வரப்போகும் தீபாவளிக்கு மாருதி சுஸுகியின் சலுகைகள்!! ஆல்டோவில் இருந்து எஸ்-க்ராஸ் வரையில் அனைத்திற்கும்!

நெக்ஸா மற்றும் அரேனா மாடல்களுக்கு தீபாவளிக்கான சிறப்பு தள்ளுபடி சலுகைகளை மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றை அட்டவணைகளாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வரப்போகும் தீபாவளிக்கு மாருதி சுஸுகியின் சலுகைகள்!! ஆல்டோவில் இருந்து எஸ்-க்ராஸ் வரையில் அனைத்திற்கும்!

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருகின்றன. பொதுவாக பண்டிகை என்றாலே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் குதுகலமாகி விடுகின்றன. இந்த வகையில் இந்தியாவின் மிக பெரிய பயணிகள் வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி அதன் அரேனா மற்றும் நெக்ஸா டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

வரப்போகும் தீபாவளிக்கு மாருதி சுஸுகியின் சலுகைகள்!! ஆல்டோவில் இருந்து எஸ்-க்ராஸ் வரையில் அனைத்திற்கும்!

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் இந்த சலுகையின்படி, பலேனோ ஹேட்ச்பேக் காரின் அனைத்து மேனுவல் வேரியண்ட்களையும் மொத்தம் ரூ.27,500 மதிப்பிலான சலுகைகளுடன் வாங்கலாம். இதில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் கார்பிரேட் தள்ளுபடி உள்ளிட்டவை அடங்குகின்றன.

வரப்போகும் தீபாவளிக்கு மாருதி சுஸுகியின் சலுகைகள்!! ஆல்டோவில் இருந்து எஸ்-க்ராஸ் வரையில் அனைத்திற்கும்!

பலேனோவின் ஆண்டு நிறைவு எடிசன்களுக்கு ரூ.17,500 மதிப்பிலான சலுகைகளும், குறைந்தப்பட்சமாக இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் சிவிடி வேரியண்ட்டிற்கு ரூ.12,500 மதிப்பிலான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் பலேனோ சிவிடி வேரியண்ட்டிற்கு பணம் தள்ளுபடி கிடையாது. சியாஸ் மற்றும் அதன் ஆண்டுநிறைவு எடிசனிற்கு ரூ.30,000 மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வரப்போகும் தீபாவளிக்கு மாருதி சுஸுகியின் சலுகைகள்!! ஆல்டோவில் இருந்து எஸ்-க்ராஸ் வரையில் அனைத்திற்கும்!
Diwali Discounts On Maruti Nexa Cars
Model Cash Discount Exchange Bonus Corporate Discount Total
Baleno MT Variants ₹10,000 ₹10,000 ₹2,500 ₹27,000
Baleno Sigma Anniversary Edition ₹18,700 ₹10,000 ₹2,500 ₹17,500
Baleno Delta Anniversary Edition ₹11,990 ₹10,000 ₹2,500 ₹17,500
Baleno CVT - ₹10,000 ₹2,500 ₹12,500
Ciaz - ₹25,000 ₹2,500 ₹30,000
Ciaz Anniversay Edition ₹24,990 ₹25,000 ₹2,500 ₹30,000
Ignis Sigma ₹5,000 ₹10,000 ₹2,500 ₹17,500
Ignis Sigma Anniversary Edition ₹19,200 ₹10,000 ₹2,500 ₹12,500
Ignis Delta ₹5,000 ₹10,000 ₹2,500 ₹17,500
Ignis Delta Anniversary Edition ₹13,700 ₹10,000 ₹2,500 ₹12,500
Ignis Zeta, Alpha ₹5,000 ₹10,000 ₹2,500 ₹17,500
Ignis Zeta, Alpha Anniversary Edition ₹13,700 ₹10,000 ₹2,500 ₹12,500
S-Cross ₹15,000 ₹25,000 ₹5,000 ₹45,000
S-Cross Anniversary Edition ₹10,000 ₹25,000 ₹5,000 ₹30,000

அளவில் சிறிய இக்னிஸ் காருக்கு வேரியண்ட்களை பொறுத்து ரூ.12,500 மற்றும் ரூ.17,500 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்யும் விலைமிக்க காராக விளங்கும் எஸ்-க்ராஸிற்கு அதிரடியாக ரூ.45,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் இதன் ஆண்டு நிறைவு எடிசனிற்கு ரூ.30,000 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

வரப்போகும் தீபாவளிக்கு மாருதி சுஸுகியின் சலுகைகள்!! ஆல்டோவில் இருந்து எஸ்-க்ராஸ் வரையில் அனைத்திற்கும்!

நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்குள் ஆல்டோ 800 வாங்குவோர் சுமார் ரூ.43,000-யும், ஆல்டோ 800-இன் ஸ்டாண்டர்ட் மாடலை வாங்குவோர் ரூ.38,000-ஐயும் சேமிக்க முடியும். பெரும்பாலானோரால் வாங்கப்படும் ஆல்டோ 800 காருக்கு ரூ.25,000 பணம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டிருப்பது உண்மையில் அருமையான விஷயம்.

வரப்போகும் தீபாவளிக்கு மாருதி சுஸுகியின் சலுகைகள்!! ஆல்டோவில் இருந்து எஸ்-க்ராஸ் வரையில் அனைத்திற்கும்!

ஆனால் இதன் சிஎன்ஜி வெர்சனுக்கும், எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வெர்சனுக்கும் சற்று குறைவாக ரூ.18,000 மதிப்பிலான சலுகைகளே வழங்கப்பட்டுள்ளன. இவற்றிற்காவது பரவாயில்லை, ஈக்கோ சிஎன்ஜி மற்றும் வேகன்ஆர் சிஎன்ஜி கார்களுக்கு ரூ.12,500 மதிப்பிலான சலுகைகளே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிஎன்ஜி கார்கள் எதற்கும் பணம் தள்ளுபடி சலுகையினை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கவில்லை.

Diwali Discounts On Maruti Arena Cars
Model Cash Discount Exchange Bonus Corporate Discount Total
Alto 800 ₹25,000 ₹15,000 ₹3,000 ₹43,000
Alto 800 Std ₹20,000 ₹15,000 ₹3,000 ₹38,000
Alto 800, S-Presso CNG - ₹15,000 ₹3,000 ₹18,000
S-Presso ₹30,000 ₹15,000 ₹3,000 ₹48,000
Eeco ₹5,000 ₹10,000 ₹2,500 ₹17,500
Eeco CNG - ₹10,000 ₹2,500 ₹12,500
Eeco Ambulance - - ₹2,500 ₹2,500
WagonR ₹5,000 ₹10,000 ₹2,500 ₹17,500
WagonR CNG - ₹10,000 ₹2,500 ₹12,500
Swift ₹12,000 ₹10,000 ₹2,500 ₹24,500
Swift Special Edition ₹16,500 ₹10,000 ₹2,500 ₹12,500
Dzire ₹7,000 ₹10,000 ₹2,500 ₹19,500
Dizre Special Edition ₹21,500 ₹10,000 ₹2,500 ₹12,500
Vitara Brezza ₹5,000 ₹10,000 ₹2,500 ₹17,500
வரப்போகும் தீபாவளிக்கு மாருதி சுஸுகியின் சலுகைகள்!! ஆல்டோவில் இருந்து எஸ்-க்ராஸ் வரையில் அனைத்திற்கும்!

ஈக்கோ மற்றும் வேகன்ஆரின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூ.17,500 மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பதிலேயே அதிகப்பட்சமாக எஸ்-பிரெஸ்ஸோ மைக்ரோ-எஸ்யூவி காருக்கு மொத்தம் ரூ.48,000 மதிப்பிலான சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். குறைந்தப்பட்சமாக ஈக்கோ ஆம்புலன்ஸிற்கு ரூ.2,500 கார்பிரேட் தள்ளுபடி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

வரப்போகும் தீபாவளிக்கு மாருதி சுஸுகியின் சலுகைகள்!! ஆல்டோவில் இருந்து எஸ்-க்ராஸ் வரையில் அனைத்திற்கும்!

ஸ்விஃப்ட்டிற்கு ரூ.24,500 வரையிலான சலுகைகளும், டிசைர் மாடலுக்கு ரூ.19,500 வரையிலான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக நமக்கு தற்போது கிடைக்க பெற்றுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி நிர்ணயித்துள்ள காலத்திற்குள் விட்டாரா பிரெஸ்ஸாவை ரூ.17,500 சேமிப்புடன் வாங்கலாமாம்.

வரப்போகும் தீபாவளிக்கு மாருதி சுஸுகியின் சலுகைகள்!! ஆல்டோவில் இருந்து எஸ்-க்ராஸ் வரையில் அனைத்திற்கும்!

இந்த விபரங்கள் அனைத்தும் செய்திகளில் கூறப்படுவை, இது தொடர்பாக இதுவரையில் மாருதி சுஸுகி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே இந்த சலுகைகளை உறுதிப்படுத்தி கொள்ள அருகில் உள்ள மாருதி டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

Most Read Articles

English summary
Martui Cars Diwali Discounts.
Story first published: Thursday, October 7, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X