போங்க.. ஸ்விஃப்ட் காரின் விலையை மாருதி உயர்த்திடுச்சு! கொஞ்சம் நாள்ல பிற கார்களின் விலையும் உயரபோகுது!

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் சிஎன்ஜி கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

போங்க.. ஸ்விஃப்ட் காரின் விலையை மாருதி உயர்த்திடுச்சு! கொஞ்சம் நாள்ல பிற கார்களின் விலையும் உயரபோகுது!

இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையுயர்வு மக்களை வாட்டி வதைத்து எடுத்து வருகின்றது. இந்த நிலையில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் பங்காக மக்களை வேதனைக்குள் ஆழ்த்தும் வகையில் புதிய வாகனங்களின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன.

போங்க.. ஸ்விஃப்ட் காரின் விலையை மாருதி உயர்த்திடுச்சு! கொஞ்சம் நாள்ல பிற கார்களின் விலையும் உயரபோகுது!

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கி நான்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரை விலையுயர்வு செய்யும் பணியில் களமிறங்கியிருக்கின்றன. இதனால், சில பட்ஜெட் வாகனங்கள்கூட சற்று காஸ்ட்லியான வாகனங்களாக மாற தொடங்கியிருக்கின்றன.

போங்க.. ஸ்விஃப்ட் காரின் விலையை மாருதி உயர்த்திடுச்சு! கொஞ்சம் நாள்ல பிற கார்களின் விலையும் உயரபோகுது!

இந்த நிலை புதிய வாகன விற்பனையில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தலாம் அஞ்சப்படுகின்றது. இருப்பினும், இதுகுறித்து சற்றும் கவலையின்றி வாகன உற்பத்தியாளர்கள் விலையைக் கணிசமாக உயர்த்திய வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், மாருதி சுசுகி நிறுவனம் அதன் ஸ்விஃப்ட் மற்றும் சிஎன்ஜி கார்களின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போங்க.. ஸ்விஃப்ட் காரின் விலையை மாருதி உயர்த்திடுச்சு! கொஞ்சம் நாள்ல பிற கார்களின் விலையும் உயரபோகுது!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு விரைவில் விலையுயர்வை செய்ய இருப்பதாக நிறுவனம் அறிவித்திருந்தநிலையில் கார்களின் விலையுயர்வு பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரூ. 15 ஆயிரம் வரை விலையுயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

போங்க.. ஸ்விஃப்ட் காரின் விலையை மாருதி உயர்த்திடுச்சு! கொஞ்சம் நாள்ல பிற கார்களின் விலையும் உயரபோகுது!

கார் உற்பத்திக்கு தேவைப்படும் முக்கிய மூல பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்ற காரணத்தினால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. இதனடிப்படையிலேயே மாருதி நிறுவனமும் அதன் ஸ்விஃப்ட் மற்றும் சிஎன்ஜி கார்களின் விலையை தற்போது உயர்த்தியுள்ளது.

போங்க.. ஸ்விஃப்ட் காரின் விலையை மாருதி உயர்த்திடுச்சு! கொஞ்சம் நாள்ல பிற கார்களின் விலையும் உயரபோகுது!

இவ்விரு தயாரிப்புகளின் விலையை மட்டுமின்றி தனது பிற அனைத்து மாடல்களின் விலையையும் உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதியின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போங்க.. ஸ்விஃப்ட் காரின் விலையை மாருதி உயர்த்திடுச்சு! கொஞ்சம் நாள்ல பிற கார்களின் விலையும் உயரபோகுது!

ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வரும்நிலையில், இனி புதிய வாகனங்களை வாங்குவதை கனவாக்கும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வருகின்றன.

போங்க.. ஸ்விஃப்ட் காரின் விலையை மாருதி உயர்த்திடுச்சு! கொஞ்சம் நாள்ல பிற கார்களின் விலையும் உயரபோகுது!

விலையை உயர்த்தி வரும் அதேவேலையில் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக புதிய சலுகைகள் மற்றும் எளிய கடன் திட்டங்களை நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. சமீபத்தில்கூட ஸ்மார்ட் கார் ஃபைனான்ஸ் எனும் திட்டத்தை நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Increases Swift And CNG Cars Price In India. Read In Tamil.
Story first published: Monday, July 12, 2021, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X