Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?

Maruti Suzuki நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ரூ. 200 கோடி அபராதம் வழங்கியிருக்கின்றது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் Maruti Suzuki-யும் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியாவில் எப்போதுமே ஓர் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. எனவேதான் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் Maruti இன் தயாரிப்புகள் எப்போதுமே முதல் இடத்தைப் பிடிக்கின்றன.

Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில், இந்த பிரமாண்ட நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India) ஓர் மிகப் பெரிய தொகையை அபராதமாக விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதற்காக ரூ. 200 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?

இந்த அபராதம் நடவடிக்கை குறித்து இந்திய போட்டி ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "Maruti Suzuki நிறுவனம் ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாக தனது டீலர்களைக் கட்டுப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது". அதாவது, டீலர்கள் சுதந்திரமாக தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்க நிறுவனம் ஓர் கட்டுப்பாட்டை வழங்கியதாகவும், மேலும், தங்களின் அனுமதி இன்றி எந்தவொரு சலுகைகையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கக் கூடாது என்றும் நிறுவனம் தனது டீலர்களைக் கட்டுப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?

இந்த நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதற்காகவே Maruti Suzuki நிறுவனத்திற்கு மாபெரும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Maruti Suzuki நிறுவனத்தால் போடப்பட்ட ஒப்பந்தமானது, அவர்கள் பரிந்துரைத்ததைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடியை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?

இதனைக் கண்கானித்த பெருநிறுவன விவகார அமைச்சகம் இத்தகைய நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் மிகப் பெரிய அபராதத் தொகையை மாருதிக்கு வழங்கியிருக்கின்றது. மாருதியின் இந்த செயல் நுகர்வோரைப் பாதிக்கும் ஓர் செயலாகும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் இலவசங்களை வழங்க நிறுவனம் அனுமதிக்கவில்லை.

Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?

இவற்றை வழங்க வேண்டுமானால் தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஓர் விற்பனைக்கு எதிரான விரோத ஒப்பந்தத்திலேயே நிறுவனம் தங்களின் விற்பனையாளர்களிடத்தில் கையொப்பம் வாங்கியிருக்கின்றது. இதனை மீறி செயல்படும் விற்பனையாளர்கள் மீது Maruti Suzuki நிறுவனம் சில கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சகம் தெரிவிக்கின்றது.

Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?

விற்பனையாளர் பிரதிநிதி, மேனேஜர் மற்றும் குழு தலைவர் ஆகியோரைகூட விட்டு வைக்காமல் Maruti Suzuki நிறுவனம் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதுபோன்று முற்றிலும் நியாயமற்ற வணிக செயல்பாட்டில் Maruti ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?

Maruti Suzuki நிறுவனம் சலுகைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடவில்லை. தனியாக ஓர் குழு அமைத்து அதன் வாயிலாக பெரியளவு அபராதம் வழங்குதல், அச்சுறுத்தலை வழங்குதல் மற்றும் விநியோகத்தை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான செயல்களிலும் நிறுவனம் ஈடுபட்டிருக்கின்றது.

Maruti Suzuki நிறுவனத்திற்கு 200 கோடி ரூபா அபராதம்... ஏன் தெரியுமா?

Maruti இன் இந்த செயல் இந்திய போட்டி ஆணையம் (CCI)-ஆல் உருவாக்கப்பட்ட பிரிவு 3 (4) (e) பிரிவு 3 (1) 2002 ஆகியவற்றிற்கு எதிரானவை ஆகும். இதன் அடிப்படையிலேயே Maruti நிர்வாகத்தின்மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Maruti suzuki india gets rs 200 cr fine from competition commission
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X