ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... அதிக சிறப்பு அம்சங்களுடன் புதிய பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி!

கடும் சந்தைப் போட்டி காரணமாக, ஏராளமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை மாருதி கார் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய மாடலின் வருகை குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... அதிக சிறப்பு அம்சங்களுடன் புதிய பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்களுடன் மாருதி நிறுவனத்தின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் காரணமாக, விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... அதிக சிறப்பு அம்சங்களுடன் புதிய பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி!

இருப்பினும், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் இப்போது எக்கச்சக்கமான மாடல்கள் வரிசை கட்டிவிட்டன. இதனால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... அதிக சிறப்பு அம்சங்களுடன் புதிய பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி!

இதனை மனதில் வைத்து, அதிக சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை மாருதி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. அண்மையில் இந்த எஸ்யூவியின் ஸ்பை படங்கள் கூட வெளியானது.

ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... அதிக சிறப்பு அம்சங்களுடன் புதிய பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி!

புதிய ஹெட்லைட்டுகள், L வடிவிலான எல்இடி பகல்வேளை விளக்குகள், புதிய வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் என டிசைன் மாற்றங்களை சந்தித்து உள்ளது. இதனால், தற்போதைய மாடலைவிட அதிக வசீகரமான மாடலாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... அதிக சிறப்பு அம்சங்களுடன் புதிய பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி!

உட்புறத்தில் பெரிய அளவில் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர்த்து, புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, கூடுதல் வசதிகளும் இடம்பெறும் என்று தெரிகிறது.

ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... அதிக சிறப்பு அம்சங்களுடன் புதிய பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி!

அதேநேரத்தில், புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... அதிக சிறப்பு அம்சங்களுடன் புதிய பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி!

தற்போது வழங்கப்படும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு மாற்றாக வரும் புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியும் இடம்பெற்றிருக்கும். இதுபோன்ற பல பிரிமீயம் அம்சங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... அதிக சிறப்பு அம்சங்களுடன் புதிய பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி!

இந்த நிலையில், புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி வரும் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. இதுகுறித்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

ரவுண்டு கட்டிய போட்டியாளர்கள்... அதிக சிறப்பு அம்சங்களுடன் புதிய பிரெஸ்ஸாவை களமிறக்கும் மாருதி!

புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட், ரெனோ கைகர், கியா சொனெட் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும். மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க், சரியான கட்டணங்களில் சர்வீஸ் மற்றும் தங்கு தடையற்ற உதிரிபாகங்கள் சப்ளை ஆகியவை மாருதி பிரெஸ்ஸா மார்க்கெட்டை தொடர்ந்து வலுவானதாக வைக்கும் என்று கூறலாம்.

Most Read Articles

English summary
Maruti Suzuki is planning to launch new Vitara Brezza facelift by mid of next year.
Story first published: Thursday, December 9, 2021, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X