மாருதியின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை... பிரம்மாண்டமா கட்டியிருக்காங்க... எந்த மாநிலத்தில் தெரியுமா?...

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை கட்டியிருக்கின்றது. இந்த மருத்துவமனைகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மாருதியின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை... பிரமாண்டமா கட்டியிருக்காங்க... எந்த மாநிலத்தில் தெரியுமா?...

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா மல்டிஸ்பெஷாலிட்டி எனப்படும் பன்முக நோய் தொற்றுக்கான சிகிச்சை மருத்துவமனையைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மருத்துவமனை குறித்த முக்கிய தகவல்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

மாருதியின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை... பிரமாண்டமா கட்டியிருக்காங்க... எந்த மாநிலத்தில் தெரியுமா?...

குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் உள்ள சிதப்பூர் பகுதியிலேயே மாருதி சுசுகி நிறுவனம், அதன் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டமைத்திருக்கின்றது. சுமார் 126 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தொகை முழுக்க முழுக்க மாருதி சுசுகி நிறுவனம் அறக்கட்டளையின் வாயிலாக பெறப்பட்டதாகும்.

மாருதியின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை... பிரமாண்டமா கட்டியிருக்காங்க... எந்த மாநிலத்தில் தெரியுமா?...

ஸைடஸ் குழுமத்தின் (Zydus Group) கூட்டணியில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டிருக்கின்றது. ராமன் பாய் அறக்கட்டளையின் மேற்பார்வையிலேயே இந்த மருத்துவமனை இயங்க இருக்கின்றது. தற்போது நாடே பெரும் இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றது.

மாருதியின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை... பிரமாண்டமா கட்டியிருக்காங்க... எந்த மாநிலத்தில் தெரியுமா?...

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொத்து கொத்தாக அது மக்களை பாதித்து வருகின்றது. இதனால் நாடு முழுவதிலும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பிய வண்ணம் இருக்கின்றது.

மாருதியின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை... பிரமாண்டமா கட்டியிருக்காங்க... எந்த மாநிலத்தில் தெரியுமா?...

குறிப்பாக, அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கை வசதியே இல்லாத அவல நிலையே காணப்படுகின்றது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிலேயே மாருதி சுசுகி நிறுவனம் புதிய மருத்துவமனையை குஜராத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

மாருதியின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை... பிரமாண்டமா கட்டியிருக்காங்க... எந்த மாநிலத்தில் தெரியுமா?...

இதுதற்போதைய மாநிலத்தின் மிகவும் அவலமான சூழ்நிலைக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் 24 மணி நேர மருத்துவமனையாகும். ஆகையால், எந்த நேரத்தில் வேண்டுமானால் இந்த மருத்துவமனையை மக்கள் அணுகலாம்.

மாருதியின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை... பிரமாண்டமா கட்டியிருக்காங்க... எந்த மாநிலத்தில் தெரியுமா?...

அவசர சிகிச்சை, ட்ராமா, அட்வான்ஸ்ட் நோய் கண்டறியும் வசதி, இருதிய சிகிச்சை, கண் சிகிச்சை, தீக் காயங்களுக்கான சிகிச்சை, இஎன்டி, தாய்-சேய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இந்த மருத்துவமனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதியின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை... பிரமாண்டமா கட்டியிருக்காங்க... எந்த மாநிலத்தில் தெரியுமா?...

சுமார் 7.5 ஏக்கரில் கட்டப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையில் தற்போது ஆரம்பகட்டமாக 50 படுக்கைகள் மட்டுமே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.மிக விரைவில் இதனை நூறாக உயர்த்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவாக்கம் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதியின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை... பிரமாண்டமா கட்டியிருக்காங்க... எந்த மாநிலத்தில் தெரியுமா?...

தற்போது, இந்த மருத்துவமனையை கோவிட்-19 நோயாளிக்களுக்கான சிறப்பு சிகிச்சை மையமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மிக விரைவில் இந்த இக்கட்டான சூழ்நிலை சுமூக நிலைக்கு மாறிய பின்னர் மேற்கூறிய அனைத்து சிகிச்சை பிரிவுகளுடன் மருத்துவமனை இயங்க ஆரம்பிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
Maruti Suzuki Opens MultiSpeciality Hospital In Gujarat. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X