உங்க கார்ல கூலிங் கம்மியா இருக்கா? இதோ மாருதியின் சிறப்பு சர்வீஸ் கேம்ப்... அடுத்த மாசம் 20 தேதி வரை மட்டுமே!
கோடை வெயில் காலத்தை முன்னிட்டு ஏசிக்காக பிரத்யேக சர்வீஸ் கேம்பை மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி கோடை வெயில் காலத்தை முன்னிட்டு சிறப்பு கார் சர்வீஸ் முகாமை அறிவித்திருக்கின்றது. 'உங்கள் காரை குளிர்ச்சியாக்குங்கள்' (Cool your Car) எனும் கேம்பையே நிறுவனம் தற்போது இந்தியாவில் தொடங்கி வைத்திருக்கின்றது.

நாடு முழுவதும் உள்ள நெக்ஸா சர்வீஸ் நெட்வொர்க்கின் வாயிலாக இச்சிறப்பு முகாமை மேற்கொண்டு வருகின்றது, மாருதி. ஏசியை சர்வீஸ் செய்வதற்காகவே மட்டுமே இச்சிறப்பு முகாமை மாருதி நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆகையால், பிரத்யேகமாக இதற்கான சர்வீஸ் மட்டுமே இந்த கேம்பில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

ஏசி ரிப்பேர்கள், ஏசி ஃபில்டர் கோளாறு, ஏசி கேஸ் நிரப்புதல், ஏசியின் பழுதான கருவியை மாற்றுதல் மற்றும் கன்டென்ஷனரை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளே மாருதியின் உங்கள் காரை குளிர்ச்சியாக்குங்கள் கேம்பில் செய்யப்பட இருக்கின்றன.

ஆகையால், உங்கள் மாருதி காரில் குளிர்ச்சியான காற்று மிகக் குறைவாக வருவதாக எண்ணினால் உடனடியாக இந்த சர்வீஸ் மையத்தை நீங்கள் அணுகலாம். குறைந்த கட்டணத்தில் இச்சேவையை மாருதி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கட்டணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஏசி சர்வீஸ் மட்டுமின்றி வைரஸ் அழிப்பு பணியையும் இச்சிறப்பு முகாமில் மாருதி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இதுவரை இல்லாத அளவில் மக்களை பாதித்து வருகின்றது. கடுமையான ஆக்ஸிஜன் மற்றும் மருத்து பொருட்கள் பஞ்சத்தில் இந்தியா சிக்கியுள்ளது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தைத் தவிர்க்கும் வகையில் சானிட்டைசிங் பணியை ஏசி சர்வீஸின்போது செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. சர்வீஸின்போது வைரஸ் தொற்றுகுறித்த அச்சத்தை வாடிக்கையாளர்களிடத்தில் தவிர்க்கும் நோக்கிலும் இந்த சானிட்டைசிங் பணியை மாருதி கையிலெடுத்துள்ளது.

இதுமட்டுமின்றி காரை சர்வீஸ் செய்யும் அனைத்து பணியாளர்களும் வைரஸ் பாதுகாப்பு அம்சங்களுடன் சர்வீஸை மேற்கொள்வர் என மாருதி அறிவித்துள்ளது. ஆகையால், வைரஸ் தொற்று அச்சம் இன்றி இந்த சேவையை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவையாக உங்கள் காரை குளிர்ச்சியாக வைத்திருங்கள் சேவையை இந்தியாவில் தொடங்கியிருக்கும் மாருதி சுசுகி நிறுவனம், அண்மையில்தான் அதன் தயாரிப்புகளின் விலையைக் கணிசமாக உயர்த்தியது. 1.6 சதவீதம் வரை கார்களின் விலையை நிறுவனம் உயர்த்தியது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








