மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) இந்த செப்டம்பர் மாதத்தில் வாகன தயாரிப்பை சுமார் 60 சதவீதம் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் முன்பாக இதேபோன்று குறைக்கப்பட்டு இருந்தது. தற்போது குருக்ராம் மற்றும் மனேசார் தொழிற்சாலைகளில் வாகன தயாரிப்பு பணிகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

இம்முறை கிட்டத்தட்ட 60 சதவீதம் (பாதிக்கு மேல்) மாருதி சுஸுகி தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் குறைக்கப்பட உள்ளன. இந்த 60% தயாரிப்பு பணிகள் குறைக்கப்படுவதற்கு காரணம், குறைக்கடத்திகளுக்கு உலகளவில் ஏற்பட்டுவரும் தேவையால், இந்தியாவில் மின்னணு கூறுகளுக்கு உருவாகியுள்ள தேவையே ஆகும்.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

இதனால் மேற்கூறப்பட்ட இரு பகுதிகளில் உள்ள மாருதி சுஸுகி தொழிற்சாலை பணிகள் வழக்கத்தை காட்டிலும் 40 சதவீதமாக குறையவுள்ளன. அதாவது இந்த இந்தியாவின் நம்பர் 1 கார் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு பணிகள் இந்த செப்டம்பர் மாதத்தில் பாதிக்கு மேல் குறையவுள்ளது.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி வேகமெடுத்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 1,70,719 கார்களை மாருதி நிறுவனம் தயார் செய்திருந்தது. ஆனால் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் 1,33,520 கார்களையே இந்த நிறுவனம் தயாரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

இந்த வகையில் பார்த்தோமேயானால், மாருதி சுஸுகி வாகனங்களின் தயாரிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22 சதவீதம் குறைந்துள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் 60% குறைய போகிறது என்றால், மாருதி சுஸுகி நிறுவனம் இந்த மாதத்தில் தயாரிக்கவுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 68,000 என்ற அளவில் தான் வரும்.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

இது நிச்சயம் வரப்போகும் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மாருதி கார்களின் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, வாகனத்தை முன்பதிவு செய்து காத்திருப்பதற்கான கால அளவு அதிகரிப்பட உள்ளதால் வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த நாளில் தங்களது காரினை டெலிவிரி எடுக்க முடியாமல் போகலாம்.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

இவ்வளவு ஏன், சில கார்களின் சில வேரியண்ட்கள், சில டீலர்ஷிப் மையங்களில் கிடைக்காமல் கூட போகலாம். சிப்ஸ் (chips) பற்றாக்குறை தங்களது தயாரிப்பு பணிகளுக்கு தடையாக உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்த மாருதியின் முதன்மை நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தா இதுகுறித்து மேலும் பேசுகையில், குறைக்கடத்திகளின் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்திற்கும் நீடிக்கும்.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

இதனால் இப்பொழுதில் இருந்து விநியோகம் தேவையை விட பின்தங்கி இருக்கும் என்று தெரிகிறது என கூறினார். மாருதியின் தற்போதைய பங்கு நிலை 20 நாட்களில் உள்ளது மற்றும் சிறந்த சரக்கு நிலை 30 நாட்களுக்கு மேல் உள்ளது. குறைந்த குறைக்கடத்தி சில்லுகளை பயன்படுத்தும் ஒரு மாறுப்பாடான உற்பத்தி முறையை கொண்டுவருவதன் மூலமாகவே இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும் என்பதில் மாருதி சுஸுகி தெளிவாக உள்ளது.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

உதாரணத்திற்கு மாருதியின் மலிவான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றான ஆல்டோவின் டாப் ட்ரிம் நிலையாக விளங்கிய விஎக்ஸ்ஐ+ -இல் அதிகளவில் சிப்கள் பயன்படுத்தப்பட்டன. இதனாலேயே ஆல்டோவின் இந்த டாப் ட்ரிம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து விற்பனையில் இல்லை.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

ஆல்டோவை அதிக விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் விஎக்ஸ்ஐ+ ட்ரிம்-மிற்கு அடுத்ததாக உள்ள விஎக்ஸ்ஐ ட்ரிம்-ஐ வாங்க வைக்கப்படுகின்றனர். இதேபோன்று தான் டிசைரின் டாப் வேரியண்ட்களான இசட்.எக்ஸ்.ஐ+ மற்றும் இசட்.எக்ஸ்.ஐ-இன் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நிறுத்தி கொள்ளப்பட்டது.

மாதம் 1.5 லட்ச கார்களை விற்கும் நிறுவனத்திற்கே இந்த நிலைமையா!! வாகன தயாரிப்பை 60% குறைக்கும் மாருதி சுஸுகி

குறைக்கடத்திகளை விநியோகம் செய்யும் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்றான போஸ்ச் (Bosch) மலேசியாவில் உள்ள அதன் தொழிற்சாலையை மூடி இருந்தது. மாருதிக்கு குறைக்கடத்திகளை விநியோகம் செய்யும் முதன்மையான நிறுவனங்களுள் ஒன்றாக இது உள்ளது. மாருதி தலைவர் ஆர்சி பார்கவாவின் கருத்துப்படி, இந்த நெருக்கடி 2022 இறுதி வரை நீடிக்கும்.

Most Read Articles

English summary
Maruti Suzuki to slash output in September by 60% over chip shortage.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X