ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் மாருதி சூப்பர் கேரி அறிமுகம்... செம்ம இனி பாதுகாப்பா ரிவர்ஸ் எடுக்கலாம்!!

மாருதி சுசுகி நிறுவனம் அதன் சூப்பர் கேரி மினி லோடு வேனில் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் குறித்த கூடுதல் முக்கிய தகவலைக் கீழே காணலாம்.

ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் மாருதி சூப்பர் கேரி அறிமுகம்... செம்ம இனி பாதுகாப்பா ரிவர்ஸ் எடுக்கலாம்!!

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான வர்த்தக பிரிவு வாகனங்களில் சூப்பர் கேரி (Super Carry) மாடலும் ஒன்று. இலகு ரக வர்த்தக வாகனமான இதில் மாருதி சுசுகி நிறுவனம் புதிதாக ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் தொழில்நுட்பத்தை (Reverse Parking Assist System) அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் மாருதி சூப்பர் கேரி அறிமுகம்... செம்ம இனி பாதுகாப்பா ரிவர்ஸ் எடுக்கலாம்!!

இது ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங்கை மோதல் ஏற்படா வண்ணம் மேற்கொள்ள உதவியாக இருக்கும். எனவேதான் இதனை முக்கியமான பாதுகாப்பு அம்சமாக கருதப்படுகின்றது. இப்புதிய பாதுகாப்பு அம்சத்தை வழக்கமான சேர்ப்பாக சூப்பர் கேரி மினி லோடு வேனில் மாருதி அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் மாருதி சூப்பர் கேரி அறிமுகம்... செம்ம இனி பாதுகாப்பா ரிவர்ஸ் எடுக்கலாம்!!

ஆகையால், ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை என அனைத்து விதமான வேரியண்ட் சூப்பர் கேரி வாகனத்திலும் இந்த சிஸ்டம் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்புதிய பாதுகாப்பு அம்சம் சேர்ப்பின் காரணமாக சூப்பர் கேரியின் விலையைக் கணிசமாக உயர்ந்துள்ளது.

ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் மாருதி சூப்பர் கேரி அறிமுகம்... செம்ம இனி பாதுகாப்பா ரிவர்ஸ் எடுக்கலாம்!!

ரூ. 18 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. ஆகையால், 2021 சூப்பர் கேரி மினி லோடு வேன் ரூ. 4.48 லட்சம் தொடங்கி ரூ. 5.46 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் மாருதி சூப்பர் கேரி அறிமுகம்... செம்ம இனி பாதுகாப்பா ரிவர்ஸ் எடுக்கலாம்!!

மாருதி சுசுகி நிறுவனம் சூப்பர் கேரி வாகனத்தை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், பிஎஸ் தரத்திலான 1.2 லிட்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் மாருதி சூப்பர் கேரி அறிமுகம்... செம்ம இனி பாதுகாப்பா ரிவர்ஸ் எடுக்கலாம்!!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 72.4 பிஎச்பி மற்றும் 98 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது பெட்ரோல் எஞ்ஜின் வசதிக் கொண்ட சூப்பர் கேரியின் திறன்குறித்த தகவலாகும். சிஎன்ஜி எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் சூப்பர் கேரி அதிகபட்சமாக 64.3 பிஎச்பி மற்றும் 85 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் மாருதி சூப்பர் கேரி அறிமுகம்... செம்ம இனி பாதுகாப்பா ரிவர்ஸ் எடுக்கலாம்!!

சூப்பர் கேரி மினி ட்ரக் 2183 மிமீ நீளம் மற்றும் 1488 மிமீ அகலத்தைக் கொண்டது. இதனை பிரத்யேகமாக லோடு ஏற்றிச் செல்வதற்காகவே நிறுவனம் வடிவமைத்துள்ளது. சுமார் 740 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை இது ஏற்றிச் செல்லும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மிமீ ஆகும்.

ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் மாருதி சூப்பர் கேரி அறிமுகம்... செம்ம இனி பாதுகாப்பா ரிவர்ஸ் எடுக்கலாம்!!

ஆகையால், லேசான கரடு-முரடான சாலையைக் கூட அசால்டாக கடந்துவிடும். சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக மேக்பெர்ஷன் ஸ்டரட்கள் முன்பக்கத்திலும், லீஃப் ஸ்பிரிங் வசதிக் கொண்ட ரிஜிட் ஆக்சில் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் மாருதி சூப்பர் கேரி அறிமுகம்... செம்ம இனி பாதுகாப்பா ரிவர்ஸ் எடுக்கலாம்!!

இத்துடன், இலகு ரக ஸ்டியரிங் வீல், மொபைல் போன் சார்ஜர், ட்யூவல் அசிஸ்ட் க்ரிப், பன்முக பயன்பாட்டு வசதிக் கொண்ட ஸ்டோரேஜ் இட வசதி, லாக் செய்யக்கூடிய குளோவ் பாக்ஸ் மற்றும் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளிட்டவை இவ்வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Maruti Suzuki Launches Super Carry LCV With Reverse Parking Assist System. Read In Tamil.
Story first published: Friday, April 30, 2021, 17:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X