வேகன்ஆர் சிஎன்ஜி கார்களை இனி இந்த 3 நிறங்களிலும் வாங்கலாம்!! மாருதி சுஸுகி அறிவிப்பு!

வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி காருக்கு மூன்று புதிய நிறங்களை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வேகன்ஆர் சிஎன்ஜி கார்களை இனி இந்த 3 நிறங்களிலும் வாங்கலாம்!! மாருதி சுஸுகி அறிவிப்பு!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம் மாருதி கார்களின் மலிவான விலைகளாகும்.

வேகன்ஆர் சிஎன்ஜி கார்களை இனி இந்த 3 நிறங்களிலும் வாங்கலாம்!! மாருதி சுஸுகி அறிவிப்பு!

அதேநேரம் அவ்வப்போது விற்பனை வாகனங்களில் கொண்டுவரப்படும் அப்கிரேட்களும் மாருதியை இந்தியாவில் முன்னணி நிறுவனமாக விளங்க வைக்கின்றன. இந்த வகையில் தான் தற்போது வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி காரில் புதியதாக மூன்று நிறத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வேகன்ஆர் சிஎன்ஜி கார்களை இனி இந்த 3 நிறங்களிலும் வாங்கலாம்!! மாருதி சுஸுகி அறிவிப்பு!

உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக்கான வேகன்ஆர், மாருதி சுஸுகியின் அதிகளவில் விற்பனையாகும் கார் மாடலாக விளங்குகிறது. தற்போதைய கொரோனா சூழலுக்கு மத்தியிலும் ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது 15,000 யூனிட்களாவது வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வேகன்ஆர் சிஎன்ஜி கார்களை இனி இந்த 3 நிறங்களிலும் வாங்கலாம்!! மாருதி சுஸுகி அறிவிப்பு!

இத்தகைய காரின் சிஎன்ஜி மாடலை இனி வாடிக்கையாளர்கள் போல்சைடு நீலம், நட்மெக் ப்ரவுன் மற்றும் ஆட்டம் ஆரஞ்ச் என்ற நிறங்களிலும் வாங்கலாம். வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி பிஎஸ்6 கார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வேகன்ஆர் சிஎன்ஜி கார்களை இனி இந்த 3 நிறங்களிலும் வாங்கலாம்!! மாருதி சுஸுகி அறிவிப்பு!

அப்போதில் இருந்து மேற்கூறப்பட்ட புதிய நிறங்கள் வழங்கப்படும் வரையில் வெள்ளை, க்ரே மற்றும் சில்வர் என்ற மூன்று நிறங்களில் விற்கப்பட்டு வந்தது. புதிய நிறங்களுடன் இந்த பழைய நிறத்தேர்வுகளிலும் இந்த சிஎன்ஜி கார் தொடர்ந்து கிடைக்கும்.

வேகன்ஆர் சிஎன்ஜி கார்களை இனி இந்த 3 நிறங்களிலும் வாங்கலாம்!! மாருதி சுஸுகி அறிவிப்பு!

வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி கார் எல்.எக்ஸ்.ஐ மற்றும் எல்.எக்ஸ்.ஐ (O) என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேகன்ஆரில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜினை மாருதி நிறுவனம் வழங்குகிறது.

வேகன்ஆர் சிஎன்ஜி கார்களை இனி இந்த 3 நிறங்களிலும் வாங்கலாம்!! மாருதி சுஸுகி அறிவிப்பு!

இந்த என்ஜின் சிஎன்ஜி மாடலில் அதிகப்பட்சமாக 58 பிஎச்பி மற்றும் 78 என்எம் டார்க் திறனையும், மற்ற வேரியண்ட்களில் 67 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

வேகன்ஆர் சிஎன்ஜி கார்களை இனி இந்த 3 நிறங்களிலும் வாங்கலாம்!! மாருதி சுஸுகி அறிவிப்பு!

வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி காரில் 60 லிட்டர் கொள்ளளவில் சிஎன்ஜி டேங்க் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வேகன்ஆரின் மற்ற பெட்ரோல் மாடல்களை காட்டிலும் சிஎன்ஜி மாடல்களில் கூடுதலாக 10கிமீ வரையில் மைலேஜை பெற முடியும்.

வேகன்ஆர் சிஎன்ஜி கார்களை இனி இந்த 3 நிறங்களிலும் வாங்கலாம்!! மாருதி சுஸுகி அறிவிப்பு!

மாருதி வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.4.66 லட்சத்தில் இருந்து ரூ.6.18 லட்சம் வரையில் உள்ளன. இதன் இரு சிஎன்ஜி வேரியண்ட்களின் விலைகள் ரூ.5.46 லட்சம் மற்றும் ரூ.5.53 லட்சமாக உள்ளன.

Most Read Articles

English summary
Maruti WagonR CNG gets more interesting colours. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X