யூஸ்டு கார்களுக்கும் மாத சந்தா திட்டம்... ஒர்க் அவுட் ஆகுமா?... ஆழ்ந்த யோசனையில் மாருதி சுஸுகி!

பயன்படுத்தப்பட்ட கார்களுக்கும் மாத சந்தா திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு மாருதி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 யூஸ்டு கார்களுக்கும் மாத சந்தா திட்டம்: மாருதியின் அதிரடி திட்டம்

கொரோனாவுக்கு பிந்தைய கார் வர்த்தகத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை தயாரிப்பு நிறுவனங்கள் செய்து வருகின்றன. பொருளாதார ரீதியில் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான வழியில் கார்களை வாங்கி பயன்படுத்துவதற்கான திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன.

 யூஸ்டு கார்களுக்கும் மாத சந்தா திட்டம்: மாருதியின் அதிரடி திட்டம்

அந்த வகையில், புதிய கார்களுக்கு மாத சந்தா திட்டங்களை பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்தன. இதன்படி, புதிய காரை வாங்குவதற்கான குறிப்பிட்ட தொகையை டவுன்பேமண்ட்டாக டெலுத்தும் அவசியமில்லை.

 யூஸ்டு கார்களுக்கும் மாத சந்தா திட்டம்: மாருதியின் அதிரடி திட்டம்

காருக்கான இன்ஸ்யூரன்ஸ், மாத பயன்பாட்டு கட்டணம், பராமரிப்பு செலவு ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் மாத சந்தாவில் கொடுக்கப்படுகிறது. இதனால், கார் வாங்கி பயன்படுத்தும்போது உள்ள பொருளாதார ரீதியிலான சிக்கல்களை வாடிக்கையாளர்கள் தவிர்க்க முடியும்.

 யூஸ்டு கார்களுக்கும் மாத சந்தா திட்டம்: மாருதியின் அதிரடி திட்டம்

குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு காரை நிறுவனத்திடமே ஒப்படைத்துவிட்டு, புதிய காரை மாத சந்தாவில் வாங்கி பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் அல்லது குறிப்பிட்ட தொகையை செலுத்தி சொந்தமாக்குவதற்கான வாய்ப்பையும் சில நிறுவனங்கள் வழங்குகின்றன.

 யூஸ்டு கார்களுக்கும் மாத சந்தா திட்டம்: மாருதியின் அதிரடி திட்டம்

இதனால், பெரும்பாலான கார் நிறுவனங்கள் தங்களது புதிய கார்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிவித்தன. அந்த வழியில், நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் இந்த திட்டத்தை கையில் எடுத்தது.

 யூஸ்டு கார்களுக்கும் மாத சந்தா திட்டம்: மாருதியின் அதிரடி திட்டம்

தனது பிரபலமான கார் மாடல்களுக்கு மாத சந்தா திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிகிறது. தற்போது சென்னை, பெங்களூர், ஆமதாபாத், ஹைதராபாத், மும்பை, புனே, டெல்லி, குர்கான் உள்ளிட்ட 8 நகரங்களில் மட்டும் புதிய கார்களுக்கான மாத சந்தா திட்டத்தை மாருதி வழங்கி வருகிறது.

 யூஸ்டு கார்களுக்கும் மாத சந்தா திட்டம்: மாருதியின் அதிரடி திட்டம்

இந்த மாத சந்தா திட்டத்தை நாட்டிலுள்ள 2,000 நகரங்களுக்கு விரிவுப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கும் மாத சந்தா திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து மாருதி சுஸுகி நிறுவனம் பரிசீலித்து வருவதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

 யூஸ்டு கார்களுக்கும் மாத சந்தா திட்டம்: மாருதியின் அதிரடி திட்டம்

புதிய கார்களுக்கான மாத சந்தா திட்டத்தைவிட கட்டணம் குறைவாக இருக்கும் என்பதால், இந்த திட்டத்திற்கு அதிக வரவேற்பு பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, மாருதியின் இந்த திட்டம் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles

English summary
Maruti Suzuki is planning to launch subscription scheme for used cars in India.
Story first published: Monday, January 11, 2021, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X