Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான Maruti Suzuki கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை

2020 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், Maruti Suzuki நிறுவனம் கடந்த ஜூலையில் 37 சதவீதம் அதிகமாக கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது, இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஜூலை மாத விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை கூட முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை

ஆனால் கடந்த ஜூலையில் 1,33,732 Maruti Suzuki கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இதற்கு முந்தைய 2021 ஜூன் மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தாலும் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 8% அதிகமாகும். Maruti Suzuki கார்கள் வழக்கம்போல் முந்தைய மாதத்தை காட்டிலும் கடந்த ஜூலையில் அதிகமாகவே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை

2020 ஜூலை உடன் ஒப்பிடுகையில் Alto மற்றும் Celerio கார்களின் விற்பனை எண்ணிக்கை மட்டுமே குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக விரைவில் புதிய தலைமுறை அப்கிரேட்டை ஏற்கவுள்ள Celerio-வின் விற்பனை அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. 2020 ஜூலையில் 4,799 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த இந்த மாடல் கடந்த மாதத்தில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.

Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை
No Maruti Jul-21 Jul-20 Growth (%) Share (%)
1 WagonR 22,836 13,515 68.97 17.08
2 Swift 18,434 10,173 81.21 13.78
3 Baleno 14,729 11,575 27.25 11.01
4 Ertiga 13,434 8,504 57.97 10.05
5 Alto 12,867 13,654 -5.76 9.62
6 Brezza 12,676 7,807 62.37 9.48
7 Dzire 10,470 9,046 15.74 7.83
8 EECO 10,057 8,501 18.30 7.52
9 S-Presso 6,818 3,604 89.18 5.10
10 XL6 4,190 1,874 123.59 3.13
11 Ignis 3,797 2,421 56.84 2.84
12 S-Cross 1,972 451 337.25 1.47
13 Ciaz 1,450 1,303 11.28 1.08
14 Celerio 2 4,799 -99.96 0.00
- Total 1,33,732 92,227 45.00 100.00

இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் உள்ள Maruti-இன் உயரம் அதிகம் கொண்ட மலிவான ஹேட்ச்பேக் காரான WagonR கடந்த 2021 ஜூலை மாதத்தில் 22,836 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் 12,515 WagonR கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை

இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பினும், Maruti Suzuki நிறுவனத்தின் மொத்த விற்பனையில் வெறும் 17.08% பங்கை மட்டுமே இந்த உயரமான ஹேட்ச்பேக் கார் கொண்டுள்ளது. இதில் இருந்து இந்த நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருவதை அறிய முடிகிறது.

Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை

இரண்டாவது இடத்தில் மற்றொரு பிரபலமான ஹேட்ச்பேக் மாடலான Swift உள்ளது. Swift கடந்த மாதத்தில் மொத்தம் 18,434 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2020 ஜூலை உடன் ஒப்பிடுகையில் 8,261 யூனிட்கள் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 10,173 Swift கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை

மூன்றாவது இடத்தை Baleno மாடல் 14,729 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. அதுவே 2020 ஜூலையில் 11,575 Baleno கார்களையே Maruti Suzuki நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால் இந்த பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரின் விற்பனை எண்ணிக்கை 27.25 அதிகரித்துள்ளது.

Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை

நான்காவது இடத்தை இந்தியாவின் நம்பர்.1 எம்பிவி காரான Maruti Ertiga பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 13,434 Ertiga எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020 ஜூலையில் விற்கப்பட்ட Ertiga கார்களை காட்டிலும் 57.97 சதவீதம் அதிகமாகும்.

Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை

இதற்கு அடுத்த இடத்தில், Maruti Suzuki-இன் மற்றொரு பட்ஜெட் ரக மாடலான Alto மொத்தம் 12,867 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் முன்பே கூறியதுபோல் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் Alto கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் 5.76% குறைந்துள்ளது.

Maruti Celerio கார்களின் விற்பனைக்கு என்னாச்சு? ஜூலையில் வெறும் 2 யூனிட்கள் மட்டுமே விற்பனை

Maruti Suzuki-இன் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான Vitara Brezza 12,676 யூனிட்கள் விற்கப்பட்டு, ஆறாவது இடத்தை தனதாக்கியுள்ளது. ஆனால் 2020 ஜூலையில் 10 ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த வகையில் பார்த்தோமேயானால், Vitara Brezza-இன் விற்பனை இரட்டிப்பாகி உள்ளது.

Most Read Articles
English summary
Maruti Suzuki India Limited July 2021 Sales Stood At 1,33,732.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X