ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் விற்பனை கார்களில் ஆல்டோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா என குறிப்பிட்ட கார்களுக்கு 2021 பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி கடந்த மாதத்தில் அதன் கார்களின் விலைகளை கணிசமாக உயர்த்தி இருந்தது.

ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

இந்த நிலையில் தற்போது விலை அதிகரிப்பை ஈடுசெய்யும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் அதன் அரேனா கார்களுக்கு சிறப்பு சலுகைகளை மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

இந்த பிப்ரவரி மாதம் வரையில் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி கடந்த மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனையான காராக முதலிடத்தில் உள்ள ஆல்டோ ஹேட்ச்பேக் காருக்கு ரூ.20,000 வரையில் பணம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

இதற்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ் ரூ.20,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே எஸ்-பிரெஸ்ஸோவிற்கு பணம் தள்ளுபடி ரூ.25,000-லும், எக்ஸ்சேன்ஞ் போனஸ் ரூ.20,000 மதிப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Cash Discount Exchange Bonus + Corporate Discount
Alto ₹20,000 ₹15,000 + ₹4,000
S-Presso ₹25,000 ₹20,000 + ₹4,000
Eeco ₹20,000 ₹20,000 + ₹4,000
WagonR ₹ 8,000 (Petrol) / ₹ 13,000 (CNG) ₹15,000 + ₹4,000
Celerio ₹20,000 ₹20,000 + ₹4,000
Swift ₹10,000 ₹20,000 + ₹4,000
Dzire ₹8,000 ₹20,000 + ₹4,000
Dzire (pre-facelift model) ₹25,000 ₹20,000 + ₹4,000
Vitara Brezza ₹10,000 ₹20,000 + ₹4,000
Ertiga - 0 + ₹4,000
Tour V ₹20,000 ₹20,000 + ₹15,000
Tour H2 ₹20,000 ₹20,000 + ₹15,000
Tour S ₹10,000 ₹20,000 + ₹15,000
Tour M ₹20,000 0 + ₹20,000
ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

ஈக்கோவிற்கு பணம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஞ் போனஸ் ரூ.20,000ஆக வழங்கப்பட்டுள்ளது. வேகன்-ஆர் உயரமிக்க ஹேட்ச்பேக் காரின் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ.8,000லும், சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு ரூ.13,000-லும் பணம் தள்ளுபடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

ரூ.15,000 எக்ஸ்சேன்ஞ் போனஸ் வேகன்ஆரின் வேரியண்ட்கள் அனைத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. செலேரியோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள பணம் தள்ளுபடி ரூ.10,000ஆகவும், எக்ஸ்சேன்ஞ் போனஸ் ரூ.20,000 ஆகவும் உள்ளது.

ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

மாருதி டிசைர் ரூ.8,000ல் பணம் தள்ளுபடியையும், ரூ.20,000ல் எக்ஸ்சேன்ஞ் போனஸையும் பெற்றுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறாத டிசைர் கார்களுக்கு ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஃபேஸ்லிஃப்ட்-இல்லாத டிசைர் கார்கள் இந்தியாவில் குறிப்பிட்ட ஷோரூம்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றன.

ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாக்கு ரூ.10,000ல் பணம் தள்ளுபடியையும் ரூ.20,000 எக்ஸ்சேன்ஞ் போனஸையும் மாருதி சுஸுகி வழங்கியுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள மாருதி கார்களுக்கு அந்தந்த சலுகைகளுடன் ரூ.4,000 மதிப்பில் கார்பிரேட் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

மாருதியின் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான கார்களை பொறுத்தவரையில், டூர் வி மற்றும் டூர் எச்2 கார்கள் ரூ.20,000 மதிப்பில் பணம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஞ் போனஸை ஏற்றுள்ளன. டூர் எஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக ரூ.10,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.25,000 எக்ஸ்சேன்ஞ் போனஸை மாருதி அறிவித்துள்ளது.

ரூ.25,000 வரையில் பணம் தள்ளுபடி அறிவிப்பு- இந்த பிப்ரவரியில் மாருதி கார்களை வாங்க வேண்டியதுதான்!!

அதுவே டூர் எம் காருக்கு ரூ.20,000 பணம் தள்ளுபடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்சேன்ஞ் போனஸ் இல்லை. ஆனால் கார்பிரேட் போனஸ் ரூ.20,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற டூர் வி, டூர் எச்2 மற்றும் டூர் எஸ் கார்களுக்கு கார்பிரேட் போனஸாக ரூ.15,000 கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Discounts February 2021 – Alto, Wagon-R, Swift, Brezza
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X