்டத்தட்ட 50 சதவீத பங்களிப்பை தன் வசம் வைத்துள்ளது மாருதி சுஸுகி. உள்நாட்டு விற்பனையில் யாரும் தொட முடியாத இடத்தில் இருந்து வரும் மாருதி நிறுவனம் ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், கார் ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை மாருதி சுஸுகி தொட்டுள்ளது.

அதாவது, கார் ஏற்றுமதி துவங்கப்பட்டு இதுவரை 2 மில்லியன் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 1986-87 நிதி ஆண்டில் மாருதி கார் நிறுவனம் இந்தியாவிலிருந்து கார் ஏற்றுமதியை துவங்கியது. கடந்த 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 500 கார்களை ஹங்கேரி நாட்டிற்கு மாருதி ஏற்றுமதி செய்தது.

இதைத்தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கார் ஏற்றுமதியை விரிவுப்படுத்தியது. கடந்த 2021-13ம் நிதி ஆண்டு காலக்கட்டத்தில் ஏற்றுமதியில் 1 மில்லியன் கார்கள் என்ற சாதனையை படைத்தது.

இதைதொடர்ந்து, அடுத்து மிக குறுகிய காலத்தில், அடுத்த ஒரு மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. கடைசியாக எஸ் பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனுடன் கார் ஏற்றுமதியில் 20 லட்சம் என்ற புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

தற்போது மாருதி கார் நிறுவனம் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. சிலி, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கார் ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியா போன்றே, பிற நாடுகளிலும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்ட்டோ, பலேனோ, டிசையர், ஸ்விஃப்ட் ஆகிய கார்கள் பிரபலமானதாகவும், வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடல்களாகவும் உள்ளன. கடந்த மாதம் இந்தியாவில் இருந்து ஜிம்னி எஸ்யூவியை ஏற்றுமதி செய்யும் பணிகளை மாருதி சுஸுகி துவங்கியது நினைவிருக்கலாம்.